மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு ஆராய்ச்சி மையம் –பகுதி 2

ஆச்சாரி

Mar 15, 2014

CTMR ஆராய்ச்சி மையம், ஆரோக்கிய மையங்கள் தவிர நடமாடும் மருத்துவமனைகளையும் நடத்துகிறது. சர்வசிக்ஷா அபியான் மூலமாக 15000 குறுந்தகடுகள் பள்ளிக் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டு இருக்கிறது.

இது தவிர மருத்துவர்களுக்கான கருத்து அரங்கம், கருத்து பரிமாறும் அரங்குகள், அவர்களுக்கான பயிற்சி பட்டறை ஆகியவையும் CTMR ஆல் நடத்தப்படுகின்றன. CTMR வீட்டுத் தோட்டம், பள்ளித் தோட்டம் மற்றும் மூலிகை தோட்டங்கள் அமைக்க உதவுகிறது. இது சம்பந்தமான சான்றிதழ்கள் இந்திய அரசு, இந்திராகாந்தி பல்கலைக்கழகம் (IGNOU), இந்திய தரக்கட்டுபாட்டு மையம் ஆகியவற்றுடன் இணைந்து வழங்கப்படுகிறது. மேலும் ஜனரஞ்சகமான பத்திரிகைகள், ஆய்வு கட்டுகரைகளை வெளியிடும் மருத்துவ இதழ்கள் மூலமாக தரமான மருத்துவ கட்டுரைகளும், மருத்துவ ஆலோசனைகளும் வெளியிடப்படுகிறது.

தரமான மருந்துகளை தயாரிக்கவும், தரமான மூலப்பொருட்களை உபயோகப்படுத்தி தயாரிக்கவும் வழிமுறைகள் இங்கு கற்றுத் தரப்படுகிறது. சரியான உபகரணங்களை உபயோகித்து மருந்துகள் தயாரிக்கவும் கற்றுத் தரப்படுகிறது.

நோக்கம் நல்லதாக இருக்கும் பொழுது இணைந்து செயல்பட எல்லோரும் வருவது இயற்கைதானே இப்படித்தான் இந்திய அரசாங்கமும், தமிழ்நாடு இன்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் (TIIC) ஆகியவை பெருமளவில் CTMR ன் வளர்ச்சி பணிகளில் உதவி புரிகின்றன. கணவாய்புதூரில் உள்ள AMR நிறுவனம் சேலம் சாரதா நிகேதன் கல்லூரியில் ஒரு மருத்துவரை நியமித்து பொது மக்களுக்கு CTMR மூலமாக மருத்துவ சேவை செய்து வருகிறது.

AIM for Seva என்ற அமைப்பு தயானந்த சரஸ்வதி அவர்களின் உதவியுடன் மிகச் சிறப்பாக நடக்கிறது. ஆனைகட்டியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு மருத்துவ பயிற்சியும் தங்களை தற்காத்துக் கொள்ள முதலுதவி பயிற்சியும் கொடுக்கப்படுகிறது.

ஆதிவாசிகளில் இருக்கும் முப்பத்து ஆறு இனங்களில் இருளர்கள், குறும்பர்கள், காட்டு நாயக்கன் ஆகியவர்களை தங்களுடைய ஆய்வுக்காக இவர்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். ஆங்கிலேயர்களின் ஆதிக்க காலத்தில் இருந்தே ஆம்பூர், வாணியம்பாடி, ராணிபேட்டை குடியாத்தம் ஆகிய ஊர்களில் தோல் தொழிற்சாலைகளும், பீடி சுற்றும் தொழிற்சாலைகளும் பெருமளவில் இருந்து வருகின்றன.

இந்த தொழிற்சாலைகளால் காற்றும், தண்ணீரும் மிகவும் மாசுபடுகிறது. இதனால் இங்குள்ள மக்களின் ஆரோக்கியம் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இங்குள்ள மக்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட இந்த நிறுவனம் பல முயற்சிகளை செய்து வருகிறது. இன்னும் பல வழிகளில் செயல்படும் இவர்களின் செயல்பாட்டை மேலும் பார்ப்போம்.

-    தொடரும்

Try to http://paper-writer.org/ make smooth links between paragraphs

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு ஆராய்ச்சி மையம் –பகுதி 2”

அதிகம் படித்தது