மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அமெரிக்கத் தீர்மானம் 2014

ஆச்சாரி

Mar 8, 2014

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் உலகத் தமிழர்களுக்கு ஒரு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. கடந்த ஆண்டை போலவே இலங்கைக்கு மேலும் அவகாசம் கொடுத்துள்ளதாகவே நான் இதை நினைக்கிறேன். மீண்டும் இலங்கையே போர்க்குற்றத்தை விசாரிக்க இத்தீர்மானம் (#2) கோருகிறது. கடந்த ஓராண்டில் எந்த விசாரணையும் இலங்கை  செய்யவில்லை. மீண்டும் விசாரிக்கக் கோருவதின் காரணம் தெரியவில்லை. இலங்கை ஒன்றும் செய்யப்போவதில்லை.

ஆனால் ஒரு ஆறுதல் #8. இதில் குறிப்பிட்டபடி ஆணையர் பன்னாட்டு விசாரணை ஒன்றை செய்ய ஆணையிடலாம். ஆணையரின் அறிக்கையை வரவேற்றிருப்பது பன்னாட்டு விசாரணையை வேண்டும் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால் ஆணையர் நவி பிள்ளையின் பதவிக்காலம் இந்த கோடையில் முடிகிறது. அதன் பின் வரும் மனித உரிமை ஆணையர் என்ன செய்வார் என்பது தெரியாத நிலையில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. பிள்ளையவர்கள் உடனே விசாரணையைத் துவக்கினால் பலன் கிடைக்கும். ஆனால் இலங்கையும் இந்தியாவும் பல தடைகளை வைக்க வாய்ப்புள்ளது. கோடை வரை விசாரணை துவங்காமலிருக்கவும் வாய்ப்புள்ளது.

#6-ல் 13A யை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதை சேர்த்தது, வியப்பைத் தருகிறது. இதனால் என்ன பலன் என்பதை உடனே அறியமுடியவில்லை.

நமக்கு குறைந்த பட்சமாக Commission of Inquiry to investigate the war crimes and crimes against humanity என்ற திருத்தம் தேவை. இந்த திருத்தத்தை இந்தியா கொண்டுவரவேண்டும்.

ஆனால் இந்தியா என்றுமே இந்தத் தீர்மானத்தை கொண்டுவராது. முக்கியமாக காங்கிரஸ் பாஜக இருக்கும் வரை இது வருவது கடினமே. இந்தியாவே இந்த போரில் நேரிடையாக ஈடுபட்டுள்ளது. அதற்கு இலங்கை நிறைய சாட்சியங்களை வைத்துள்ளது. சர்வதேச விசாரணை வந்தால் அதில் அதிகம் மாட்டிக்கொள்வது இந்தியாவாகத்தான் இருக்கும். அமெரிக்காவுக்கு அரசியல் மட்டத்தில் இந்த தீர்மானத்தை கொண்டுவருவதில் பிரச்சனை இருக்காது. அமெரிக்க ராணுவத்திற்கும் இலங்கை ராணுவத்திற்கும் ஆழ்ந்த உறவு உள்ளது. இது நீண்ட நெடுநாளைய உறவு. இலங்கை தன் நகர்வுகளை அமெரிக்க ராணுவத்தின் மூலமே செய்கிறது. ராணுவத்தின் கருத்தியலுக்கு எதிராக அமெரிக்க அரசியல் மட்டத்தில் தீர்மானங்களை கொண்டுவருவது கடினமே. அமெரிக்காவில் அரசியல் ரீதியாக எதிரிகள் நமக்கு குறைவு ராணுவ ரீதியாகவே எதிரிகள் உள்ளனர். இதை எப்படி சரி செய்யபோகிறோம் என்பது தெரியவில்லை. இருந்தும் நமக்கு இப்பொழுது உள்ள ஒரே நம்பிக்கை அமெரிக்கா மட்டுமே. தமிழ் நாட்டில் அமெரிக்க தூதரகத்தின் முன் ஒரு வலுவான அமைதியான போராட்டம் (அமெரிக்காவுக்கு எதிராக அல்ல) நடத்தினால் அதற்கான சாத்தியங்கள் உண்டு. இதை மாணவர்கள் உணர்ந்துள்ளனர் மற்ற இயக்கங்கள் உணர்ந்ததாக தெரியவில்லை. தமிழகத்திலிருக்கும் தமிழ் அமைப்புகளும், கட்சிகளும், உணர்வாளர்களும் பெரியளவில் போராட்டத்தைத் துவக்கினால் தமிழக அரசும் இதில் இணைய வாய்ப்புள்ளது. இணைந்து செயல்பட்டு மாற்றத்தைக் கொண்டுவருவோம்.

Brand blanshard short sentences like these are emphatic and create variety

Brand blanshard short sentences like these are emphatic and homework help online free math create variety


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்கத் தீர்மானம் 2014”

அதிகம் படித்தது