மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ் நாட்டில் அடிக்கடி பரவும் காய்ச்சலைத் தடுப்பது எப்படி ? – பாகம்-2

ஆச்சாரி

Nov 15, 2013

டெங்குக் காய்ச்சலைப் போக்கும் சித்தர் மருந்து:

சமீபத்தில் பார்த்தோமென்றால் தமிழகத்தில், டெங்குவால் கிட்டத்தட்ட 60 நபர்களுக்கு மேலான குழந்தைகள், பெரியவர்கள் பாதிக்கப்பட்டு இறந்துபோகக்கூடிய சூழல் உண்டானது. நவீன மருத்துவ முறையில் டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்த வழியே இல்லாமல் திணறிக்கொண்டிருந்த பொழுது அரசுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அந்த நேரத்தில் சித்தர்கள் கூறிய பப்பாளி இலைச்சாற்றையும், நிலவேம்புக் குடிநீரையும் காய்ச்சலுக்கு கொடுத்தோமென்றால் இந்த நோயைக் கண்டிப்பாகக் குணப்படுத்தலாம் என்று பெரும்பாலான சித்தமருத்துவர்கள் அரசுக்குக் கோரிக்கையாக வைத்தப்போது அரசு செவிமடுத்து, அதை செயல்வழிப்படுத்தியது. இதைப் பிரதானமாகக் கொண்டு ஒரு பக்க விளம்பரம் எல்லா நாளிதழிலும் கொடுக்கப்பட்டது.

பாரம்பரிய மருத்துவமுறையில் சொல்லப்பட்டுள்ள பப்பாளி இலைச் சாற்றையும், நிலவேம்பு குடிநீரையும் அருந்துங்கள் என்று அரசு விளம்பரம் கொடுத்தபொழுது பொதுமக்களிடையே ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வு உண்டாகி அதனடிப்படையில் தமிழகம் முழுக்கப் பப்பாளி இலைச்சாற்றையும், நிலவேம்பு குடிநீரையும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு டெங்கு காய்ச்சல் முழுமையாக அடித்து ஒடுக்கப்பட்டது. மறுபடியும் இப்பொழுது டெங்கு தமிழகத்தில் பரவ ஆரம்பித்திருக்கிறது.

டெங்கு காய்ச்சல் மட்டுமல்லாமல் இப்பொழுது வருகின்ற காய்ச்சல் எப்படியென்றால், சிக்குன் குனியாவுடன், டெங்குவும் சேர்ந்து வரக்கூடிய பன்முகக் காய்ச்சலாக இப்பொழுது தமிழகம் முழுக்கப் பரவக்கூடிய சூழல் உண்டாகியிருக்கிறது. இந்த நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் ஒரு பிரிவாகவே செயல்பட்டுவந்த சித்தமருத்துவப் பிரிவில் நிலவேம்புக்குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இன்று நவீன மருத்துவர்களால் நிலவேம்புக்குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு கொடுப்பதும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தினமலர் போன்ற நாளிதழ்களில் செய்தியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்துள்ளது. இதை அரசு கவனிக்க வேண்டும்.

சித்தர் மருத்துவம் காக்க . . 

எப்பொழுதுமே மாற்றான்தாய் பிள்ளை மாதிரி பாரம்பரிய மருத்துவ முறைகளை அரசு நினைப்பது அரசுக்கு நல்லதல்ல. நமது அண்டை நாடான சீனாவில் கூட அவர்களுடைய பாரம்பரிய மருத்துவ முறைகளை ஒழுங்குமுறையால் கற்றபின் தான் நவீன மருத்துவ முறையை கற்கமுடியும் என்ற ஒரு சூழலை அந்த நாட்டு அரசு வைத்திருக்கிறது. அந்த நாட்டு அரசு தனது பாரம்பரிய மருத்துவமுறையையே முதன்மைபடுத்தி, எதிர்கால இளந்தலைமுறையினர் காக்கப்படவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அந்த நாடு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு இணையாக சொந்த மருத்துவத்தை வளர்க்கிறது.

