மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு ஆராய்ச்சி மையம்

ஆச்சாரி

Mar 8, 2014

அடுத்த மாதம் மருத்துவரைப் பார்க்க இந்த மாதமே முன்பதிவு செய்யவேண்டும், அவ்வளவு பிரபலமான மருத்துவராம். சரி எப்படியோ ஒரு மாதம் கழித்து பார்த்தாலும் உடல்நிலை நன்றாகஆனால் சரி. எப்படியும் மருத்துவரைப் பார்க்கும் நாளன்று சீக்கிரமே கிளம்பி விடுவோம். மதிய உணவு கூட வெளியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று பேசுபவர்களை நாம் அதிகமாகப் பார்க்க முடிகிறது.

இப்படிப்பட்ட மருத்துவர்களின் நடுவே, எங்களிடம் வருபவர்களுக்கு முதலில் ஆரோக்கியத்தைத்தான் நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம். அதனால்தான் எங்கள் சேவை மையங்களை மருத்துவமனை என்று சொல்லாமல் ஆரோக்கிய மையம்” என்று சொல்கிறோம். எங்கள் ஆரோக்கிய மையங்களில் (Health centers),எங்களைச் சுற்றி நோயாளிகளை விட ஆரோக்கியமானவர்களையே பார்க்க விரும்புகிறோம் என்று இரண்டு மருத்துவர்கள் சொன்னால் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

அப்படி இரண்டு மருத்துவர்களையும்,அவர்கள் நடத்தும்,அவர்களோடு இணைந்து செயல்படும் நிறுவனங்களைப் பற்றியும்தான் நாம் இந்தத் தொடரில் பார்க்கப்போகிறோம். இந்த வியங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம், மருத்துவர் திரு.உஸ்மான் அலி அவர்களையும்,மருத்துவர் திரு.திருநாராயணன் அவர்களையும் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

வைத்தியர் என்பது வெறும் அடைமொழிச் சொல் அல்ல. படித்து வாங்கிய பட்டம் என்பதற்கு மேல், இதற்கு இன்னமும் பொருள் இருக்கிறது. பண்டைக் காலத்தில் வாழ்க்கைமுறை, பண்பாடு, கலாச்சாரம், ஆன்மீகம், நோய்நீக்கம், விவசாயம் (உழுவுதல், நடவு செய்தல், அறுவடை செய்தல்), நல்லநாள், முகூர்த்தம் பார்த்தல், சோதிடம் என்று எல்லாம் தெரிந்தவரையே வைத்தியர் என்றார்கள். இந்த வித்தைகளை எல்லாம் நன்றாகக் கற்றவரே வைத்தியர் என்று அழைக்கப்பட்டார். இப்படிப்பட்ட வைத்தியர்களுக்கு சமூகத்தில் ஒரு உயரிய மதிப்பு இருந்தது. வைத்தியமும்,சோதிடமும் ஒன்றையொன்று சார்ந்த துறைகளாகவே இருந்தது. இப்பொழுதும் கூட திபெத்தியர்களின் மருத்துவ கல்லூரி “Tibetan Medical and astrological institute”என்றுதான் அழைக்கப்படுகிறது.

இவற்றில் சித்தவைத்தியம்,பாரம்பரிய வைத்தியம் ஆகிய முறைகளை தமிழ்நாட்டில் கொண்டுவர மருத்துவர்.திரு.உஸ்மான் அலியும்,மருத்துவர் திரு.திருநாராயணனும் ஏற்படுத்திய அமைப்புதான் பாரம்பரிய மருத்துவ முறைகளும் அதன் ஆராய்ச்சியும்“Centre for traditional medicine and research”(CTMR) என்று இந்த அமைப்பை சுருக்கமாக அழைக்கலாம்.

உயரிய நோக்கங்களுடன் 2000-வது ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இன்று தன்னுடைய14 வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

மருத்துவர் திரு.உஸ்மான் அலியும்,மருத்துவர் திரு.திருநாராயணனும்CTMRன் நோக்கங்கள் என்ன என்பதில் மிகவும் திடமாகவும்,தெளிவாகவும் இருக்கிறார்கள்.

அவை

1. மரபு வழி மருத்துவம் (traditional medicines)

2. பொது சுகாதாரத்தை, பாரம்பரிய முறையில் நடைமுறைக்குக் கொண்டுவருவது.

3. பாரம்பரிய மருந்துகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

4. எல்லோரும் வாங்கும்படி விலைகுறைவாகவும் (cost effective),தரமாகவும் (Quality)உள்ள மருந்துகளை தயாரித்தல்.

5. பாரம்பரிய மருந்துகளில் ஆய்வு மேற்கொள்ளுதல் (Research).

6. பாரம்பரிய மருத்துவ அறிவை ஆவணப்படுத்துதல் (Documentation of ancient medicines)

இந்த ஆவணப்படுத்தும் முறையில் முதலில் வருபவை:

பனை ஓலைச்சுவடிகள்தான் (Palm manuscripts)பழங்காலத்து ஓலைச்சுவடிகளை முதலில் சேகரித்து அவற்றை முறைப்படுத்துதல்,அவற்றிலிருந்து பொருள் அட்டவணை தயார் செய்தல் (catalogue),அவற்றை பாதுகாக்கும் வழிமுறையை பின்பற்றுதல், ஓலைச்சுவடிகளின் எழுத்துக்கள் நன்றாகத் தெரியும்படி அவற்றை மின்பதிவு (digitalize)என்ற முறையில் செயல்பாடுகள் இருக்கின்றன.

(பின்குறிப்பு) பொதுமக்கள் தங்களிடம் ஓலைச்சுவடிகள் இருந்தால் இந்த அமைப்பிடம் (CTMR)கொடுக்கலாம். அவர்களும் அதில் மருத்துவசம்பந்தமான குறிப்புகள் இருந்தால் அவற்றை மின்பதிவு செய்துவிட்டு ஓலைச்சுவடிகளை திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். மருத்துவ குறிப்புகள் இல்லாத சுவடிகளை அவை எது சம்பந்தப்பட்டது (ஆலயம்,மாந்திரிகம்,மற்றபிற செய்திகள்) என்று மட்டும் சொல்வார்கள். அதற்கு விளக்கம் சொல்லவோ அல்லது மின்பதிவு செய்து தருவதோ கட்டாயமாக இயலாது என்பது குறிப்பிடப்படவேண்டிய செய்தியாகும்.

-    ஆரோக்கிய வாழ்வு தொடரும்.

 

Initially, I identified five categories to capture the types of frames of the introductions, representing different approaches I knew students www.writemypaper4me.org employed in their texts

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு ஆராய்ச்சி மையம்”

அதிகம் படித்தது