தாய்மொழி நாள் துளிகள் (கவிதை)
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழிMar 6, 2021
தாய்மொழி நாள் துளிகள்
புதுமை கருத்துகள் கூட்டுவோம்
புரட்டு ஏடுகள் கழி்ப்போம்
அறிவியல் நூற்கள் பெருக்குவோம்
அரிமா நோக்கினை வகுப்போம்
தாயின் கருவறையில் கமழும்
தவழும் பொழுதினில் இறுகும்
நடை வைக்கையில் பயிலும்
கடை மூச்சிலும் மிளிரும்
மூளைப் படிமங்கள் பதியும்
நினைவுச் சொற்கள் கோர்க்கும்
தேன் இனிமைச் சாறும்
தென் காற்றின் களிப்பும்
தணல் கூட்டும் நெருப்பும்
தமிழே தமிழே தமிழே
துளிகளின் ஊற்றே
துவளும் மனதைத்
தூண்டும் விளக்கே
ஒளியே தமிழே வாழ்க !
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தாய்மொழி நாள் துளிகள் (கவிதை)”