ஆனால் இங்கு வெள்ளையர்கள் கொண்டுவந்த நவீன மருத்துவத்தை மட்டுமே நாம் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதாலும், நமது மருத்துவமுறைகளை நாம் பின்னுக்குத் தள்ளுவதாலும் தினமும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நோய்கள் வளர்ந்துகொண்டே வருகிறது. ஆக காய்ச்சல் போன்ற நோய்களுக்குக் கண்டிப்பாகப் பாரம்பரிய கூறுகளை அரசு ஆய்வுசெய்து காய்ச்சலைக் குணப்படுத்தக்கூடிய அளவிற்கு இருக்கக்கூடிய மருந்துகளை உருவாக்க வேண்டும்.

பக்க விளைவை உண்டாக்கும் நவீன மருந்து: 

இரத்த அழுத்தத்திற்காக இருக்கக்கூடிய சில மருந்துகள் கூட உடம்பில் அதிக உஷ்ணங்களைக் கொண்டுவந்து காய்ச்சலை உண்டு பண்ணும். அதேபோல் ஒருவருக்கு அடிபட்டு இரத்தம் உறையாத நிலையில் இருக்கும் பொழுதும் காய்ச்சல் வரும். அதேபோல் சிலருக்கு உடம்பினுள்ளேயே இரத்தம் உறைந்துபோகக்கூடிய தன்மை இருக்கிறது, அப்போதும் காய்ச்சல் வரக்கூடிய தன்மை உண்டு. காய்ச்சல் எதனால் வருகிறதென்றால், நோய் எதிர்ப்புசக்தி ஒரு மனிதனுக்கு குறைய ஆரம்பித்தால், தேவையில்லாத வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் உடம்பிற்குள் சென்று காய்ச்சலாக வெளிப்படும்.

அதனால் நல்ல உடல் திறனை மேம்படுத்தக்கூடிய உணவுகளை எடுக்கிற பொழுதுதான் கண்டிப்பாக காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியும். இன்று எவ்வளோ விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. நிறைய மருத்துவ ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகியிருந்தாலும் கூட அன்றைய காலத்தில் தமிழகத்தில் பார்த்தீர்கள் என்றால் மலேரியா, டைபாய்டு, காலரா, பேதி, விசபேதி, ஊழிபேதி, ஆழிபேதி, வாதசுரம், பித்தசுரம், கபசுரம், குளிர்சுரம் என்றெல்லாம் நிறைய காய்ச்சல் நோய்கள் வந்திருக்கிறது. அன்றைக்கெல்லாம் எப்படித் தங்களைத் தற்காத்துக் கொண்டார்கள் என்று பார்த்தோமென்றால், வேடிக்கையாக இருக்கும்.

காய்ச்சலைப் போக்கும் சித்தர் மருந்து:

அப்போது மலேரியா காய்ச்சல் ஊரெல்லாம் பரவியிருக்கும் நேரத்தில் அவர்கள் சாப்பிட்ட ஒரே மருந்து நிலவேம்புக்குடிநீர். இந்த நிலவேம்புக்குடிநீர் சாதாரணமாக ஒவ்வொரு கிராமங்களிலும் செய்யக்கூடிய ஒரு அற்புதமான மருந்து. இதில் என்ன இருக்கும் என்றால் நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்ச வேர், சந்தனம், கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம், பேய்புடல் இந்தப் பொருள்களை ஒன்றிரண்டாகச் சிதைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கையளவு இட்டு நன்கு கொதிக்க வைத்து, அதை 200 மில்லி கசாயமாகச் சுண்டவைத்து அதை வடிகட்டி காலை, இரவு என்று இரண்டு வேளை சாப்பிட்டு வந்தனர்.  இல்லை என்றால் காய்ச்சல் இருக்கும்பொழுது 30 மில்லி தொடர்ந்து 4 வேளை சாப்பிட்டுக் காய்ச்சலைத் தடுத்துக்  குணப்படுத்திக்கொண்டார்கள்.

