மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அணு உலை ஆபத்தா? ஆதாயமா? (கட்டுரை)

ஆச்சாரி

Jun 1, 2013

அணு உலை சரியா? தவறா? என்ற இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டுமானால் அணு உலை பற்றிய உண்மைகளை அறிந்திருப்பது மிகவும் அவசியமானது. அணு உலை குறித்த செய்திகளை அனைவரும் அறியச் செய்வதும் அவசியமானதாகும். அணு உலையை எதிர்க்கும் ஒருவர், பின்னாளில் அணு உலையை ஆதரிப்பவராக மாறி விடுவதில்லை. அதே நேரம் நேற்றுவரை அணு உலையை ஆதரித்துக் கொண்டிருந்த பலர் பிறகு அணு உலையை எதிர்ப்பவராக மாறிவிடுகின்றனர். இதற்குக் காரணம் அணு உலை குறித்த பல செய்திகளை அறிந்து கொள்வதில் பலருக்கும் ஏற்படும் கால தாமதமே.
60 ஆண்டுக்கு முன், அணு ஆற்றலை வளர்ச்சிக்கு (மின்சாரத்திற்கு) பயன்படுத்தலாம் என்ற பொருளில் அவற்றை ஆதரித்த உலக மக்கள், இன்று அவற்றைக் கடுமையாக எதிர்க்கின்றனர். அணு உலை பாதிப்புகளை அனுபவித்தவர்களும், அது குறித்த செய்திகளை முழுமையாக அறிந்தவர்களும் அணு உலைகளைப்பற்றி புரிந்து கொண்டுள்ளனர். மூன்று மைல் தீவு, செர்நோபில், புகுசிமா ஆகிய அணு உலை விபத்துக்கள் உலக மக்களின் அணு உலை ஆதரவைத்  தலைகீழாகப் புரட்டிப் போட்டு, அணு உலை பேரிடர் குறித்து அவர்களுக்குப் பாடம் கற்றுக்கொடுத்தன. புகுசிமாவிற்குப் பின் தமது எதிர்கால அணு உலைத் திட்டங்களை அனைத்து உலக நாடுகளும் கைவிட்டு விட்டன, இந்தியாவையும் சீனாவையும் தவிர. இந்தியாவில் அறிவியலாளர்கள், அரசு அதிகாரிகள், அரசு, அயல்நாட்டு வியாபாரிகள் என இந்த 4 ‘அ’னா வினரும் அணு உலையை ஆதரித்து, செய்தி ஊடகங்களைப் பயன்படுத்தி தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் பிரச்சாரம் எந்த அளவிற்கு நம்பிக்கைக்குரியதாக இருக்க முடியும்?
முதலில் அறிவியலாளர்களை எடுத்துக் கொள்வோம். தம் வாழ்நாளில் ஒரு உண்மையைக் கண்டுபிடித்து அதை இந்த உலகத்திற்குச் சொல்லிவிட வேண்டும் என்பதற்காக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் அல்ல இன்றைய அறிவியலாளர்கள். மாறாக இவர்கள் எதை ஆராய வேண்டும் என இவர்களுக்கு வேலை தருபவரே முடிவு செய்கிறார். அதே போல தாம் கண்டறிந்த உண்மைகளை மாற்றிச் சொல்ல முடியாது என மறுத்த கலிலியோ போன்றவர்கள் இல்லை, இன்றைய அறிவியலாளர்கள். மாறாக இவர்கள் வெளியில் என்ன சொல்ல வேண்டும் என்பதையும் இவர்களுக்கு வேலை கொடுப்பவரே சொல்லிக்கொடுக்கிறார். இது அணு உலை சார்ந்த அறிவியலாளர்கள் அனைவருக்கும் நூற்றுக்கு நூறு பொருந்தும். எனவே நாம் இத்தகைய விஞ்ஞானிகளின் வாயிலாக அணு உலை உண்மைகளை அறியமுடியாது.
மேலும், அணு உலை ஆராய்ச்சியில் மக்களின் பாதுகாப்பைச் சிந்தித்து ஆராயும் பல அறிவியலாளர்கள், அணு உலையை எதிர்ப்பவர்களாக மாறி இருக்கின்றனர். எனவே மக்களின் பாதுகாப்பை விட, தனது சம்பளம் பெரிது எனப் பணியாற்றுபவர்களே, அணு உலை நிறுவனத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளாக இருக்கமுடியும். அணு உலை பாதுகாப்பானது என்று இவர்கள் கூறும் கருத்துக்கள் இவர்களின் நிறுவனம் சாராத இவர்களின் சொந்தக் கருத்துக்களாக எப்படி இருக்க முடியும்? இந்த மனிதர்கள் தரும் நம்பிக்கைகளுக்காக, நமது மண்ணையும், காற்றையும், கடலையும், மக்களையும் பணயம் வைக்க எப்படி நாம் துணிய முடியும்? விபத்துக்கள் இல்லாத அணு உலைகள் 50 கி.மீ சுற்றுப்புறத்தை அழிக்கிறது. விபத்து நடந்த அணு உலை 1000கி.மீ சுற்றுப்புறத்தைப் பாதிக்கிறது.
