மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அறிந்துகொள்வோம் – மதுரையின் ஜிகர்தண்டா குளிர்பானம்

ஆச்சாரி

Aug 15, 2013

கோடை காலத்தின் கொடுமையைப் போக்கத் ஆதித்  தமிழர்கள் பயன்படுத்திய பானங்களாவது நீர், மோர், இளநீர், கள், பானக்கரம் (வாழைப்பழம்+ புளி+வெள்ளம் கரைத்த கரைசல்), கஞ்சித் தண்ணீர் போன்றவைகளைக் குடித்து வந்தனர். அதன் பின் தமிழ்நாட்டு குளிர்பானங்களாக காளிமார்க் சோடா, பவண்டோ,  கலர் என பானங்கள் வந்தன. இதன் பின் கொக்கோ கோலா, பெப்சி, செவன் அப், மிரண்டா, பெண்டா, மாசா, மவுண்டன் டியு, எனப் பல வெளிநாட்டு மதுபானங்கள் தமிழ்நாட்டிற்குள் இறக்குமதியாயின. இப்படி எத்தனையோ பானங்கள் வந்து கொண்டிருந்த போதிலும் தற்போது மதுரை மாவட்டத்தின் தனி அடையாள பானமாக இருப்பது ‘ஜிகர்தண்டா’ என்ற பெயருடைய குளிர்பானமாகும்.

மதுரையில் ஜிகர்தண்டா பிரபலமாக விற்பனையாகும் இடம் திருமலை நாயக்கர் அரண்மனை முன்பு அமைந்திருக்கும் ஜிகர்தண்டா குளிர்பானக்கடையாகும். இங்கு ஜிகர்தண்டா தயாரித்துக் கொடுக்கும் அந்தோணி என்பவரிடம் இது எப்படி தயாரிக்கப்படுகிறது? தயாரிக்க என்ன தேவை? என கேட்க அவர் கூறியது.

ஜிகர்தண்டா பானம் தயாரிக்கப் பயன்படும் பொருட்கள்:              

  • பாதாம் பால்
  • சாக்லெட் குழம்பி
  • சர்பத்
  • பனிக்கட்டி
  • கடற்பாசி (ஸ்பைரூலினா)

பாதாம் பருப்பைக் கொண்டு பாதாம் பால் தயாரித்து அதை ஒரு தனிக் குவளையில் வைத்துக்கொள்ள வேண்டும். சாக்லெட் எனப்படும் சுவையான கூழ் நிலையில் இருக்கும் குழம்பியை ஒரு தனிக் குவளையில் வைத்துக் கொள்ள வேண்டும். சாதாரண சர்பத் பாட்டில் ஒன்று வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு சிறு சிறு துண்டுகளாக பனிக்கட்டியை வாங்கி தனிப் பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். நாட்டு மருந்துக்கடையில் கடற்பாசி எனக்கேட்டால் சதுர வடிவில் சிறு சிறு கட்டியாக இருக்கும் கடற்பாசியைத் தருவார்கள். அதை நமக்குத் தேவையான அளவு 100 கிராம் அல்லது 200 கிராம் வாங்கிக் கொள்ள வேண்டும்.

 செய்முறை:

 கட்டியாக இருக்கும் கடற்பாசியை இரவில் நீரில் போட்டு நன்கு ஊறவைத்து  விட வேண்டும். அதை மறுநாள் காலை எடுத்துப் பார்த்தால் நன்கு ஊறி அடர்த்தியான கூழ்ம நிலையில் கடற்பாசி வழுவழுப்பாக இருக்கும் கும். இதை ஒரு கால் கரண்டி எடுத்து ஒரு குவளையில் போட்டுக்கொள்ள வேண்டும். பின் இவற்றோடு கால் கரண்டி வீதம் பாதாம் பால், சாக்லெட் குழம்பி (கூழ்), சர்பத், பனிக்கட்டித் துண்டுகளைத் தேவையான அளவு சேர்த்தால் இறுதியில் ஜிகர்தண்டா பானம் தயாராகி விடும். இன்னும் கொஞ்சம் சுவை வேண்டும் என விரும்புகிறவர்கள் இக்கலவையோடு கொஞ்சம் பனிக்குழம்பி (ஐஸ்கிரீம்) சேர்ந்து உண்டால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.

பயன்கள்:

  • இப்பானத்தை அருந்தினால் உடல் குளிர்ச்சி பெறும்.
  • சர்க்கரை நோய் தணிக்க இது சிறந்த பானமாகும்.
  • கடற்பாசியை பாலில் ஊற வைத்து குடித்தால் உடல் புத்துணர்ச்சி பெறும்.
  • இந்த ஜிகர்தண்டாவை அடிக்கடி குடித்து வருபவர்களுக்கு வயிறு குளிர்ச்சி அடைவதுடன், வயிற்றுப்புண்களை ஆற்றும் அருமருந்தாகவும் இந்த பானம் உள்ளது.

Vorgehensweise in der abschlussarbeit wird vorgestellt http://www.best-ghostwriter.com/

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அறிந்துகொள்வோம் – மதுரையின் ஜிகர்தண்டா குளிர்பானம்”

அதிகம் படித்தது