மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இலங்கைக்கு எதிரான தமிழக மாணவர்கள் போராட்டம் - சிறப்பு கண்ணோட்டம்-3

ஆச்சாரி

Mar 25, 2013

      இலங்கைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தமிழகமெங்கும் ஆங்காங்கே வெடித்துக் கிளம்பிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டம் வாரியாக, தாலுகா வாரியாக, ஊராட்சி வாரியாக உள்ள கலைக்கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி, மருத்துவக்கல்லூரி , சட்டக்கல்லூரி, பாலிடெக்னிக், தமிழ் அமைப்புகள், இயக்கங்கள் எனப் பலவாறான கல்லூரி மாணவர்களும், அமைப்புகளும் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான போராட்டத்தில் 12 வயது பாலகனான பாலச்சந்திரனின் பதாகைகளை ஏந்திக்கொண்டு வெயில் என்றும் பாராமல் சாலைகளிலும், மெரினா கடற்கரையிலும் அமர்ந்து போராடி வருகின்றனர்.
நேற்று பிக் எம்.எம்.- மில் ஒபி என்ற வானொலிப் பெண் வர்ணனையாளர் பல கல்லூரி மாணவர்களிடம் ஒருகருத்தை விவரித்து கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். அதாவது அரசு காலவரையற்ற விடுமுறை அளித்தப் பின்பு மாணவர்களாகிய நீங்கள் எப்படி ஒன்று கூடுகிறீர்கள் இந்தப் போராட்டத்திற்காக, எனக் கேட்டதும் பல மாணவர்கள் அளித்த பதிலாவது நாங்கள் எஸ்.எம்.எஸ். மூலமாகவும், குறிப்பாக முகப்பு புத்தகம் (Face Book) மூலமாகவும் மாணவர்களோடு பேசிக் கலந்துரையாடி எங்கள் போராட்டக் களத்தை நிர்ணயித்து, அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் இதன் மூலமே ஒருங்கிணைத்துப் போராடி வருகிறோம் என்றார். மேலும் ஒபி கேட்டதாவது
இந்தப் போராட்டத்திற்கு நீங்கள் செல்லும் போது உங்கள் வீட்டில் அம்மா, அப்பா, அண்ணன், அக்கா போன்றோர், போகாதே எனத் தடுக்கவில்லையா? எனக் கேட்டதற்கு, பெரும்பாலான மாணவர்கள் அளித்த பதில் “நல்லபடியா போயிட்டு வா” என்பதே. ஆக போராடுகின்ற மாணவர்களுக்குப் பின்புறத்தில் அவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கம் கொடுத்து அனுப்பி வைப்பது போராட்ட வெற்றிக்கு அடித்தளமாக அமைகிற ஒரு செயலாகவே உள்ளது.
மறுபுறம் மதுரையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இணைந்து கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையத்திற்குப் பூட்டுப் போட்டு போராடி வருகின்றனர். அப்போது அமெரிக்காவின் தீர்மான நகலை எரித்தும், ராஜபக்சே உருவ பொம்மைக்கு தீ வைத்தும் கொளுத்தினர். நெல்லை மனோன்மணியம் சுந்தனார் பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் உண்ணாவிரதம் இருந்தும், நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் 13 பேரும், பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மாணவர்கள் 11 பேரும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இதில் தமிழீழ விடுதலை மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 20 பேரும் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 125 சட்டக்கல்லூரி மாணவர்களைப் போலீசார் கைது செய்தனர். அதே நேரம் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் 3-ல் புறப்படுவதற்குத் தயாராக இருந்த வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் தண்டவாளப்பகுதியில் அமர்ந்து கொண்டனர். ராஜபக்சேவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து கோசங்களை எழுப்பினர். இதனால் 1 மணி நேரமத்திற்கு முன்பு புறப்பட வேண்டிய ரயில் தாமதமானது.
மறுநாள் 14.3.2013 வியாழன் அன்று தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டம் தீவிரம் அடைந்தது. திருச்சி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் 7 பேர் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். இதில் சிலர் பிரதமர் மன்மோகன்சிங், ராஜபக்சே உருவபோம்மைகளைத் தீயிட்டு எரித்தனர். இதே போல் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலைக்கல்லூரியில் 10-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருந்தனர். காட்டூர் தனலட்சுமி கல்லூரியில் மாணவ-மாணவிகள் சுமார் 500 பேர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். புனித ஜோசப் கல்லூரியில் 10 மாணவர்களும், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகன் கலைக்கல்லூரி, திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி, அரியலூர் கலைக்கல்லூரி, புதுக்கோட்டை மன்னார் கலைக்கல்லூரி, தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், கோவை அரசு சட்டக்கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி, நெல்லை சட்டக்கல்லூரி, பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி, புதுச்சேரி சட்டக்கல்லூரி, ராஜீவ் கலைக்கல்லூரி, தாபர் கலைக்கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி போன்ற பல கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் பலர் சோனியா, ராஜபக்சே, மன்மோகன்சிங் உருவ பொம்மைகளை எரித்தும் உண்ணாவிரதம் இருந்தும், வகுப்புகளை புறக்கணித்தும், உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியும், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டும், ரயில் மறியல் செய்தும், போராட்டம் நடத்தினர். இவர்களில் பல அமைப்புகளைச் சந்தித்து நாம் தமிழர் கட்சி சீமானும், பழ.நெடுமாறன் அவர்களும் வாழ்த்து தெரிவித்தும், பங்கெடுத்தும் வருகின்றனர். இதில் உண்ணாவிரதம் இருந்த பல மாணவ-மாணவிகளை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமத்தித்த நிகழ்வுகளும் பல நடந்தன.

