தன்முனைக் கவிதைகள் (கவிதை)
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழிJan 30, 2021
கொக்கு காத்திருக்கிறது/
மீனின் வரவிற்கு/
வாழ்வில் வாய்ப்புகள்/
வருவதும் அதுபோலவே…
அணில் ஒன்று/
கொய்யா மரத்தில்/
துள்ளி ஏறியது/
கனிகள் காணவில்லை..
காற்றில் கிளைகள்/
அசைந்தாடக் குஞ்சுகள்/
கத்தியது அச்சத்தில்/
நிலவு தாயானது…
பசித்த வயிறு/
ஒட்டிய உடல்/
திருமண வீட்டில்/
வீணாகும் உணவு..
புள்ளினம் பறந்தன/
இடைவிடா பயணம்/
இயற்கை சீற்றத்தில்/
பயணங்கள் முடிவதில்லை..
தூங்கிய கண்கள்/
கெண்டையின் சாயல்/
காதல் மீன் /
கண்ணீரில் நீந்துகிறது..
ஏதோ ஏக்கம்/
துவண்டது உள்ளம்/
மண்புழு ஊர்ந்து/
மறுகோடி அடைந்தது..
கவிதைகள் வாசிப்பு/
நிழலின் அணைப்பு/
விலங்கா உவமை/
அனுபவத் தேடல்..
மேகம் கறுத்தன/
காரணம் என்ன/
களவாடிய மின்னல்/
வெளி வந்ததாலோ..
மழைச் சாரல் /
தரை தொட்டதும்/
தடுமாறி தேங்கும்/
விலாசம் தொலைந்ததால்..
என்னைப் பார் /
யோகம் வரும் /
கழுதை மேய்ப்போர்/
ஆற்றின் ஓரம் ..
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தன்முனைக் கவிதைகள் (கவிதை)”