தமிழர் புத்தாண்டில் மகிழ்ச்சி பெருகட்டும் !! (கவிதை)
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழிJan 16, 2021
தமிழர் புத்தாண்டில் மகிழ்ச்சி பெருகட்டும் !!
காலைக் கதிரோன் சிரித்திட
வருகிறது கன்னல் பொங்கல்
தைத் திருநாள் மகிழ் பொங்கல்
துள்ளி வரும் தமிழர்
புத்தாண்டில் மகிழ்ச்சி பெருகட்டும்
தூது விடும் எழிலியும்
தாளத்தோடு புள்ளும் பறந்து
தகைமை கொடுக்கிறது புத்தொளி
நாளில் துவளா தமிழர்
புத்தாண்டில் மகிழ்ச்சி பெருகட்டும்
ஆடுகள காளைகளும் ஆடிவரும்
ஆநிரைகளை தாங்கி வருகிறது
ஆயிரம் விண்மீனும் தரையிறங்கி
ஆட்டமிட களிக்கும்; தமிழர்
புத்தாண்டில் மகிழ்ச்சி பெருகட்டும்
மீட்டெடுக்கும் உரிமை போரில்
மாற்றாரை துரத்தும் வேளையில்
மறத்தின் திண்மையுடன் தேர்ந்தெடுப்போம்
பைந்தமிழ் அரசினை; தமிழர்
புத்தாண்டில் மகிழ்ச்சி பெருகட்டும் !!
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழர் புத்தாண்டில் மகிழ்ச்சி பெருகட்டும் !! (கவிதை)”