இரண்டாவதாக அரசு அதிகாரிகள். இவர்கள் அனைவரும் ஓய்வு பெற்ற பிறகு தான் சொந்தக்கருத்தைச் சொல்பவர்கள். அதுவரை அரசு என்ன சொல்கிறதோ அதை அப்படியே சொல்லியாக வேண்டும். உதாரணத்திற்கு இன்று அரசின் கொள்கை அணு உலை எதிர்ப்பு எனில், இதே அதிகாரிகள் அணு உலைகளின் ஆபத்துக்கள் குறித்து மக்களிடம் விளக்குவார்கள். எனவே இவர்களின் அணு உலை பற்றிய பேச்சுக்களை அவர்களுக்குக் கட்டளை இடுவோரின் கருத்துக்களை கடமை மாறாமல் சொல்கிறார்கள் என்பதாகவே நாம் எடுத்துக் கொள்ள முடியும், அணுசக்தி துறை அதிகாரிகள் முதல், மாவட்ட ஆட்சியாளர்கள் வரை இதே நிலைதான். எனவே இவர்களின் பேச்சுக்கள் வாயிலாக நாம் உண்மைகளை அரிய வாய்ப்பில்லை.
மூன்றாவதாக அரசு. விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மின்சாரம், மருத்துவம், சாலை வசதி, குடிநீர், போன்ற அடிப்படைத் தேவைகள் கூடச்  செய்து கொடுக்கப்படாமல் பெரும்பான்மை இந்திய மக்கள் இந்திய அரசால் கைவிடப்பட்டிருக்கிறார்கள். கடந்த காலங்களில் இந்திய அரசு ஒரு மக்கள் நல அரசாக இருந்து வரவில்லை என்பதற்கு இதுவே சாட்சி. இந்தியா ஒரு வல்லரசாக வளர வேண்டும் என்பதே இந்திய அரசின் நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது. இந்திய மக்களின் வாழ்க்கைத்தரம் வல்லரசு நாடுகளின் வாழ்க்கைத்தரத்திற்கு உயர வேண்டும் என்பதல்ல இதன் பொருள். மாறாக இந்திய அரசின் இராணுவ பலம் வல்லரசு நாடுகள் போல் ஆக வேண்டும் என்பதே. அணு ஆயுதங்கள் இல்லாமல் இராணுவ வல்லரசாக முடியாது எனக் கருதி இந்தியா ஆரம்பம் முதலே அணு ஆராய்ச்சி, அணு உலை, அணு குண்டு சோதனை, அணு ஆயுத உற்பத்தி, அணு ஆயுதப் போட்டி என்ற வரிசையில் கவனம் செலுத்தி வருகிறது. தினமணியில் வெளிவந்த ஒரு கட்டுரையில், சீனாவும், பாகிஸ்தானும் சேர்ந்து நம்மை விட 110 அணு குண்டுகள் அதிகமாக வைத்திருக்கின்றன. எனவே நாம் அவற்றை எட்டிப்பிடிக்க நிறைய அணு குண்டுகள் செய்ய வேண்டும். அணுமின் நிலையங்கள் அணு குண்டுகள் செய்வதற்குத்தான் என்று சொல்ல அரசு தயங்கக்கூடாது என்று எழுதுகிறார் கட்டுரையாளர்கள் எஸ்.குருமூர்த்தி. அணு ஆயுதங்களுக்குத் தேவையான அணு உலை போன்ற விசயங்களில், இந்திய மக்கள் தங்கள் பாதுகாப்பைப் பெரிதுபடுத்தாமல் விட்டுத்தந்தால் தான் எதிரிகளிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கும் அணு ஆயுதங்களைச் செய்ய முடியும். அதாவது அணு உலைகளிடமிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நினைத்தால், எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இயலாமல் போய் விடும் என்பதாகத்தான் இவர் கூறுவதை நாம் கருத முடியும்.
இந்திய அரசின் அணுக்கொள்கை இந்திய சூழலுக்குச் சற்றும் பொருத்தமற்றது. இங்கு அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியம் இல்லை. அணு உலைகளை அமைப்பதற்குத் தேவையான மக்கள் வாழாத சுற்றுப்புறங்கள் இல்லை. (நாடு முழுவதும் மக்கள் நெருக்கமாக வாழ்கிறார்கள். கல்பாக்கத்திலிருந்து 80 கி.மீ. தூரமுள்ள சென்னையில் 1 கோடிப்பேர் வாழ்கிறார்கள். கூடங்குளத்தில் இருந்து 200 கி.மீட்டர் சுற்றுப்புறத்தில் 3 கோடிப்பேர் வாழ்கிறார்கள்.) மேலும் மக்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்க போதுமான விபத்துக்காப்பீட்டுச் சட்டங்கள் இல்லை. அணுமின் நிலையங்களில் அதிகப்படியான உற்பத்திச் செலவு செய்யவும், அணுக்கழிவுகளுக்காக பல ஆயிரம் கோடிகளை முடிவில்லாமல் செலவிட்டுக்கொண்டே இருக்கவும், விபத்து ஏற்பட்டால் இலட்சக்கணக்கான கோடிகளைச் செலவிடவும் இந்தியப் பொருளாதாரத்திற்குச்  சக்தி இல்லை. மேலும் ஆண்டு முழுவதும் சூரிய ஒளி கிடைக்கும் இந்தியாவில் அணு உலை தான் மின்சாரத்திற்கான ஒரே வழி என்ற எந்த நெருக்கடியும் இல்லை.