இதுமட்டுமல்லாமல் காய்ச்சல் வந்த வீடுகளைச் சுற்றி பசுவின் சாணத்தைத் தெளித்தும், அதேபோல் நொச்சி இலை, நுணா பட்டை, வேப்பஇலை, ஆவார இலை இந்த இலைகளைக் கொதிக்க வைத்துக் கசாயமிட்டு, இந்தக் கசாயத்தை வீட்டை சுற்றிலும் தெளித்துக்கொள்வார்கள். வீட்டின் முன்னால் பசுவின் சாணத்தில் பூசணிப்பூவையும் குத்தி வைத்துவிடுவார்கள். அப்படி செய்தால் வீட்டினுள் காய்ச்சல் வராது. மற்றும் வீட்டின் முற்றத்தில் சிறிது வேப்பிலையை கட்டிவைத்திருப்பார்கள். இதெல்லாம் மூடநம்பிக்கையாக நாம் உணர்ந்துகொண்டிருந்தோம். இது மூடநம்பிக்கை அல்ல. இது அற்புதமான மருத்துவமுறை. வீட்டை சுற்றிலும் தெளிக்கின்ற அந்தக் கசாயம் ஒரு நோய் எதிர்ப்புசக்திக்காக வேலை செய்யக்கூடியது.

இன்று நாம் காய்ச்சலுக்கு எடுக்கக்கூடிய பாராசெட்டமல் மாத்திரை  கூட கல்லீரலைக் கெடுத்துவிடும். ஆனால் நொச்சி இலை, நுணா பட்டை, வேப்பஇலை, ஆவார இலை, பூசணிப்பூ, பசு சாணம் இவையனைத்தும் கிருமி நாசினியாக செயல்படுகிறது. இப்படியாக ஒரு ஊரையே காப்பாற்றக்கூடிய தன்மை இவற்றுக்கு உண்டு.

இன்று விதவிதமான காய்ச்சல் எல்லாம் உலகம் முழுக்க வந்துகொண்டிருக்கிறது. சிக்குன் குனியா, டெங்கு, மலேரியா, எலிகாய்ச்சல், அதேபோல் பன்முக காய்ச்சல் இவ்வாறாக நிறைய காய்ச்சல் வந்துகொண்டிருக்கிறது. எல்லாக் காய்ச்சலுக்கும் சித்த மருத்துவத்தில் ஒரே மருந்து பப்பாளி இலைச்சாறு, நிலவேம்புக் குடிநீர் மட்டுமே. இது இல்லாமல் சித்தமருத்துவத்தில் நிறைய மருந்துகள் இருக்கிறது. லிங்கத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யக்கூடிய லிங்கச்செந்தூரம். பிரமானந்த பைரவ மாத்திரை இவையெல்லாம் மிக அற்புதமான பலன் தரக்கூடியது. மருத்துவர் மேற்பார்வையில் சாப்பிடக்கூடிய ஒரு அற்புதமான மருந்து.

சுக்கு, மிளகு, திப்பிலியை அடிப்படையாக வைத்துச் செய்யக்கூடிய திரிகடுகு சூரணம், சீந்தில், வில்வம், துளசி அதேபோல் சித்தர்கள் சொன்ன அற்புதமான மருந்து கஸ்தூரி மாத்திரை. கோரோஜனை மாத்திரை, குங்குமப்பூ மாத்திரை, சாந்த சந்திரோதய மாத்திரை இந்த மாத்திரைகள் எல்லாமே காய்ச்சலுக்கு மிகஅற்புதமாகப் பலன் தரும். சித்தமருத்துவத்தில் சொல்லப்பட்ட வாதக்காய்ச்சல், பித்தக்காய்ச்சல், கபக்காய்ச்சல், முறைக்காய்ச்சல் எல்லா காய்ச்சலுக்குமே நூற்றுக்கணக்கான மருந்துகள் சித்தமருத்துவ ஏடுகளில் சித்தர்களால் சொல்லப்பட்டு உள்ளது.

