உங்கள் உதவி தேவை…
ஆச்சாரிMar 8, 2014
டல்லாஸ்(யு.எஸ்): திண்டுக்கல்லில் வசிக்கும் 4 வயது சிறுவனின் நோய் சிகிச்சைக்காக 35 ஆயிரம் டாலர்கள் நிதியை, அமெரிக்காவில் தமிழர்கள் திரட்டிவருகிறார்கள். சிறுவனின் தாயாருடைய பால்ய சினேகிதி இந்த முயற்சியை முன்னின்றி செய்து வருகிறார்.
திண்டுக்கல்லைச் சார்ந்த சிறுவன் கௌதம் க்கு பிறந்த 6வது மாதத்திலிருந்தே பேட்டா தலேசிமியா (Beta Thalassemia) என்ற நோய்வாய்ப் பட்டுள்ளான்.
அப்போதிலிருந்தே மூன்று வாரங்களுக்கு ஒரு முறை ரத்த சிவப்பு அணுக்கள் ஏற்றப்பட்டு வருகிறது. கூடுதலாக oral Chelation தெரபியும் கொடுக்கப்படுகிறது. கடந்த நான்கு வருடங்களாக இந்த சிகிச்சைக்காக, ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து வருகிறார்கள்
20 லட்ச ரூபாய்
Bone Marrow Transfusion எனப்படும் எலும்பு மஜ்ஜை ஆப்ரேஷன் செய்யும் வரை, ரத்த மாற்று சிகிச்சையை மூன்று வாரங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து செய்து வர வேண்டும். எலும்பு மஜ்ஜை சிகிச்சை செய்தால் மட்டுமே நோய் தீரும் என்ற நிலையில், இந்த சிகிச்சைக்காக 20 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. ஏற்கனவே நான்கு வருடங்களாக சிகிச்சைக்காக கடன் வாங்கி செலவு செய்து வரும் வங்கி ஊழியரான தந்தைக்கு வேறு பொருளாதார வசதியில்லை.
மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் இந்த எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை நடைபெற உள்ளது, சிறுவனின் எட்டு வயது அக்காவிடமிருந்து தானம் பெற்று அறுவை சிகிச்சை மே மாதம் நடைபெற மருத்துவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.
உதவிசெய்ய முன்வந்த தாயாரின் அமெரிக்கத் தோழி
சிறுவன் கௌதமின் தாயாருடைய பால்ய வயது தோழி லேகா தற்போது அமெரிக்காவில் டல்லாஸில் வசித்து வருகிறார். தனது தோழியின் மகனுக்கு வந்துள்ள நோயை குணப்படுத்த ஏதாவது செய்தாக வேண்டும் என்ற யோசித்த அவர் தானே முன்னின்று சக தமிழர்கள், நண்பர்களிடம் நிதி திரட்ட முன்வந்துள்ளார்.
20 லட்சம் ரூபாய்க்கான 35 ஆயிரம் டாலர்களை எப்படி திரட்டுவது என்று யோசித்த அவருக்கு , குடும்ப நண்பர்களும் உதவிக்கரம் நீட்டியுள்ளார்கள். தங்கள் பங்காக ஒரு தொகையை கொடுத்து விட்டு மீதம் உள்ள தொகைக்காக நண்பர்கள், சக தமிழர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்காக இணையத் தளம் மூலம் அனைத்து விவரங்களையும் வெளியிட்டு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
இன்னும் 25 ஆயிரம் டாலர்கள் தேவை
இமெயிலிலும் ஃபேஸ்புக்கிலும் தகவல்களை பரிமாறிக்கொண்டு இதுவரையிலும் 11 ஆயிரம் டாலர்களை திரட்டியுள்ளனர். இன்னும் 25 ஆயிரம் டாலர்களை அடுத்த 75 நாட்களுக்குள் திரட்ட வேண்டியுள்ளது.
உதவி செய்ய விரும்புகிறவர்கள் http://www.youcaring.com/medical-fundraiser/little-gowtham-needs-a-transplant-and-your-help-/138638 என்ற இணையப் பக்கத்தில் நன்கொடை வழங்கலாம்.
லேகாவுடன் அவரது கணவர் ராஜ் மற்றும் குடும்ப நண்பர்கள் விவேகானந்தன் வாசுதேவன், சௌந்தர் ஜெயபால் ஆகியோரும் உறுதுணையாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த முயற்சிக்கு ஆதரவாக, டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கமும் சங்க உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் தகவல் பெற helpgowtham@gmail.com என்ற இமெயில் முகவரியிலோ அல்லது 214-550-0161 என்ற அமெரிக்கத் தொலைபேசி எண்ணிலோ ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
இந்தியாவில் 87545 49747 என்ற எண்ணிலோ அல்லது tmk.samy@gmail.com என்ற இமெயில் முகவரியிலோ சிறுவனின் தந்தை முரளிகிருஷ்ணனிடம் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய வங்கியில் செலுத்த விரும்புகிறவர்கள்
Account Name:GOWTHAM KRISHNAN M
Account number 155701500133
Bank Name ICICI BANK LTD,
CITY NAME : KANGAYAM
IFSC CODE: ICIC0001557
SWIFT CODE: ICICNBBXXX
என்ற வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.
தமிழக உறவுகளுக்காக துடிக்கும் அமெரிக்கத் தமிழர்களின் இதயம் உண்மையாகவே போற்றப்படவேண்டியதுதான்.
In extreme cases, the student may need to lodge a grievance through the channels writing help to http://firstessaywritinghelp.com/ provided by the particular college or university
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “உங்கள் உதவி தேவை…”