சிறுகதை – அவளும் பெண்தானே !
ஆச்சாரிJan 1, 2013
மளிகைக் கடையில் காசாளராகப் பணியாற்றும் சிவராமனுக்கு, தன் மகளின் திருமணம், வரதட்சனை காரணமாகத் தடைபடுகிறதே என்பது தான் பெரிய கவலையாக இருந்தது. பல முறை தனது தந்தையின் விருப்பதிற்காக மாப்பிள்ளை வீட்டார் முன்பு, அலங்கரிக்கப்பட்ட பொம்மையைப் போல நிற்பதால், திருமணத்தின் மீது வெறுப்பு ஏற்ப்பட்டது அவளுக்கு. பல நாட்கள் கழித்து தனது தந்தை முகத்தில் தொலைந்து போன மகிழ்ச்சியைப் பார்த்தாள் மகள் தேவி.
என்னப்பா விசயம்? என்று கேட்பதற்குள் சிவராமன் அம்மாடி இன்னைக்கு சாயங்காலம் ஒன்னப் பொண்ணு பாக்க வராங்கம்மா. நான் கடைக்குப் போயி என் வேலையெல்லாம் முடிச்சுட்டு அப்படியே பூ, பழம், சுவீட்டு, காரமெல்லாம் வாங்கிட்டு வந்துடுறேன். நீயும் ரெடியா இரும்மா , என்றதும் தந்தையின் மகிழ்ச்சியே தனது மகிழ்ச்சி என நினைத்த தேவி, சரிப்பா எனக்கூறிவிட்டு உள்ளே சென்றாள். மாலையில் கல்யாணத் தரகரும், மாப்பிள்ளையான வாசுதேவனும் வந்தவுடன் அவர்களை வரவேற்று, தமிழ் விருந்தோம்பல் முறைப்படி குடிக்கத் தண்ணீர் கொடுத்தாள் தேவி.
சில நிமிடங்களுக்குள் சிவராமனும் வந்துவிட, அவர்களிடம் குடும்பச் சூழலை விளக்கினார். வாசுதேவனோ.. “எனக்குப் பொண்ண ரொம்பப் புடிச்சிருக்கு. மத்த விசயத்தப்பத்தி நான் பேசுறதுக்கு ஒண்ணுமில்ல, அடுத்த வாரம் அம்மாவக் கூப்ட்டு வந்து பேசுறேன்” எனக்கூறி கிளம்ப ஆயத்தமான போது, வாஞ்சையோடு அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு “ சீக்கிரமா ஒரு நல்ல முடிவாச் சொல்லுங்க” என்றார் சிவராமன். கண்டிப்பா! எனக்கூறிவிட்டு அவர்கள் சென்றதும். என்னம்மா உனக்கு மாப்ளையப் பிடிச்சிருக்கா? புன்னகையுடன். . . உங்களுக்கு பிடிச்சிருந்தா சரிப்பா! வெட்கத்துடன் உள்ளே சென்றாள் தேவி.
சில மாதங்களுக்குப் பிறகு தேவி, தனது தோழியான வித்யாவோடு பேசிக்கொண்டு தெருவில் வரும் வழியில், அருகே இருந்த மருந்துக் கடையில் இருந்து வாசுதேவன், கையில் மருந்து, மாத்திரைகளோடு வெளியே வருவதைக் கண்டாள் தேவி. அவன் அருகில் சென்று நீங்க எங்க இங்க? கைல என பாட்டில் ? யாருக்கு உடம்பு சரியில்ல?
அம்மாவுக்கா? என்றதும், அவனோ தயக்கத்துடன் அம்மாவுக்கு எதுவுமில்ல. அப்ப யாருக்கு? என்று பதற்றத்துடன் கேட்க. என்னோட மனைவிக்கு உடம்பு சரியில்ல ஆசுப்பத்ரீல அட்மிட் பண்ணிருக்க.. என்றவுடன் அதிர்ச்சியில் உறைந்த தேவி, என்ன!! உங்களுக்கு ஏற்கனவே கல்யானமாகிடுச்சா? ஆமா, அவ பேரு மேகலா. என்னோட மாமா பொண்ணு என்று சொன்னதும், அவளுக்கு என்ன சொல்வதென்று புரியாமல்.. இவ என் தோழி வித்யா.. நா.. நாங்க கெளம்பறோம்.. ஏய் . . . .. வாடி என தோழியை இழுத்துக்கொண்டு அவசரமாக நடந்தாள் தேவி.