காய்ச்சல் என்பது அரசுக்கே தலைவலி கொடுக்கக்கூடிய ஒரு விசயம், அதை அரசு அலசி ஆய்ந்து, தன்னார்வ அமைப்புகளோடு பேசி அடிப்படையாக மக்களுக்கு வரக்கூடிய காய்ச்சல் போன்ற நேரங்களில் அரசே முழுமையாக களமிறங்கி பாரம்பரிய மருத்துவமுறைகளை மக்களிடம் கொண்டுசெல்லவேண்டும். டெங்கு ஒன்றே இதற்கு உதாரணமாகச் சொல்லமுடியும். அந்த நேரத்தில் பொதுமக்களும் தங்களைத் தற்காத்துக்கொள்ள உணவுமுறைகளை மாற்றவேண்டும். அப்படி மாற்றுகின்றபொழுது நிறைய கஞ்சி அதாவது சிறுபருப்பு, நொய்யரிசி, சிறிது மிளகு, சீரகம், மஞ்சள் சேர்த்துக் கஞ்சியாகக் காய்ச்சி காய்ச்சல் உள்ள நேரத்தில் சாப்பிட வேண்டும்.

காய்ச்சலின் பொது உண்ணக்கூடிய, தவிர்க்கவேண்டிய உணவுகள்:

நமக்கு காய்ச்சல் உள்ள நேரத்தில் மந்தமான உணவுகளான தோசை, புளிசாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், போன்றவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். சூடான திரவநிலை ஆகாரத்தைத் தொடர்ந்து சாப்பிடுகிறபொழுது காய்ச்சலை விரட்ட முடியும். காய்ச்சல் ஓரளவிற்குத் தனிந்த பிறகு சித்தர்கள் கூறிய பஞ்சமுட்டிக் கஞ்சியை விடாமல் ஒருவாரம் சாப்பிடவேண்டும். கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, சிறுபருப்பு, பச்சரிசி, துவரம்பருப்பு இவற்றைச் சமஅளவு எடுத்து நன்றாகக் கொதிக்கவைத்தலே பஞ்சமுட்டிக்கஞ்சி ஆகும். இதை சாப்பிடும்பொழுது காய்ச்சலால் உண்டான நீர்சத்துக்குறைவை முழுமையாக சரிசெய்யக்கூடிய தன்மை இந்த பஞ்சமுட்டிக்கஞ்சிக்கு உண்டு. இதைத் தொடர்ந்து சாப்பிடுங்கள். உடம்பில் உள்ள சதைக்கட்டை அதிகப்படுத்தவும் இந்தக்கஞ்சி நல்ல பலன் கொடுக்கும். காய்ச்சலுக்குப்பின் உண்டாகக்கூடிய உடல்வலி, அசதி, சோர்வு இவற்றை சரி செய்யவும் இக்கஞ்சி மிகச்சிறந்த அற்புதமான மூலிகை மருந்தாகும். இக்கஞ்சி உடலுக்கு நல்ல பலன் தரக்கூடியது.

மலேரியா, டைபாய்டு போன்ற காய்ச்சல்கள் மாதக்கணக்கில் இருக்கும். அந்த மாதிரிக் காய்ச்சல் இருந்து, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் விடாமல் நெல்லிக்காய் லேகியம், தேத்தாங்கொட்டை லேகியம் இவ்விரண்டையும் தொடர்ந்து சாப்பிடச், சாப்பிடக் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.

எலும்பைப்பற்றிய காய்ச்சல் என்பது, எலும்பு தேய்ந்தோ, உருகியோ போயிருந்தால், எலும்பு தன் வன்மையை இழந்திருக்கும். சித்த மருத்துவத்தில் சொல்லக்கூடிய சிலாசத்து பஸ்பம், சங்கு பஸ்பம், முத்துசிற்பி பஸ்பம், பவள பஸ்பம், இவையனைத்தையும் மருத்துவர் மேற்பார்வையில் சூடான பாலில் தொடர்ந்து சாப்பிடும்பொழுது அற்புதமான பலன் கிடைக்கும். கபம் சார்ந்த காய்ச்சலாக இருந்தால் கண்டிப்பாகத் திரிகடுகு சூரணம், தாலிசாதிசூரணம், அம்கராசூரணம் இவைகள் எல்லாம் கடைகளில் கிடைக்கும் அதையும் வாங்கி தொடர்ந்து பயன்படுத்தலாம்.

