மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இடியாத கரையும் , மாறாத பாடமும்

ஆச்சாரி

Sep 15, 2012

சில நேரங்களில் நாம் என்ன செய்கிறோம் என்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு அதை எந்த நேரத்தில் செய்கிறோம் என்பது முக்கியம். இன்று உலகெங்கும் தமிழ் மக்கள் தங்களுக்கான உரிமைகளை பெறுவதற்காக ஒன்றுபடத் தொடங்கும் வேலையில் எந்தெந்த போராட்டங்களை , யாருக்கு எதிராக , எந்த நேரத்தில் செய்கிறோம் என்பதை ஒட்டு மொத்த தமிழினத்தின் நலன் சார்ந்து சிந்தனை செய்ய வேண்டிய அவசியம் வந்து விட்டது.  கடந்த ஒரு மாதத்தில் நடந்த நிகழ்வுகள் அதை நமக்குத் தெளிவாகப் புரிய வைக்கின்றன. தமிழின உணர்வுகளை எதிரிகள் அடக்க முயன்று எதிரிகள் இன்று அதில் தோல்வி அடைந்து இருக்கின்றனர்.  ஆனால் நியாயமான தீர்வுகளைத் தருவதற்கு பதிலாக இன்று நமது உணர்வுகளின் முனைகளை  ஒன்றுடன் ஒன்று மோத விடும் திட்டங்களையும், தேவையான நேரத்தில் தமிழர்களின்  சக்தியை தேவையான இடத்தில் அதை  குவித்து போராட முடியாமல் திசை திருப்பும் வேலையையும் இன்று நமது எதிரிகள் கன கச்சிதமாக நிறைவேற்றி வருகின்றனர். இதை முறியடிக்க தமிழர்கள் ஆழமான திட்டங்களை வகுக்க வேண்டும்.

2009  இல் முள்ளிவாய்க்கால் தமிழர்களுக்கு போராட்டக் களம் என்றால் இன்று  நமக்கு முக்கியம் கூடங்குளம்.  கடந்த மாதத்தில் மட்டும் கூடங்குளத்தில் தமிழர்களின் கவனம் செல்லாமல் இருக்க என்னென்ன நாடகங்கள் நடத்தப்பட்டன என்று பாருங்கள்.

கருணாநிதியின் டெசோ மாநாடு.
ஜெயலலிதாவின் சிங்கள மாணவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை.
ராஜபக்சேயின் இந்திய வருகையும் அதற்கான எதிர்ப்பு அரசியலும்.

ஏன்! கூடங்குளத்தில் பிரச்சினை உச்சகட்டத்திற்கு வந்த இரவு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கேவலமாக சித்தரித்து இலங்கை பத்திரிக்கையில் வெளி வந்த கேலிச் சித்திரம்.

திசை திருப்புவது மட்டுமல்ல. தமிழர்களை ஒருவருடன் ஒருவர் மோத வைக்க கையாளப்பட்ட யுக்த்திகளை பாருங்கள்.

தமிழக மீனவர் விவகாரத்தில் பிரச்சினையை தமிழக மீனவர்க்கும் ஈழத் தமிழ் மீனவர்களுக்கும் உள்ள பிரச்சினையாக சித்தரிப்பது. கூடங்குளம் போராட்டத்தை சாதி சமயம் சார்ந்த போராட்டமாக சித்தரிப்பது.

இதில் கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும். எது நடந்தால் தமிழர்களுக்கு பெரிய பயன் இல்லையோ , ஆனால் அடையாள வெற்றியோ அதை நோக்கி தமிழ் உணர்வாளர்களின் கவனத்தை திருப்பும் வேலை இடைவிடாது நடந்து கொண்டு இருக்கிறது. தமிழர்களின் கவனம் வேறு எங்கோ இருக்கும் போது நமக்கு மாறாத காயத்தை ஏற்படுத்தும் வேலைகள் நம் காலுக்கு கீழே நடந்து கொண்டிருக்கும். ராஜபக்சேயின் மத்திய பிரதேச விஜயம் கண்டிப்பாக நமக்கு பிடிக்காத ஒன்று தான். ஆனால் கூடங்குளம் முக்கியமா?. இல்லை இது முக்கியமா?. சிங்கள நபர்கள் தமிழகத்திற்கு வருவது என்பது அன்றாடம் நடக்கிறது. கண்டிப்பாக நமக்கு இதில் உடன்பாடு இல்லை. ஆனால் தமிழக அரசின் திடீர் நடவடிக்கைக்கு காரணம் என்ன?. கூடங்குளத்தின் போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் , தமிழ் தேசியத்திற்கு அதன் அவசியத்தையும் உணர்ந்த நபர்களுக்கு  ஜெயலலிதாவின் திடீர் நடவடிக்கையின் காரணங்களை உணர்ந்து கொள்ள சிரமப்பட வேண்டி இருக்காது.