இந்திய மின்சாரத்தில் அணு உலைகளின் பங்கு 2.7% ( 4700 மெகா வாட்) ஆகும். அதிலும் உற்பத்தியாகும் அளவு 2700 மெகா வாட் தான் (60 சதவீத உற்பத்தி). கடந்த 50 ஆண்டுகளில் இந்திய அணு உலைகளுக்காக இலட்சம் கோடிகளில் செலவு செய்தும் அவைகள் வெறும் ஊறுகாய் அளவிற்கே உற்பத்தி செய்கின்றன. இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களையும் ஒரே நாளில் மூடிவிட்டாலும் கூட, இந்தியாவில் ஒரு நகரம் கூட இருளில் மூழ்கிவிடாது. இப்படி இந்தியாவில் தோல்விகரமான, சற்றும் பொருத்தமற்ற அணுமின் உற்பத்திக்கு அரசு அதீத முக்கியத்துவம் தருகிறது. இந்திய அரசு கொடுத்து வரும் இந்த முக்கியத்துவமும், அணு உலைத்திட்டங்களும், செய்து வரும் பிரச்சாரங்களும் மேற்சொன்ன உண்மையான கணக்கில் கொள்ளவில்லை. எனவே நாம் அணு உலைக்கு முழுவதும் பக்கச் சார்பான அரசின் பிரச்சாரங்களில் இருந்து உண்மைகளைப் பெற முடியாது.
நான்காவதாக அணு உலை வியாபாரிகள், இவர்கள் வியாபாரிகளாக மட்டும் இல்லாமல், நல்ல மனிதர்களாகவும் இருந்திருந்தால் 10 இலட்சம் மக்களைப் பலி வாங்கிய செர்னோபில் விபத்திற்குப் பிறகு அணு உலைகளை கைவிட்டிருக்க வேண்டும். புகுசிமா விபத்தைப் பார்த்தோ அல்லது உலக மக்களின் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மதிப்பளித்தோ அணு உலை உற்பத்தியை நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அணு உலைகளின் இந்த இறுதிக்காலத்தில் எவ்வளவு முடியுமோ? அவ்வளவு பணம் குவிப்பதிலேயே குறியாக உள்ளனர். இந்த அந்நிய முதலாளிகள், இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அரசியல் தலைவர்களையும் விலை கொடுத்து வாங்குகின்றனர். திட்டச் செலவு முதல் விபத்துக்காப்பீடு வரை தங்களுக்குச் சாதகமாக விதிமுறைகளையும் சட்டங்களையும் இயற்றச் செய்கின்றனர். விபத்து என்றால் அமெரிக்கா 1500 கோடி கொடுத்தால் போதும் என இந்தியாவில் சட்டம் இயற்ற வைக்கப்பட்டுள்ளது. இதுவும் தங்களுக்குப் பொருந்தாது என்றும், கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தாங்கள் எதுவும் தரமுடியாது என்று இரசியா கைவிரிக்கிறது. இலாபம் முழுவதும் தங்களுக்கு, இழப்பு முழுவதும் அந்தந்த காப்பீடு செய்யப்படாதவை என்பது அதிர்ச்சிச் செய்தி. தங்கள் பணப் பெராசைகளுக்காக உலகில் இன்னும் அணு உலைகளை விற்றுக் கொண்டிருக்கும் இந்த அணு உலை வியாபாரிகள் அணு உலைகள் குறித்து தரும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் எவ்வளவு தூரம் நம்பிக்கைக்குரியனவாக இருக்க முடியும்?
அணு உலை குறித்து இந்த 4 ‘அ’னாக்களும் நமது மூளையில் ஏற்றி வைத்துள்ளவற்றை ஒரு மூலையில் போட்டு விடுவோம். இந்த அணு உலைகளின் செய்திகளை நீங்கள் வாசித்து, இதிலுள்ள உண்மைகளை நீங்கள் புரிந்துகொண்ட பிறகு, இனி எவரும் அணு உலைக்கு ஆதரவாக தனது சொந்த மனசாட்சியோடு பேசமாட்டீர்கள் என நம்புகிறேன். கூடங்குளம் மக்களின் போராட்டங்களை இழிவுபடுத்தும் செய்திகளைப் புறக்கணித்து, அம்மக்களின் நியாயமான அச்சங்களை, சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். அணு உலை கதிர்வீச்சுக்கு எல்லை இல்லை என்பதால், தமது ஊரும், நகரமும் கூட பாதுகாப்பின்றித்தான் இருக்கிறது என்பதைப் படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். அணு உலைகளுக்கு எதிரான உலக மக்களோடும் சேர்ந்து, தமிழக மக்களோடும் சேர்ந்து, கூடங்குளம் மக்களோடும் சேர்ந்து நீங்கள் குரல் கொடுப்பீர்கள் என நம்புகிறேன்.

