மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஸ்ரீலங்காவில் பௌத்தம் (கவிதை)

ராஜ் குணநாயகம்

Feb 11, 2023

siragu buddha

துறவின் அறம் அறியாது

துறவிகளான வேடதாரிகளே!

இன்றைய இரவே

இலங்கைத்தீவெங்கும் போய்

புத்தர் சிலைகளை புதையுங்கள்

நாளை வந்து

புத்தர் சுயம்பாய் தோன்றிவிட்டதாய் சொல்லி

ஆதிதொட்டு

காலாகாலமாய் அங்கெல்லாம் வாழ்ந்துவரும்

எங்களை அழித்து

எங்கள் பிணங்களின் மேலே

பௌத்த தூபிகளை கட்டுங்கள்!

சிவனொளிபாத மலையின் உச்சத்தில் ஏறி

மீண்டுமொருமுறை

இது

“புத்த தேசம்” என்று

உலகறிய உரக்கக்கத்துங்கள்!

புத்தரை வேண்டி

நாடெங்கும் பிரித் ஓதுங்கள்!

சர்வதேசத்தின் காலடியில்

திருவோட்டோடு தவம் கிடக்கும்

உங்கள் பொருளாதாரம்

பில்லியன் டொலர்களால் நிறையட்டும்!

இனி நாட்டில் காட்டாட்சியையும்

நீங்களே நடாத்துங்கள்!

இது உங்கள் “புத்த தேசம்”!

இந்த கேள்விக்கு மட்டும்

பதில் சொல்லுங்கள்;

நான் பிறந்த தேசம்

எனக்கே சொந்தமில்லாதபோது

எங்கோ பிறந்த புத்தருக்கு

எப்படி

இத்தேசம் சொந்தமானதோ?

கௌதம புத்தபிரானோ முற்றும் துறந்தவர்.

-    ஈழன்


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஸ்ரீலங்காவில் பௌத்தம் (கவிதை)”

அதிகம் படித்தது