அதனால் காய்ச்சல் என்பது ஒரு குறைபாடே ஒழிய நோயல்ல. அதை முழுமையாக நமது உணவுமுறை பழக்கத்தாலும், உடலோம்பல் மூலமும் மிகச் சாதாரணமாக நம்மால் தீர்க்கமுடியும். ஆக காய்ச்சலுக்காகப் பயந்து கண்டகண்ட மருந்துகளை  எடுப்பதை விட்டு நமது பாட்டி வைத்தியம் என்று சொல்லுவார்கள் வீடுகளிலேயே செய்யக்கூடிய ஒரு சுக்குக் காபியைக்கூட தொடர்ந்து எடுக்கும்பொழுது நல்ல பலன் கிடைக்கும். காய்ச்சல் இருக்கும் நேரத்தில் வெள்ளைநிறச் (சீனி) சக்கரையை முழுமையாகத் தவிர்த்து விடுங்கள். பனை வெல்லம், பனச்(சீனி)சக்கரை, நாட்டு வெல்லம் போன்றவற்றை வைத்துக் கசாயம் செய்து தொடர்ந்து சாப்பிட்டுவர காய்ச்சலை முழுமையாக விரட்டமுடியும்.

அதனால் டெங்குக் காய்ச்சலிலிருந்து சிக்குன்குனியா, மலேரியா போன்ற எந்தக் காய்ச்சலாக இருந்தாலும் சித்தமருத்துவத்தில் கூறப்பட்ட, நான் கூறிய மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுங்கள், நல்ல பலன் கிடைக்கும். அடிக்கடி நம்மை மிரட்டக்கூடிய அளவிற்கு காய்ச்சல் வந்துகொண்டே தான் இருக்கும். டெங்குவிற்கு முன்னால் சிக்குன்குனியா தமிழகத்தையே ஆட்டிபடைத்த ஒரு காலகட்டம் இருந்தது. சிக்குன் குனியா காய்ச்சல் தமிழகம் முழுவதும் பரவியிருந்த பொழுது தன்னிறைவு பெறாத சில நவீனமுறை மருத்துவர்கள் கூட தன்னிறைவு பெற்றுவிட்டார்கள். அந்த அளவிற்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துகிறோம் என்று சொல்லி ஒரு வணிகச் சந்தை உருவாகி இருந்தது.

நான் சொல்லக்கூடிய ஒரே ஒரு விசயம், மருத்துவத்துறை என்பது வணிகச்சந்தையாக இருக்கிற வரை அடித்தட்டு மக்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டேதான் இருப்பார்கள். மருத்துவத்துறை எப்போது மனிதனுக்கு உரிய, சுயநலமில்லாத சேவைத்துறையாக எப்போது மாறுகிறதோ அப்பொழுதுதான் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை நாம் படைக்கமுடியும்.

சிக்குன் குனியாவால் தமிழகம் பட்டபாடு:

சிக்குன் குனியா காய்ச்சலானது தமிழ் நாட்டைப் பீடித்திருந்த பொழுது நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி என்னவென்றால், சிக்குன் குனியா நோய் சிக்கனால்தான் வருகிறது என்று சாதாரணப் பாமர மக்கள் நம்ப ஆரம்பித்தார்கள். அப்படி நம்புகிறபொழுது யாருமே இந்தப் பிராய்லர் கோழியை வாங்கத் தயாராக இல்லை. அப்பொழுது ஒரு கிலோ கறிக்கு, உயிருடன் இருக்கும் ஒரு கோழி இலவசம் என்று நிறைய கடைகளிலே எழுதி வைத்து வணிகம் செய்யக்கூடிய அளவுக்கு இறைச்சிக் கடைகள் தள்ளப்பட்டன.

விடுமுறை நாட்களில் வாரம் முழுவதும் உழைக்கக்கூடிய ஒரு சராசரி மனிதன் ஞாயிற்றுக்கிழமை அன்று நிறையக் கறி எடுத்துத் தன்னோடு குடும்பத்தோடு சாப்பிடவேண்டும் என்று நினைக்கிறான். இக்கோழிக்கறியின்  விலையோ குறைவாக உள்ளது. இந்தப் பிராய்லர் கோழிக் கறியை வீட்டில் சமைத்து காலை, மதியம், இரவு என்று மூன்று நேரமும் இக்கறிக் குழம்பை   சோற்றுடன் நிறைய எடுத்துக்கொள்கின்றனர்.

