மீண்டும் வாரும் புத்த பிரானே!(கவிதை)
ராஜ் குணநாயகம்Nov 5, 2016
அது சுயம்பு லிங்கம்
கும்பிட யாருமேயில்லாத ஊரில்
இரவோடு இரவாக
சிறு மலை உச்சியை கண்டாலும்
வந்து உட்காரந்த்திருக்கும்
புத்த பிரானின் சிலைகள்
தானாய் தோன்றியவையோ?
புத்த பிரானே!
எம் தேசத்தில்
மீண்டும் அவதரித்து வருவாயோ
உன் பெயரால் நடந்தேறும்
அதர்மங்களுக்கு பதில் தருவாயோ……..
ஓர் எச்சரிக்கை பிரானே!
நீவிர் இங்கு வந்து
மீண்டும் தர்மம் போதித்தால்
உம் வாய்க்கு பூட்டுப்போட்டு
மௌனமாக்கி
கண்களையும் மூடச்செய்து
சிலையாக்கி
ஏதாவதோர் மலைக்குன்றொன்றில்
அமைதியாய் உட்கார வைத்துவிடுவார்கள்
அமைதி குலைந்திட
இந்த போலி
மகிந்தர்களும்
சங்கமித்தைகளும்
பல சேனாக்களும்!
இருந்த போதும்
எம் தேசத்தில்
மீண்டும் அவதரித்து வாரும் புத்த பிரானே!
அதர்மங்கள் அழியட்டும்………………..!
-ஈழன்-
ராஜ் குணநாயகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மீண்டும் வாரும் புத்த பிரானே!(கவிதை)”