மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்திய விளையாட்டுத் துறையின் அலட்சியம்!

ஆச்சாரி

Aug 15, 2012

ஒலிம்பிக்கில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருந்து வருகிறது. ஹாக்கியில் தங்கப்பதக்கம் வென்றது ஒரு பழங்கதையாகிவிட்ட நிலையில், இனி தங்கப்பதக்கம் வெல்வது கானல் நீர்தான் என்று 100 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் மனதில் ஒரு ஏக்கமாவே இருந்து வருகிறது.

இந்தியாவை விட வளர்ச்சி, மக்கள் தொகை, நிலப் பரப்பு என எல்லாவற்றிலும் மிக மிக சிறிய நாடுகள் கூட ஒலிம்பிக்கில் பதக்கங்களை வாங்கி குவிக்கும் போது, இந்தியா மட்டும் ஒரு பதக்கம் வெல்வதே அதிசயமாக இருப்பது வெட்கக்கேடான விஷயம். கடந்த 2008 ஆம் ஆண்டு பீஜீங் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவின் கனவை நனவாக்கினார் அபினவ் பிந்த்ரா. மேலும், குத்துச்சண்டையிலும், மல்யுத்தத்திலும் இந்தியாவுக்கு வெண்லப்பதக்கம் கிடைக்க, பீஜிங் ஒலிம்பிக்தான் இந்தியாவுக்கு சிறந்த ஒலிம்பிக் என்று எல்லா இந்தியர்களும் மகிழ்ந்தனர்.

இந்த நிலையில்தான் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு எல்லா நாடுகளும் தயாராகின. ஒலிம்பிக் போட்டி தொடங்கிவிட்ட நிலையில், ஆண்கள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் அனுபவ வீரர்கள் லியாண்டர் பயஸ் & மகேஷ் பூபதி ஜோடி சேர்ந்து விளையாடுவார்கள் என்று இந்திய டென்னிஸ் சங்கம் முதலில் அறிவித்தது. இதற்கு பூபதி தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. ‘பயசுடன் இணைந்து விளையாட வற்புறுத்தினால் லண்டன் போக மாட்டேன்‘ என்று பூபதி முரண்டு பிடித்தார்.
என்னடா இது வம்பு என்று குழம்பிய டென்னிஸ் சங்கம், ‘பூபதி விளையாட முன்வராவிட்டால் பயசுடன் போபண்ணா ஜோடி சேர்வார்‘ என்றது. ‘அதெல்லாம் முடியாது, ஒலிம்பிக் போட்டிக்காகத்தான் பூபதியுடன் சேர்ந்து பயிற்சி செய்து வருகிறேன். எங்களை பிரிப்பதாக இருந்தால் ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணிப்பதை தவிர வேறு வழியில்லை‘ என்று போபண்ணாவும் பின் வாங்கினார். வீரர்களின் எதிர்பாராத எதிர்ப்பால் அதிர்ச்சியில் இருந்த டென்னிஸ் சங்கம், சமரச முயற்சியாக இரண்டு அணிகளை தேர்வு செய்தது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் பூபதி & போபண்ணா ஒரு ஜோடியாகவும் இளம் வீரர் விஷ்ணுவர்தனுடன் இணைந்து லியாண்டர் பயசும் களமிறங்குவார்கள் என அறிவித்துள்ளது. பயசை சமாதானம் செய்யும் விதமாக, கலப்பு இரட்டையர் பிரிவில் அவருடன் இணைந்து சானியா மிர்சா விளையாடுவார் என்று சமாதான முயற்சி செய்தனர். நாட்டுக்காக விளையாடும் விஷயத்தில் சொந்த விருப்பு வெறுப்புகளை முன்வைத்து சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்ட வீரர்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்டு, முழுக்க முழுக்க இளம் வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்திருக்க வேண்டும் என்று டென்னிஸ் ரசிகர்கள் அப்போதே சொன்னார்கள். அது உண்மையாகி விட்டது.

ஈகோவுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாட்டு நலனை லியாண்டரும், பூபதியும் புறந்தள்ளியது பெருத்த வேதனை. விளைவு, பதக்கம் வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு பறி போய்விட்டது. நாங்கள்தான் சேர்ந்து விளையாடுவோம் என்று அடம் பிடித்த மகேஷ் பூபதி & போபண்ணா ஜோடி, 2வது சுற்றுடன், நாட்டுக்கு மூட்டை கட்டியது. இதற்கு ஜூனியர் வீரர் விஷ்ணு வர்தனுடன் விளையாடிய லியாண்டர் பயஸ் சிறப்பாக விளையாடினார் என்றுதான் கூற வேண்டும். மகேஷ் அல்லது போபண்ணாவுடன் லியாண்டர் ஜோடி சேர்ந்திருந்தால், ஒரு வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பாவது இந்தியாவுக்கு கிடைத்திருக்கும்.

நாட்டின் பெருமை, கவுரவத்தை விட எங்களின் ஈகோதான் எங்களுக்கு முக்கியம் என்று மகேஷ், போபண்ணா கருதியதால், பதக்கமும் போயிற்று. நமது மதிப்பும் தரம் தாழ்ந்தது. நீயா நானா என்ற போட்டியில் காட்டிய வேகத்தை ஒலிம்பிக் போட்டியில் காட்டியிருந்தால் கூட பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கலாம்.

விளையாட்டு அமைப்புகள், தனிப்பட்ட வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. நாட்டுக்கு எது முக்கியமோ அதைத்தான் செய்ய வேண்டும். வீரர்களின் ஈகோவுக்கு அகில இந்திய டென்னிஸ் சங்கம் அடிபணிந்ததால் பதக்க வாய்ப்பை இந்தியா இழந்ததுதான் ஒரே பரிசு.

However, after scrolling past a few whispers it www.cellspyapps.org/ becomes apparent that many users are posting questions asking for people to contact them

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்திய விளையாட்டுத் துறையின் அலட்சியம்!”

அதிகம் படித்தது