சற்றுத் தூரம் சென்றதும் வித்யா, தேவியைப் பார்த்து “ என்னடி அவர உனக்கு ஏற்கனவே தெரியுமா ? ஆமாண்டி, என்னப் பொண்ணு பாத்துட்டு, அம்மாவ கூப்ட்டு வந்து பேசுறேன்னு சொல்லிட்டு போனவரு இவருதான். என முடிப்பதற்குள்.. வித்யா குறுக்கிட்டு ஒ.. ஒன்னப் பொண்ணு பாக்க வந்தார்னு நீ சொன்னது இவரத்தானா? நல்ல வேலடி நீ தப்பிச்ச! அடியே தேவி, இந்த மனுசனுக்கு நேத்து நடந்த கூத்தப் பத்திச் சொல்றேன் கேளு. என்னடி சொல்ற? என ஆச்சரியத்தின் தேவியின் விழி விரிய, கேளுடி சொல்றேன். நேத்து நான் எங்கம்மாவக் கூப்ட்டுக்கு ஆசுப்பத்ரிக்குப் போனேன். அங்க ரெண்டு போலிசுக்காரங்க இவர விசாரிச்சுட்டு இருந்தாங்க. என்னன்னு அக்கம் பக்கத்ல விசாரிச்சுப் பாத்தா இவரோட அம்மா வரதட்சண கேட்டு, இவரோட பொண்டாட்டிய கொடுமப் படுத்தினதால அந்தப் பொண்ணும், இவளோட பிக்கல், பிடுங்கலத் தாங்காம விசம் குடிச்சிட்டாளாம், என்றதும் தூக்கிவாரிப்போட்டது தேவிக்கு. என்னடி சொல்ற உண்மையாவா? ஆமடி என, மீதிக்கதையை பேசிக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர் இருவரும்
இரக்ககுணம் கொண்ட தேவி, தனது வாழ்க்கை காப்பாற்றப் பட்டதை நினைத்து மகிழாமல், விசம் குடித்த மேகலாவின் நிலை என்னாவாகுமோ? என்ற பரிதாபத்துடன் “வித்யா மனசே சரியில்லடி வா கோயிலுக்குப் போகலாம்” என்றதும், இருவரும் அருகில் உள்ள முருகன் கோயிலுக்குள் நுழைந்தனர். இருவரையும் கண்ட அய்யர் “ வாங்கோ, அர்ச்சன யாருக்கு? பேர் சொல்லுங்கோ? “ மேகலா வாசுதேவன்” என்றால் தேவி. அர்ச்சனை செய்ய அய்யர் சென்றார். கருவறை நோக்கிக் கண்மூடினாள் தேவி, கண்விழித்துப் பெருமிதத்துடன் தேவியைப் பார்த்தால் வித்யா.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
ITS STORY WAS NICE
Nice Stories and keep on trying Jack
factu factu fatu factu factu story…….all maamiyars should read this story and they should change themselves……..nice story mam
Its very good story &awesome
by,
route thala:-D
நல்ல கதை. பாராட்டுகள் சாக்குலின்
Dont stop with this story……….
plz write more stories
You expressed what is happening in the society
gud story but no twist,no expectations,etc…..a gud try…
Its a nice story…plz write more stories..
Itsl a nice story…plz write more stories..
Itsl a nice story…plz wrote more stories..
MAAMIYAARGAL PADIKAVENDIYAVAI….PADITHAL MATTUM POTHATHU….
REALLY NICE STORY… MAAMIYAAR KODUMAIGAL OLIYA VAIPILLAIYA…PENGALUM SELVAM ENBATHAI YEN PURINTHUKOLA MARUKIRAARGAL…VARATHATCHANAI KODUMAIGAL KATHAILKOODA EDAMPERA KOODATHU ENBATHEY YEN VIRUPAM…