மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆயுளைக் குறைக்கும் அலைபேசி

ஆச்சாரி

Jan 4, 2014

எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பிலும் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கிறது. அந்த வகையில் தற்போது மக்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவது அலைபேசி என்ற சாதனமாகும். அமைச்சர்கள் முதல் நம் ஊரில் ஆடு மேய்ப்பவர் வரை இதைப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். நிச்சயமாக இதில் நன்மைகள் இருந்தாலும் இதனால் வரும் தீமைகளையும் நாம் உணர்ந்திருப்பது நல்லது.

இன்றைய அறிவியல் உலகில் தவிர்க்க முடியாத ஒரு அத்தியாவசியப் பொருளாகிவிட்ட   ‘செல்போனை’ப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என்றாலும்  அதன் பயன்பாட்டைக் கருதி தவிர்க்கமுடியாமல் போவதுதான் உண்மை.

தொடர்ந்து முப்பது நிமிடங்கள் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தால் ஒலியை உள்வாங்கக்கூடிய நரம்புகள் பெரிதும் பாதிப்படைந்து அதன்மூலம் மூளை செயலிழக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொடர்ந்து அதிக நேரம் பேசுவதால் கதிர்களின் தாக்கம் அதிகரித்து மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas)  புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அதிகநேரம் பேசும்போது ஏற்படும் கதிர்வீச்சு கழுத்து, தலைப்பகுதியில் இருக்கும் நரம்புகளுக்கு அதிர்வை உண்டாக்குவதால் நரம்புத் தளர்ச்சித் தொடர்பான நோய்கள் வர அதிகம் வாய்ப்புள்ளது. அதேபோல் அலைபேசியை அதிர்வு நிலையில் (vibrate mode) வைப்பதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ‘Radiation’ எனப்படும் இந்த கதிர்கள் மரபணுவையே பாதிக்கக்கூடியதும் அது மூன்று தலைமுறை வரை பாதிப்பை ஏற்படுத்தும்   அளவிற்குத் தாக்கம் கொண்டவை.

கடந்த ஆண்டு (2012) கென்யா நடத்திய ஒரு ஆய்வின்படி உலக அளவில் இரண்டு பில்லியன் மக்கள் செல்போனைப் பயன்படுத்துகின்றனராம். அதாவது உலக மக்கள் தொகையில் 89 சதவிகிதம் பேர் பயன்படுத்துகின்றனர் என்றும் அது நடப்பாண்டில் இன்னும் நான்கு சதவிகிதம் அதிகரிக்கும்  என்கிறது அந்த ஆய்வு.

மற்றவர்களைத் தொடர்பு கொள்ளும் பொழுது, எதிர்முனையில் இருப்பவர் அழைப்பை ஏற்றதும் காதில் வைத்துப் பேசுவது நல்லது. ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ‘ரிங்’ போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.  செல்போன்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்காக மேல் உறையைப் (cover) பயன்படுத்துகிறோம். ஆனால் அது போனுக்கு மட்டும்தான் பாதுகாப்பு நமக்கு பாதிப்புதான். பேசும்பொழுது வெளியிடப்படும் கதிர்வீச்சுக்கள் வெளியேறாமல் நம் உடலை  அதிகமாக பாதிக்கும். எனவே முடிந்தவரை நம் பாதுகாப்பை நாமே பார்த்துக்கொள்வோம்.

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கார்சினோ ஜெனிக் (2பி) பட்டியலில் ஏற்கனவே வாகனப்புகை, குளோரோபார்ம், காரீயம், பூச்சிக்கொல்லி மருந்துகள், சில ஊறுகாய் வகைகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் தற்போது அலைபேசியும் இடம்பெற்றுள்ளது.

இந்த அலைபேசியை அதிகம் பயன்படுத்துவோர்களில் 40 சதவீதம் பேர்களுக்கு மூளைப்புற்றுநோய் வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. நாம் எவ்வளவு நேரம் செல்போனில் பேசுகிறோம் என்பதை அளவெடுத்து, அவரவரே தங்கள் மூளையை சோதித்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மேலும் நம் ஊர்களில் குழந்தைகளிடம் அலைபேசியைக் கொடுத்து அதிக நேரம் எதிர்முனையில் இருக்கும் உறவினர்களிடம் பேசச் செல்கின்றனர். இது தவறான வழிகாட்டுதலாகும். அலைபேசியை குழந்தைகளிடம் கொடுத்து நம்மை அறியாமலேயே குழந்தைகளை நோயாளிகளாக ஆக்குகிறோம். காரணம் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு மண்டை ஓடானது மிகவும் மெல்லியதாக இருப்பதால், அலைபேசியின் கதிர்வீச்சு நேரடியாக மூளையைப் பாதிக்கும். அதனால் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடம் அலைபேசியைக் கொடுக்காதீர்கள் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அலைபேசியை அதிகம் பயன்படுத்தும் போது நமக்கு வரும் பாதிப்புகளாவன, நரம்புத்தளர்ச்சி, கேட்கும் திறன் குறைதல், தோல் பாதிப்பு, நேர விரயம், மன பாதிப்பு, மன அழுத்தம், ஆழ்ந்த தூக்கமின்மை, கர்ப்பிணிகள் பயன்படுத்தினால் சிசு பாதிப்பு, மாணவர்கள் பயன்படுத்துதலால் கல்வி பாதிப்பு, இளைய சமுதாயம் ஆபாச படம் பார்ப்பதால் தமிழ் கலாச்சார பாதிப்பு, அலைபேசி பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதலால் வரும் தேவையற்ற விபத்து, தகவல் திருட்டு போன்ற தீமைகள் அனுதினமும் அலைபேசிவாசிகளால் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அலைபேசி பாதிப்பிலிருந்து மீள:

1.அலைபேசியை (வைப்பரேட்) அதிர்வு நிலையில் இருப்பதைத் தவிர்க்கவும்.

2.அலைபேசியை சட்டையின் இடது பக்கவாட்டில் வைக்க வேண்டாம். இதனால் இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பைக் குறைக்கலாம்.

3.அலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்துப் பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். காரணம் உங்கள் அலைபேசியின் (Internal Antena) உள்ளிருக்கும் ஆன்டெனா பெரும்பாலும் பின் பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்துக் கொள்ளவும்.

4.அலைபேசியில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்துப் பேசாமல் இடது பக்கக் காதில் வைத்துப் பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

5.அலைபேசியில் அதிகம் விளையாட்டு விளையாடாமல் இருப்பது நல்லது. காரணம் நம் கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

6.தூங்கும் போது அலைபேசியை அருகிலேயே வைத்துக்கொண்டு தூங்கும் பழக்கம் இருந்தால் உடனே அப்பழக்கத்தைக் கைவிடுங்கள்.

7.காதில் வைத்துப் பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட அலைபேசியின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது.

8.அலைபேசியில் சார்ஜ் தீரும் கடைசி நேரத்தில் பேசுவது மிக ஆபத்தானது. சார்ஜ் தீரும் போது அலைபேசியிலிருந்து அதிகமான கதிர்வீச்சு வெளிவிடுவதால் நம் மூளையை அக்கதிர் பெரும் பாதிப்பிற்குள்ளாகிவிடும்.

One typical context in academic writing in which past perfect forms are relatively frequent is in research reports, when you refer to events or collegewritingservice.org/ situations which had already occurred before the study was conducted

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆயுளைக் குறைக்கும் அலைபேசி”

அதிகம் படித்தது