அழகுக் குறிப்புகள்
ஆச்சாரிMar 15, 2013
* முகத்தில் இயற்கை அழகு பேண முழு பச்சைப்பயறு, கடலைப் பருப்பு இவற்றைக் காயவைத்து, மாவாக அரைத்து, இதில் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து! இதனுடன் தயிர் அல்லது பாலாடையுடன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவலாம்.
* வேலைக்குப் போகும் பெண்கள் தினமும் முக அழகைப் பராமரிக்க, மற்றும் நேரம் குறைவாகச் செலவு செய்ய கடைகளில் தயாராகக் கிடைக்கும் கிளன்சிங் கிரீம் அல்லம் கிளன்சிங் மில்க் இவற்றில் ஒன்றை இரவில் படுக்கப் போகும் முன்பு முகத்தில் தடவி சுமார் 7 நிமிடம் மேல் வாட்டமாக மசாஜ் செய்து, பின் நீரில் கழுவி, டோனார் என்னும் திரவத்தைப் பஞ்சில் நனைத்து, முகத்தில் துடைத்து, பின்பு மாஸ்டரைசர் தடவிக் கொள்ளலாம்.
* முகப்பரு, கரும்புள்ளி போக
* சிலருக்கு முகத்தில் பரு அல்லது மூக்கில் கரும்புள்ளி இருந்தால் அவர்கள் கிளன்சிங் செய்த பிறகு ஸ்கிரப்பை மூன்று நிமிடம் முகத்தில் தேய்த்துப் பின் கழுவி விடவும்.
* பாத்திரத்தில் தண்ணீர் உற்றி அதில் புதினா இலை இரண்டு, வேப்பிலை நான்கு, துளசி இலை நான்கு சேர்த்து நன்கு கொதித்த பின் முகத்தில் ஆவி பிடிக்கவும், இல்லை என்றால் அந்த நீரில் பருத்தியினால் ஆன மிருதுவான துண்டை நனைத்து, பிழிந்து முகத்தில் இரண்டு நிமிடம் மூடிக்கொள்ளவும். பின் டிஸ்யூ தாள்களால் மூக்கை அழுத்தினால் கரும்புள்ளி வந்துவிடும் பின் டோனரைப் பஞ்சில் தோய்த்து முகத்தில் தடவவும்.
* முகத்துக்கு மாஸ்க் (முகமூடி) வேண்டுமானால் முகத்தில் முகப்பரு உள்ளவர்கள் முள்தானிமட்டியுடன் சிறிது எலுமிச்சைச்சாறு, ரோஸ் வாட்டர் (நீர்) கலந்து பஞ்சில் தோய்த்து, முகத்தில் தடவவும் இப்படித் தேய்த்து 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும் இவ்வாறு தொடர்ந்து செய்துவர முகப்பரு தொல்லை நீங்கும்.
* முகத்தில் முகப்பரு அற்றவர்களுக்கு, சந்தனப் பொடியுடன் ரோஸ்வாட்டர் சேர்த்து, பருத்தித் துணியால் தோய்த்து இதை முகத்தில் தேய்த்த பின் 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் முகத்தில் உள்ள அழுக்கு, கரும்புள்ளி போகும். இதற்குப் பெயர்தான் ப்ளீச்சிங் ஆகும்.
*கால், கை பராமரிக்க,
* தினமும் இரவில் வெந்நீரில், கல் உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சிறிது ஷாம்பூ சேர்த்து இதில் நம் கால்களை ஊறவைத்து, தண்ணீர் சற்று சூடு ஆறிய பின் பாதத்தை (கடையில் விற்கும்) பூமிக்ஸ்டோனை வைத்து, கால்களில் தேய்த்த பின், குளிர்ந்த நீரில் கால்களை மூன்று நிமிடம் வைத்து பின்னர் மிருதுவான பருத்தித் துணியால் துடைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது மாஸ்சரைசர் – ஐ கால்களில் தேய்த்து விடவும். இதே முறையைக் கைகளுக்கும் செய்து வந்தால் கைகளும், கால்களும் நன்கு பளபளக்கும்.
* இம்முறை உங்களால் தினமும் முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது இவ்வாறு செய்துவர வேண்டும். தினமும் தூங்கப் போகும் முன் கால்களை வெந்நீரில் ஊறவைத்து புதிதாக வாங்கிய பல்துலக்கும் பிரஸ்சால் கால்களைத் தேய்த்து நன்கு தூய்மை செய்யலாம்.
* கால்களில் தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தால், கால்கள் மிருதுவாக இருக்கும்.
* தலைமுடி உதிராமல் இருக்க:
* நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் இதில் ஏதேனும் ஒன்றை வெது, வெதுப்பாகக் காயவைத்து, பஞ்சில் தோய்த்து, முடியின் வேர்க்கால்களில் தேய்க்கவும். பின் விரல் நுனிகளால் மிதமாக தலையை அழுத்தி விடவும். பெரிய பல் கொண்ட தலைவாரும் சீப்பால் இருபது முறை அழுத்தி வாரிவிடவும்.
பின்பு இருபது நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை நன்கு அலசவும். இவ்வாறு வாரம் இருமுறை அல்லது ஒரு முறையாவது செய்யலாம்.
முடி அதிகமாகக் கொட்டினால்:
செம்பருத்தி இலை, செம்பருத்திப் பூ, எலுமிச்சைத் தோல், ஆரஞ்சுத் தோல், வேப்பிலை, மருதாணி இலை இவற்றை நிழலில் உலர்த்தி, நன்கு அரைத்து தூள் போன்று (பவுடர்) செய்து, இதில் நெல்லிக்காய் பவுடரும் சேர்த்து, தயிர் அல்லது முட்டையுடன் சேர்த்து எண்ணெய் தேய்த்த பின், இந்தக் கலவையை, மயிர்க்கால்களில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து பின் நீரில் தலை முடியை அலசவும் இதை வாரம் ஒரு முறை செய்தால் அதிக முடி உதிர்தல் குறையும்.
குறிப்பு: இதையும் தாண்டி முடி அதிகமாக உதிர்ந்தால் உரிய மருத்துவரை அணுகவும்.
உதடு மென்மையாக இருக்க:-
இரவு தூங்கப் போவதற்கு முன்பு இதழ்களில் தேங்காய் எண்ணெய் தடவினால், இதழ் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
நம்மைத்தாக்கும் வெயிலைச் சமாளிக்க:
* வெயில் காலத்தில் எங்கு வெளியில் சென்றாலும் கையில் தண்ணீர் பாட்டில் இருக்கட்டும்.
* மிருதுவான பருத்தி ஆடைகளை அணியவும்.
* கண்களுக்கு (கூலிங்கிளாஸ்) குளிர் கண்ணாடி அணியவும்.
* குறிப்பாக மதியம் 11 மணி முதல் 4 மணி வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.
* சூடான உணவுகளை உண்ண வேண்டாம்.
* தவறாது காலை மாலை குளித்துவிடவும்.
* ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் நீர் அருந்த வேண்டும்.
(தாகம் எடுக்கும் போது மட்டும்)
* கீரை வகைகள், காய்கறிகள், மோர் தயிர், வெண்ணெய் பயன்படுத்தலாம்.
* வெந்தயத்தை குடிநீரில் நன்கு ஊறவைத்தபின் குடித்தால் உடல் சூடு குறையும்.
* வெயில் காலத்தில் கொழுப்புப் பொருட்களையும், அசைவம், அதிக மசால் பொருட்கள், எண்ணெய்
பண்டங்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “அழகுக் குறிப்புகள்”