மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நேர்காணல் – திரு கார்த்திகேயன்

ஆச்சாரி

May 16, 2011


அறம் அறக்கட்டளை நடத்தி வரும் திரு கார்த்திகேயன் அவர்களிடம் ஒரு நேர்காணல்

வணக்கம், உங்கள் அறக்கட்டளை நோக்கம், பணிகள் பற்றி சொல்லுங்கள்?
வணக்கம், எங்கள் அறக்கட்டளையின் பெயர் அறம் அறக்கட்டளை, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் செயல்பட்டு வருகிறோம். எங்களின் முக்கிய நோக்கமாக இருப்பது கல்வி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் வறுமை ஒழிப்பு. ஏழை குடும்ப குழந்தைகள் பெற்றோரை சிறு வயதில் இழக்க நேர்ந்தால் பணம் சம்பாதிக்க குழந்தை தொழிலாளர் ஆக மாறுகிறார்கள், இவர்களே வளர்ந்த பிறகு சமூக விரோதிகளாக உருவெடுக்கிறார்கள். இது போன்ற சிறார்களை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி புகட்டி நல்வழி காட்டி வருகிறோம். இது தவிர வசதியற்ற மகளிருக்கு தொழிற்பயிற்சி, கல்லூரி கல்வி போன்றவற்றை இலவசமாக வழங்கி வருகிறோம்.

எந்த வயது குழந்தைகளை,எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறீர்கள்? கல்வி எந்த வழியில் போதிக்கிறீர்கள்?

ஒன்று முதல் பத்து வகுப்புகள் வரை படிக்கும் குழந்தைகளில் பெற்றோர்( ஒருவர் அல்லது இருவரையும்) இழந்த வசதியற்ற ஏழை எளியோரை தேர்ந்தெடுக்கிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் அந்த ஊர் அரசாங்க பள்ளிகளில்,மாலை நேரத்தில் இலவச ட்யூஷன் நிலையங்களை நடத்தி வருகிறோம். வகுப்புக்கு 73-80 மாணவர்களை கொண்ட இந்த நிலையங்களில் அந்தந்த கிராமங்களை சேர்ந்த இளம்பெண்களை ஆசிரியர்களாக நியமித்து உள்ளோம்.இவர்களில் பெரும்பாலோனோர் எங்கள் மூலமாக இலவசமாக கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வருகின்றனர், இவர்களுக்கு சிறிய அளவில் ஊதியமும் தருகிறோம், இதன் மூலம் மாணவர்களும், இளம்பெண்களும் ஒரே நேரத்தில் கல்வி உதவி பெறுகின்றனர், பெண்கள் ஆசிரிய பயிற்சியும், ஊதியமும் கூடுதலாக பெற்றுவிடுகின்றனர். இன்றைய தேதியில் 35 ட்யூஷன் நிலையங்களை நடத்தி வருகிறோம். இவை மட்டுமின்றி தையல் பயிற்சியும், கணினி பயிற்சி, அழகு நிலைய பயிற்சியும் பெண்களுக்கு அளித்து வருகிறோம்.

சேவைப்பணியில் என்ன மாதிரியான பிரசினைகளை எதிர்கொள்கிறீர்கள்?

முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் மழை பெய்யும் நாட்களில் மாணவர் வருகை குறைந்து விடும், சில சமயங்களில் ஆசிரியர் பணி செய்யும் பெண்கள் திருமணம் போன்ற காரணங்களினால் நின்று விடுவார்கள், மாற்று ஆட்களை தேட வேண்டி இருக்கும், சிறிய சச்சரவுகளை சமாளிக்க வேண்டி இருக்கும்.

சேவைக்கான பணம் எப்படி கிடைக்கிறது? அரசிடமிருந்து உதவிகள் கிடைகிறதா?

நான் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன், என்னுடைய மாத சம்பளம் பெரும்பகுதி செலவாகும், மேலும் நல்ல உள்ளம் கொண்ட பலர் மாதந்தோறும் பண உதவி செய்கின்றனர். அரசிடம் நாங்கள் பணம் வேண்டி அணுகுவது இல்லை.

சமுதாயத்தில் ஏழை மக்களின் நிலை எப்படி இருக்கிறது?

ஏழை மக்களின் உழைப்பை மதுவானது பெருமளவில் சுரண்டி விடுகிறது, கூலி வேலை செய்யும் ஆண்கள் பலர் வருமானத்தில் பெரும்பகுதியை மதுவுக்கு செலவழித்து அழிக்கின்றனர். நிறைய மாற்றங்கள் ஏற்படவேண்டும், மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ளவும், நன்கொடைகள் அளிக்கவும் www.aramtrust.org இணையதளத்தை பாருங்கள்.

Individual pages are not referenced, but page ranges are given for the entire length of articles eduessayhelper.org/ in scholarly journals and chapters in multi-authored volumes

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “நேர்காணல் – திரு கார்த்திகேயன்”
  1. ராசா says:

    நல்லார் ஒருவர் ஊல்லாரே அவர்பொருட்டு
    எல்லோர்கும் பெய்யும் மழை!

அதிகம் படித்தது