இப்படி மூன்று வேளையும் ஒரே கறியை சுட வைத்துச் சாப்பிடுவதால்,  இரவு நேரங்களில் பலருக்கும் செரிக்காமல் அந்த உணவே நஞ்சாக (food poition) மாறுகிறது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு கொடுக்கக்கூடிய சில மருந்துகள் சில நேரங்களில் குணப்படுத்துவதற்குப்  பதிலாக சிறுநீரகத்தையே கெடுக்கக்கூடிய ஒரு சூழல் உருவாகிறது. ஆக இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆகவே அந்த நேரத்தில் கோழிக்கறியைக்  குறைவாகச் சாப்பிட்ட மக்களுக்கு அந்தச் சிக்குன் குனியா ஓரளவிற்கு கட்டுப்பட்டது. காரணம் என்னவென்றால் அவர்களுடைய உணவுமுறை மாறியதால் சிக்குன் குனியாவிற்கும், சிக்கனுக்கும் சம்மந்தம் இல்லாவிட்டாலும் கூட சிக்கன் சாப்பிடக்கூடாது என்று முடிவு எடுத்தபொழுது அந்த சிக்குன் குனியா ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தது. ஆக உணவுமுறையை ஒழுங்குபண்ணுங்கள். நிறைய கீரைகள் சாப்பிடுங்கள், காய்கறிகளை அரைப்பதத்திற்கு வேகவைத்து தொடர்ந்து சாப்பிடுங்கள். சிறுதானியங்கள் என்று சொல்லக்கூடிய வரகரிசி, திணையரிசி, குதிரைவாலி, சாமை இவற்றையெல்லாம் கஞ்சி செய்து சாப்பிடுங்கள்.

உடலில் காய்ச்சல் இருக்கும் பொழுது சோம்பு, சுக்கு, காஞ்ச திராட்சை இம்மூன்றையும் கசாயம் செய்து தொடர்ந்து சாப்பிடுங்கள். இவைகள் எல்லாம் ஓரளவிற்குக் காய்ச்சலை விரட்டக்கூடிய ஒரு அற்புதமான மருந்து. அதே மாதிரி காய்ச்சல் என்றால், சுயமாக நவீன மருந்து எடுக்கக்கூடிய தன்மையை முழுவதுமாக மாற்றுங்கள். முடிந்தால் மருத்துவரிடமே ஆலோசனை பெறுங்கள். இல்லை என்றால் உங்கள் வீட்டிலேயே கசாயம் (நிலவேம்புகசாயம்) தயார் செய்து சாப்பிடலாம். மேலும்  நாம் சொல்லக்கூடிய கஞ்சி போன்ற உணவுகள், மெதுவான இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுங்கள். நம் உடம்பிற்கு வருவதை நாம்தான் பார்த்துக்கொள்ளவேண்டும்.

நமக்கு நாமே விழிப்புணர்வு அடையாதவரை, நாம் இங்கு இருக்கக்கூடிய அரசுகளைச் சாடி ஒரு பலனும் இல்லை. தொடர்ந்து காய்ச்சலைக் முழுமையாகக் கட்டுப்படுத்த நாம் விழிப்புணர்வு பெறுவோம். சித்தர்கள் கூறிய அனைத்து உணவுகளையும், மருந்துகளையும் கடைபிடித்து, நல்ல  ஆரோக்கியமான உடலமைப்பைப் பெறுவோம் என்று உறுதிபூண்டு உங்களுடன் நானும் சேர்ந்து விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா

எண்: 155, 94  வது தெரு,

15 வது செக்டார், கே.கே.நகர்,

சென்னை – 78

அலை பேசி: 98840 76667

If the answer is yes’ to all the above where can i pay someone to write my essay within www.essaydragon.com/ you have completed your essay

Some of these customers dont get that See Student Supporting in the SiD ar on BREO for forethought as to how to utilize for mitigating portion and the outlines for these to be granted edubirdie.com I needful a rattling elaborate story search composition and I already had my ideas on what to write, but didnt let the time to ended it. Moreover they are all which was the ware, presumptively, of the unheard-of freedom and surety which insupportable


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ் நாட்டில் அடிக்கடி பரவும் காய்ச்சலைத் தடுப்பது எப்படி ? – பாகம்-2”

அதிகம் படித்தது