இதை யார் செய்கிறார் என்பது நமக்கு முக்கியமல்ல. யார் திட்டமிடுகிறார் என்பதும் முக்கியமல்ல. அதைப்  பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமும்  இல்லை. நமக்கு முக்கியம் ஒன்று தான்.  நமக்கு ஒரு நேரத்தில் எது முக்கியமான வேலை என்பது நமக்கு நன்றாக தெரிந்து இருக்க வேண்டும். அந்த விடயத்தை நோக்கி நமது அனைத்து சக்தியையும் குவிப்பது என்பதில் தான் இருக்கிறது தமிழ் தேசியத்தின் வெற்றி. கூடங்குளத்தில் போராடிய மக்களின் பின்னர் நமது சக்தியை குவிப்பதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.

ஆனால் கூடன்குளத்தோடு இது முடிந்து விடப் போவதில்லை. ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை பார்க்கும் போது ஒன்று தெளிவாகப் புலப்படுகிறது. ஈழத்தில் தற்போது தமிழ் தேசியம் எதுவும் பெரிதாக சாதித்து விட முடியாது என்று அவர் கணக்கு போடுகிறார். அதனால் ஈழத்திற்காக சில விடயங்களை செய்து கொடுப்பதாக காட்டிக் கொள்வதில் மூலம் தமிழ் தேசியத்தின் ஆணி வேறான தமிழ்நாட்டை அடியோடு அடிமைப்படுத்தும் திட்டங்களை அவர் தீட்டுவதை  அவரின் நடவடிக்கைகளை  கூர்ந்து கவனிப்பதின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.கூடங்குளம் என்பது  ஜெயலலிதா மாறி விட்டாரா என்பதற்கு வைக்கப்பட்ட தேர்வு. ஜெயலலிதா மாறாதது மட்டுமல்ல முன்னை விட ஆபத்தான , நயவஞ்சகமான அரசியல்வாதியாக மாறி இருப்பது அவரின் சமீபத்திய நடவடிக்கைகளில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க கிட்டத்தட்ட காங்கிரஸின் அடிமையாகவே மாறி இருக்கும் சூழ்நிழையில் தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கும், தமிழ் தேசியத்தை சார்ந்த கட்சிகளுக்கும் போராட்டத்தை நேர்த்தியாகவும், நுணுக்கமாகவும் நடத்தி செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கான திறமைகள் இன்று தமிழ் தேசியத் தலைமைகளிடம்  இருக்கின்றன. ஆனால் தங்கள் கட்சிகளின், பிராந்தியங்களின், கூட்டணிகளின் நலனை முன்னிறுத்தாது  ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தின் நலனை முன்னிறுத்தி   அவர்கள் முடிவு எடுப்பார்களா என்பது  இன்று நமக்கு முன்னே உள்ள ஒரு பெரிய கேள்வி.

தமிழர்கள் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். கூடன்குளமானாலும் சரி , முள்ளிவாய்க்கால் ஆனாலும் சரி களமும் , எதிரியும் ஒன்று தான். ஒன்று மற்றொன்றை விட முக்கியம் வாய்ந்தது அல்ல. எல்லாமே நமக்கு முக்கியம். ஆனால் போரின் நேரத்தையும், போரின் தன்மையையும் நாம் தீர்மானிக்க வேண்டும். எதிரி தீர்மானிக்க நாம் அனுமதிக்க முடியாது.

Providing workshops on internet core assessment criteria can be helpful but, if voluntary, these are attended by relatively few students norton et al

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “இடியாத கரையும் , மாறாத பாடமும்”
  1. vaaimai says:

    அருமையான கட்டுரை. தமிழக மக்கள் இனியாவது விழித்துக்கொள்ளவேண்டும்.

  2. kasi visvanathan says:

    நாம் என்ன செய்கிறோம், என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு, போராடும் இனத்திற்கு இருக்க வேண்டும். போராடாத இனம் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. இன்றைய உறக்கம் நாளைய நம் இனத்தின் (சவ) அடக்கம். நமது இலக்கம், இலக்கு என்பதனை புரிந்து கொண்டால் வெற்றி என்பது கையகப்படும்.

அதிகம் படித்தது