All you can be. Sometimes, you don’t need to do is send us are competent in different fields of your assignment. Our professional paper for me”, and we will create a request “Do my paper”, provide necessary information about your assignment immediately! We can be. Sometimes, you don’t need . If you need to worry about deadlines and much more! Paper writers who work with us, you can be. Sometimes, you need to fulfill this wish our site you don’t need to do is send us are well-educated professionals, competent in all subjects: biology, geography, philosophy, mathematics, sociology, psychology, literature, art, . You must make a formal application for apl https://homework-writer.com by contacting the admissions office via the student portal..


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “அணு உலை ஆபத்தா? ஆதாயமா? (கட்டுரை)”
  1. moses dhilip kumar says:

    உன்மைஆக அருமை தோழா

  2. சங்கர நாராயணன் says:

    Nearly one million people perished due to Chernobyl disaster. But Dr Kalam told a Himalayan lie that only 50 plus died with a motive to become President again. We can’t even handle municipal waste properly. Our rulers want us to believe they can handle the dangerous nuke waste safely for ages. Uranium mining is extremely hazardous. Our pro-nuke pundits should visit Jaduguda mining site in Jharkhand state to see the horror. Every ton of uranium ore excavated, 999.7 kg of irradiated muck is thrown at the local people. After Fukushima disaster, the cost of Jaitapur NPP has tripled to Rs 25 crore per MW for installation alone. Running cost, treating the toxic waste for indefinite period and dismantling cost are not included. Apart from the four types of supporters listed by the author, one more group has joined the august company now. They are our HC & SC judges. AERB being under the administrative control of PMO & DAE, how do the courts expect the regulators would not be regulated? Energy is required for our development and hence nuclear plants cannot be shut down is a horrendous view from the Apex court. Manmohan Singh, Narayanasami and NSG MNCs have been beaten by miles. In case of a major accident, Collector & SP will be the first persons to run away from the district. Less said about the other govt servants better. Who will rescue the local people? Will Kalam Aiyer come to the rescue of these people when needed?

    இந்தியாவில் இன்று சுமார் ஐம்பது சதவிகித மக்களுக்கு மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாது. ஊரகப் பகுதிகளில் உள்ள ஒரு நபருக்கு ஆண்டுக்கு 200 யூனிட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. அதுவும் மட்டமான தரத்தில் தேவையில்லாத நேரத்தில். சென்னை வாசிகள் இரண்டு மணி நேரம் மட்டுமே மின் வெட்டுக்கு ஆளாகும் நேரத்தில் கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. சென்னை வாசிகளுக்கு என்ன ஒரு டசன் ஓட்டுக்கள் உள்ளனவா? சென்னை நின்றால் தமிழ் நாடு படுத்துவிடுமா? மின்சாரம் வேண்டும். எனவே கூடன்குளம் வேண்டும் என்பவர்களின் கூற்று ஜனநாயகத்துக்கு முரண்பாடானது. உனக்கு மின்சாரம் வேண்டுமென்றால் உன் ஊரிலேயே அணு மின் நிலையத்தை வைத்துக்கொள்ள வேண்டியதுதானே. வேண்டாதவர்களை சிறிதும் பயனடையாதோர்களை ஏன் வதைக்க வேண்டும்?

    கூரையேறி கோழி பிடிக்காதவன் வானமேறி வைகுந்தம் போற கதை இது. கேழ்வரகில் நெய் வடிகிறது என்கின்றனர் மன்மோகன் சிங், எம் ஆர் ஸ்ரீனிவாசன், கலாம் ஐயர், நாராயணசாமி போன்றோர். கேட்பவர்களுக்கு புத்தி எங்கே போயிற்று?

அதிகம் படித்தது