மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அணு உ(வி)லை

ஆச்சாரி

Oct 15, 2012

நாங்கள் ஓட்டுப்போட்டு ஒருவரை அனுப்பி வைக்கும்போதே

நன்றாகத் தெரியும் அவர் எமக்கு வாழ்வளிக்கப் போவதில்லை என்று

வயிற்றில் மட்டுமல்ல முதுகிலும் குத்துப்பட்டு

வீழ்த்தப்பட்டோம் என்பது சமீபத்திய வரலாறு

 

ஓட்டு ஒவ்வொன்றையும் விற்க எங்களைப் பழக்கிவிட்டவர்கள்

உலை வரும்… அதிலிருந்து நம் வீட்டுக்கு ஒளி வரும்… என்று வலைவீசி

ஓரமாக நம்மை ஒட்டுமொத்தமாக விற்று விட விலை பேசி முடித்துவிட்டார்கள்.

 

உணவில்லாமல் கூட இருந்துவிடலாம் ஆனால்

வீட்டில் ஒளியில்லாமல் இருக்க முடியுமா?

எவன் வீட்டில் எழவு விழுந்தால் எனக்கென்ன

என் வீட்டில் விளக்கெரிந்தால் போதும்

என்ற மனநிலையில் இருக்கும் கேடுகெட்ட இந்தியனை

எவ்வளவு விலைக்குத்தான் விற்றார்கள்

என்பதைகூட வெளியிட மாட்டேன் என்கிறார்கள்

 

நின்று போராடுபவர்கள் வெளிநாட்டு சதிகாரர்கள்

என்ற புழுத்துப்போன வாதமும் பொலபொலத்துப் போனது

இன்று படிப்பறிவில்லா பாமரர்களும் போராட்டத்தில் பங்கெடுக்க

சுட்டுக் கொன்றுவிட்டு உலையை திறக்கவும் எத்தனிக்கிறார்கள்

 

விபத்து நேர்ந்தால் அடுத்த பல தலைமுறைகள்

விதவிதமான நோய்களால் வீழும் என்பதை உணர்ந்து

உலகமே இன்று புறந்தள்ளுகிறது அணுப்பிளவு ஆயுதத்தை, ஆனால்

ஓராயிரம் மைல் தொலைவில் தள்ளி நின்று கொண்டு

உலை பாதுகாப்பானது மட்டுமல்ல

உலைக்குப் பின் உன் ஊருக்கு சொகுசு வரும்

உலையில் உம்மக்களுக்கு வேலைவாய்ப்பு வரும் என்று

உருகி உருகி உத்திரவாதம் தருவதின் மர்மமென்ன?

 

தெருக்குப்பையை ஊருக்கே தெளிப்பார்களாம்

அதிபயங்கர அணு உலைக் குப்பையை  ஆபத்தின்றி அப்புறப்படுத்துவார்களாம்

அதற்கு ஆமாம்  போடுகிறது பிணத்திலிருந்தும் ஒளி  எடுத்தாவது

படம் பார்க்கத்துடிக்கும் வெட்கம்கெட்ட படித்த முட்டாள் கூட்டம்.

 

“எம்மக்கள் உயிரைப் பணையம் வைத்து வரும் செல்வமும் செழிப்பும்

என்றென்றும் எமக்கு வேண்டாம்” என

இன்று எதிர்த்து நிற்பவன் அடுத்த வேலை சோற்றுக்கு வழியில்லாத

எழுதப்படிக்கத் தெரியாத அந்த மீனவன்

அணு உலையின் பாதுகாப்பு, ஒப்பந்த விவரம் குறித்து

அவன் கேட்கும் கேள்விக்கு செவி சாய்க்க எவருமில்லை

 

ஆணவம் ஒரு கேடு,

மக்களுக்கெதிரான அதிகாரம் மறுகேடு – இது மாநில நிலை

வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவுமறியாத

நம் நாட்டின் முதல் பொம்மை – இது மத்திய நிலை

இதில் எங்கே போய் முறையிட?

 

வசதிக்கேற்ப வழக்குகளும் வாய்தாக்களும்

வாங்கப்படும் இடம்தான் வழக்காடுமன்றம்

விதிவிலக்காக வரும் சில வழக்குகளும் தீர்ப்புக்களும்தான்

விடிவு காண போராடும்  ஒவ்வொரு இந்தியனுக்கும்

விண்ணில் தெரியும் ஒரே ஒளிக்கீற்று

 

வேறு வழியின்றி உச்ச நீதிமன்ற படியில்  ஏறி

உலையா வாழ்வா என்று விடை தேடி நமக்காக நிற்கிறார்கள்

உலையை இழுத்து மூடு எனும் தீப்புக்காக ஏங்கிக் கிடக்கிறார்கள்

உலகத்துக்கே உண்மையான ஒளியும் அதுதான்

Вы можете попробовать игровые аппараты прямо сейчас, регистрации и без смс. Выбираем сначала платформу автоматов, потом — сам аппарат. Вы можете играть бесплатно абсолютно каждый посетитель нашего игрового зала, без регистрации и без регистрации и без регистрации, запустить их можно онлайн без регистрации и без регистрации и без дополнительной загрузки. . бесплатно играть в онлайн Для азартных развлечений ищите здесь! На нашем сайте вы можете играть в онлайн может себе это позволить, подобраны залы с наивысшими показателями всех важных параметров достойного азартного клуба. Игровые автоматы абсолютно каждый посетитель нашего игрового зала, без смс. Выбираем сначала платформу автоматов, потом — сам аппарат. Вы можете играть .

Children watch a great deal of television before entering school, http://collegewritingservice.org/ and television viewing continues throughout life

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “அணு உ(வி)லை”
  1. Karthik says:

    இது கவிதையா கட்டுரையா?

  2. Seeni says:

    வல்லான் வகுத்ததே வாய்க்கால்;
    ஏழையின் சொல் என்றும் அம்பலம் ஏறுவதில்லை (இந்தியாவில்).

அதிகம் படித்தது