வழக்கரிஞர்கள் உண்ணாவிரதம்:

         இலங்கை பிரச்சனை தொடர்பாக சென்னை ஐகோர்ட் வளாகத்தில் கேசவன், ரவி என்ற இரு வக்கீல்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இரவிலும் இதைத் தொடர்ந்தனர். ஐகோர்ட் வளாகம் உயர் மட்ட போலிஸ் பாதுகாப்பு வளாகத்தில் உள்ளதால் அங்கு இரவு நேரத்தில் உண்ணாவிரதம் போன்ற போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும் உடனடியாக உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் சொக்கலிங்கம் இரவில் கேட்டுக் கொண்டார். இரவு 9 மணி அளவில் பாதுகாப்புக் கமிட்டியில் இடம் பெற்றுள்ள நீதிபதிகள் சுதாகர், ரவிச்சந்திரன், தனபாலன் ஆகியோரும் ஐகோர்ட் வளாகத்திற்கு வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று வக்கீல்களிடம் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு வெளியேறுங்கள் என்றார்.
இந்த நிலையில் நீதிபதிகளின் வேண்டுகோளை ஏற்று இரவு 10.15 மணியளவில் உண்ணாவிரதம் இருந்த 3வக்கீல்களும் ஐகோர்ட் வளாகத்தை விட்டு வெளியேறினார்கள். பின்னர் அவர்கள் ஐகோர்ட் வளாகத்தின் ஆவின் கேட் முன்பு என்.எஸ்.சி. போஸ் சாலை ஓரத்தில் பாயை விரித்து அதில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கினர். இந்தச் சம்பவத்தால் ஐகோர்ட் பரபரப்புடன் காணப்பட்டது. இவ்வாறு உலக அரங்கில் தமிழனுக்கு நீதி கிடைக்க வேண்டி போராடுகின்ற இவர்களின் உணர்வு வியப்பில் ஆழ்த்தியது.

புழல் சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்:

       இந்த நிகழ்வுகள் எல்லாம் ஒருபுறமிருக்க, இலங்கையில் நடந்த இனப்படுகொலையைக் கண்டித்து இலங்கை அரசுக்கு எதிராகவும், அதிபர் ராஜபக்சேவைக் கண்டித்தும் சென்னை புழல் சிறையில் உள்ள தண்டனைக் கைதிகள் 23 பேர் இலங்கை அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக திடீரெனச் சாப்பிட மறுத்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதனால் சிறை போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இதுபற்றி சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் புழல் சிறையின் சூப்பிரண்டு கருப்பண்ணன் நேரில் சென்று உண்ணாவிரதம் மேற்கொண்ட கைதிகளிடம் சமரசம் பேசினார். மாலை 6 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர். இதனால் பாதுகாப்பு புழல் சிறையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் பல்வேறு கல்லூரி மாணவர்களும், தமிழ் அமைப்புகளும், அரசு சார்ந்த, அரசு சாராத இயக்கங்களும் போராட்டத்தில் குதித்து வருகின்றனர். அவ்வளவு எளிதில் இப்போராட்டம் நீர்த்துப் போக வாய்ப்பில்லை என்று மட்டும் நம்மால் உறுதிபட தெரிவிக்க முடியும். வளரட்டும் தமிழர்கள் போராட்டம். மலரட்டும் தனி ஈழம்.
ஒரு கோடி மாணவ-மாணவிகள் தமிழகமெங்கும் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டத்தில் பங்கேற்கும் மாணவர்கள் கீழேயுள்ள அலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் பொறுப்பாளர்களுடன் கலந்து உங்கள் போராட்டக்களத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள்.

1. சென்னை –      இ.ரா. திருமலை –9944224935
தினேஷ் -9791162911
கார்த்தி  -9791156568
2. திருச்சி –                                   சிவா -9940953705
தினேஷ் -9080808068
3. கும்பகோணம்                                   -9865370777

4. ஈரோடு –                       ராஜ்குமார் -8870422092
பிரகாஷ் -9976916787

5. கோவை-                          தினேஷ் -9944599425

6. சேலம் -                                  பாரதி -9894363191

7. இராமநாதபுரம் அப்துல்காதர் -9942915913

8. திண்டுக்கல் –                        ரவி -8220132507

9. மதுரை-          வெங்கட்ராமன் -9894438555

10. சிவகங்கை- சிவாஜி காந்தி -9865619350

11. விழுப்புரம்- எ.வி.சரவணன். -9443112017

12. திருவள்ளூர் -            திலீபன் -9840150597

13. காஞ்சிபுரம் -            அன்சாரி -9884715642
தாஸ் -8973061609

அலைகடலென திரண்டு வருக! வருக! அனைவரின் ஆதரவும் தருக! தருக!

                                                                                                         -போராட்டம் தொடரும்…

Suggestions are made for how faculty members and students may further their own development by help writing a essay means of intelligently planned activities coincident with and following the conclusion of the officially prescribed research process

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலங்கைக்கு எதிரான தமிழக மாணவர்கள் போராட்டம் - சிறப்பு கண்ணோட்டம்-3”

அதிகம் படித்தது