மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

2009 மே 18 நினைவு மௌன அஞ்சலி

ஆச்சாரி

Jun 4, 2011

 


2009
மே 18 ல் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு மௌன அஞ்சலி

2009 மே 18 ஆம் நாள், சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களுக்கு மௌன அஞ்சலி கூட்டம் விரிகுடா பகுதியில் உள்ள பாலோ ஆல்டோ நகரில் மே 21 2011 ஆம் நாள் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடை பெற்றது. வடக்கு கலிபோர்னியா தமிழர்கள் அமைப்பு இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. கூட்டத்தை TNC தலைவர் தொடங்கி வைத்தார். முதலாவதாக ஒரு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் டெர்ரி மெக்கப்ரே (TerryMcCaffrey) பாலோ ஆல்டோ நகர ஆம்நெஸ்டி அமைப்பாளர்), கிரிஷாந்தி தர்மராஜா (மனித உரிமை அமைப்பு மற்றும் ஆம்நெஸ்டி) மேலும் Global Tamil Forum அமைப்பின் தலைவர் பாதர் இம்மானுவேல் (ஐரோப்பாவிலிருந்து) ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ் ஆர்வம் உள்ள நண்பர்கள் பெருந்திரளாக வந்திருந்தனர்.

பாலோ ஆல்டோ நகர ஆம்நெஸ்டி (AmnestyInternational) அமைப்பாளர் டெர்ரி ம்க்கப்ரே (TerryMcCaffrey) பேசுகையில் தமது அமைப்பு இனப் படுகொலைகளை தடுக்க அயராது பாடு படும் என்றும் அதற்கான ஆதரவை பொது மக்கள் அளிக்குமாறு கேட்டு கொண்டார். மனித உரிமை அமைப்பு மற்றும் ஆம்நெஸ்டி அமைப்புகளில் பணியாற்றும் கிரிஷாந்தி தர்மராஜா பேசுகையில் மனித வாழ்வின் அமைதி பற்றி சிறந்த கருத்துகளை தெரிவித்தார். யாருக்கும் யாருடைய சுதந்திரத்தையும் பறிக்கும் உரிமை இல்லை என்றும், அனைத்து மனிதர்களும் சாதி , மத, இன வேறு பாடின்றி இவ்வுலகில் வாழ மனித உரிமை அமைப்பு போராடும் என்றும் தெரிவித்தார் . உலக தமிழர் பேரவை அமைப்பின் தலைவர் பாதர் இம்மானுவேல் (ஐரோப்பாவிலிருந்து தொலை தொடர்பு வாயிலாக) பேசுகையில் போருக்கு முன்னும் பின்னும் ஈழத் தமிழர் படும் துயரங்களை விவரித்தார். சமூக அக்கறை கொண்ட இளையோர் மற்றும் சான்றோர் ஓர் அணியாய் திரள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். TNC அமைப்பின் உப தலைவர் நன்றி உரை ஆற்றினார் . விழா இறுதியில், மலர் தூவி இன்னுயிர் நீத்த ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாலை 7 மணி அளவில் பாலோ ஆல்டோ நகர மத்தியில் உள்ள பொது இடத்தில, மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. உலக அமைதி , எல்லோருக்கும் எல்லா உரிமையும் கிடைக்க வேண்டும் , போரற்ற தேசம், மனித உரிமை பாதுகாப்பு, கருத்து சுதந்திரம்ஆகிய காரணங்களுக்காக போராடும் இந்த அமைப்புகளுக்கு நாம் ஆதரவை அளிப்போம். இது போன்ற இனப்படுகொலை இனி உலகில் எங்குமே நடக்கக்கூடாது.

Eliciting self-explanations http://www.writemypaper4me.org improves understanding

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “2009 மே 18 நினைவு மௌன அஞ்சலி”
  1. Kanian says:

    Hi,

    Please check the ‘Kusumbu’ here. We must have enough source/force to stop this type of nonsense.

    http://thoughtsintamil.blogspot.com/2011/06/blog-post_26.html

    by
    Kanian (Venkat)

அதிகம் படித்தது