மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அணு உலைக்கெதிரான பட்டினிப் போராட்டம்

ஆச்சாரி

Jan 1, 2012

கூடன் குளம் அணு உலைக்கெதிரான பட்டினிப் போராட்டம் சென்னையில் நிகழ்ந்தது. தமிழ் அமைப்புகள் பலவும் ஜனநாயக அமைப்புகள் சிலவும் தங்களுக்குள்ளான சிற்சில உள்முரண்களைக் கடந்து ஒன்றாக ஒருங்கிணைந்த இந்த நிகழ்வு மிக வீரியமாகத் தென்பட்டது. அணு சக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தினர் இதனை ஒருங்கிணைத்திருந்தனர்.

போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்,   முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்ருட்டி வேல்முருகன்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் , தமிழ்நாடு வணிகர் கூட்டமைப்பின் தலைவர் த.வெள்ளையன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர் மேலும் பல மீனவ அமைப்பைச் சார்ந்த பெண் தோழர்கள் கலந்து கொண்டு தங்கள் குமுறலைக் காட்டினர்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக இந்திய அரசின் போலித்தனங்களை எள்ளும் நாடகம் இருந்தது.

பல தலைவர்கள் ஒருங்கிணைந்த நிகழ்வாதலால் சில ஊடகங்களின் இருட்டடிப்பையும் மீறி , மக்களின் கவனிப்பைப் பெற்றது இந்நிகழ்வு. சென்னையில் ஆர்ப்பாட்டங்களுக்கு ஒதுக்கப்படும் அண்ணா சாலை அருகே இருக்கும் அந்த வழமையான கூவம் கரையோரத்தில்தான் இந்த நிகழ்வும் நடந்தது. ஆனால் தலைவர்களும் உணர்வாளர்களும் இந்த நிகழ்வை பிரம்மாண்டப் படுத்தினர்.  குறிப்பாக தவ்கீத் ஜமாத் அமைப்பின் மாநில தலைவர் ஜெய்னுலாபுதீன் ஆற்றிய உரை மிக நயமாகவும் வீரியமாகவும் இருந்தது. முக்கிய தலைவர்கள் பங்கெடுத்தது மிக நம்பிக்கையாகவும் மகிழ்வாகவும் இருப்பதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தெரிவித்தார்.

போராட்ட நிகழ்வின் முத்தாய்ப்பாக கூவம் கரையிலிருந்து வங்கக் கரை நோக்கி பேரணி ஒன்று நிழந்தது. கடும் பரப்புரை பணியால் பொதுமக்கள் பலரும் பங்கு பெற்ற பேரணியாக இது அமைந்தது. இதுவரை அரசியல் மயப்படுத்தப்படாத மக்கள் ஓரளவு அரசியல் புரிதல் பெற்றனர் எனலாம். பலர் காலை முதல் பட்டினியாய் இருந்த போதிலும் அதீத உற்சாகத்தோடு பேரணியில் கலந்து கொண்டனர்.

Also like tinder, http://www.besttrackingapps.com/ hinge is a free download rated for mature audiences, 17 and above

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “அணு உலைக்கெதிரான பட்டினிப் போராட்டம்”
  1. Karthikeyan Thangamuthu says:

    போலித்தனக்களை ..?

  2. kasi visvanathan says:

    திரு.உதயகுமார், தவ்கீத் ஜமாத் அமைப்பின் மாநில தலைவர் ஜெய்னுலாபுதீன், நம் தலைவர் திரு.வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்ருட்டி வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் , தமிழ்நாடு வணிகர் கூட்டமைப்பின் தலைவர் த.வெள்ளையன், வாழ்வின் அனைத்தி கொடுமைகளையும் சந்தித்து விட்ட எங்கள் மீனவ குடும்பத்தினர், கலை நிகழ்ச்சி நடத்திய இளம் தலை முறையினர் என அனைவருக்கும் நன்றி. உண்மைகளை மூடி மறைத்து அலூக்காஸ் நிறுவனத்திற்கு சோரம் போகும் அருமை தமிழக செய்தி ஊடகங்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக. கலந்து கொண்டு மனதால் மனிதர்களாய் அங்கு பட்டினி கிடந்த தமிழ் உறவுகளே, நம் எதிர் கால சந்ததிக்கு ஒளி தந்து நின்றமைக்கும் நன்றி. நன்றி சொல்லாமல் யாரும் விட்டுப்போய் இருந்தாலும் மனமார நன்றிகள் உரித்தாகுக. மானாட மயிலாட பார்த்திருக்கும் தமிழ் ஹிந்தியர்களுக்கும் நன்றி.

அதிகம் படித்தது