மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உணர்திரை கணிப்பொறிகளும் தமிழும்

ஆச்சாரி

Nov 1, 2011

அண்மைக்காலத்தில் உணர்திரை (touch screen) கணிப்பொறிகளின்  பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள அதீதமான வளர்ச்சி கணிப்பொறி பயன்பாட்டை தமிழில் முழுமையாக கொண்டு வர ஒரு அரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்து இருக்கிறது.

உணர்திரை கணிப்பொறிகள் வெகு காலத்திற்கு முன்பே சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் கடந்த சில  வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் ஐ-பேட் (apple ipad) , உணர்திரை கணிப்பொறிகளுக்கு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை ஏற்படுத்தி தந்து இருக்கிறது. ஆப்பிள் ஐ-பேட்க்கு பின்னர் கூகிள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் மென்பொருள் சார்ந்த உணர்திரை கணிப்பொறிகளும், ப்ளாக்பெர்ரி நிறுவனத்தின் உணர்திரை கணிப்பொறிகளும் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு நல்லவளர்ச்சியை அடைந்து இருக்கின்றன. இந்த ஆண்டு மடிக்கணினி விற்பனை வளர்ச்சியை விட உணர்திரை கணிப்பொறிகளின் வளர்ச்சி மிக அதிகம்.

சரி! இதனால் தமிழுக்கு என்ன பயன் என கேட்கறீர்களா? கணிப்பொறியை தமிழில் பயன்படுத்துபவர்களுக்கு அதில் உள்ள மிகப்பெரிய தடை என்னவென்று தெரியும். கணிப்பொறியில் தமிழில் தட்டச்சு செய்ய ஒரு சரியான முறை இல்லை. தமிழுக்கு என ஒரு முறைப்படுத்தப்பட்ட விசைப்பலகை (keyboard) இல்லாதது, தொடர்ச்சியான தமிழக அரசுகளின் பாராமுகம் போன்ற காரணங்கள் கணிப்பொறி பயன்பாட்டிற்கு ஆங்கில விசைப்பலகை அவசியம் என்ற நிலையை ஏற்படுத்தின. கணிப்பொறியில் தமிழில் தட்டச்சு செய்வதற்கு கூட ஆங்கில விசைப்பலகை அவசியம் என்ற நிலை ஏற்பட்டது. ஆங்கில விசைப்பலகையில் தமிழ் எழுத்துக்களை ஒட்டி தமிழில் தட்டச்சு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. பின்பு தமிழை நேரடியாக தட்டச்சு செய்யாமல் ஆங்கிலத்தில் தமிழை தட்டச்சு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டு மக்களிடையே பிரபலமானது. இதற்கு ஒரு நல்ல உதாரணம் கூகிள் நிறுவனத்தின் இணைய பக்கம்

http://www.google.com/transliterate

தமிழுக்கு என ஒரு விசைப்பலகை தேவை என குரல்கள் எழுந்த போது தமிழில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் தமிழ் விசைப்பலகை கடினம் என்ற நகைப்புக்குரிய வாதங்கள் முன் வைக்கப்பட்டன. கணிப்பொறி கற்க ஆங்கிலம் அவசியம் போன்ற மூட நம்பிக்கைகள் படித்தவர்களிடையே கூட வேர் விட்டு வளர்ந்தன.

அதே நேரம் தமிழ் மொழியை தட்டச்சு செய்ய இன்னொரு மொழி தேவை என்ற நிலை தமிழ் உணர்வாளர்களிடையே தமிழுக்கு என ஒரு தனியான விசைப்பலகை செய்ய வேண்டும் என்ற ஒரு வேகத்தை ஏற்படுத்தி இருந்தது. தமிழை இணையத்தில் அதிகம்படிக்கப்படும் ஒரு மொழியாக ஆக்க பாடுபட்ட தமிழர்களால் இதில் இது வரை வெற்றி பெற முடியவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மிக முக்கிய காரணம் ஒரு புதிய விசைப்பலகையை உருவாக்க தேவைப்படும் நிதி ஆதாரங்களையும், தொழில்நுட்பத்தையும் தமிழர்களால் திரட்ட முடியவில்லை என்பதே ஆகும். தமிழ் எந்த நாட்டிலும் ஆட்சி மொழியாக இல்லாததால் நிறுவனங்களுக்கு இதில் முதலீடு செய்ய ஆர்வம் இருக்கவில்லை.

இதனால் தான் தமிழ் வளர்த்த மதுரைக்கு அருகில் உள்ள ஒரு மிகப்பெரிய விசைப்பலகை நிறுவனம் (டிவிஎஸ் - பெர்க் ) ஆங்கிலத்தில் விசைப்பலகைகளை லட்சக்கணக்கில் உற்பத்தி செய்த போதிலும், தமிழுக்கு என்று ஒரு விசைப்பலகை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அதற்கு தோன்றவில்லை.

அதனால் தான் இந்த உணர்திரைக் கணிப்பொறிகளின் வரவு தமிழுக்கு ஒரு அரிய வாய்ப்பு. இந்த உணர்திரை கணிப்பொறிகளின் விசைப்பலகை மென்பொருளால் உருவாக்கப்படுவது. இதை உருவாக்க மிகப் பெரிய முதலீடு தேவை இல்லை. ஆப்பிள் ஐ-பேட் போன்ற கணிப்பொறிகளுக்கு மென்பொருள் எழுத தெரிந்து இருந்தால் போதும். இதை பயன்படுத்தி தமிழர்கள் தமிழைகணிப் பொறியில் உள்ளீடு செய்ய எளிதான உணர்திரை விசைப்பலகைகளை உருவாக்க வேண்டும். முழுக்க முழுக்க தமிழில் பயன்படுத்தக்கூடிய கணிப்பொறிகளை உருவாக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம். தமிழர்கள் முக்கியமாக தமிழ் ஆர்வமுள்ள கணிப்பொறி வல்லுனர்கள் அல்லும் பகலும் இதற்காக உழைக்க வேண்டும். அதை அவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

வருங்காலத்தில் தனியான விசைப்பலகை என்பது இருக்காது. கணிப்பொறிகள் பெரும்பாலும் உணர்திரை சார்ந்தவையாகவே இருக்கும். அதில் தமிழ் எந்த மொழிக்கும் அடிமையாக இருக்காது.

How does the information in my sources mesh with https://www.eduessayhelper.org/ my research questions and help me answer those questions

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “உணர்திரை கணிப்பொறிகளும் தமிழும்”
  1. மு.இளங்கோவன் says:

    அன்புள்ள பிரபு கண்ணன்
    தமிழ் 99 விசைப்பலகை தமிழக அரசால் ஏற்பளிப்பு அளிக்கப்பட்ட நல்ல விசைப்பலகை. அதனை ஐபேடில் பயன்படுத்தும் வாய்ப்பை உருவாக்கினால் தமிழுக்கு மிகப்பெரிய ஆக்கமாக இருக்கும். ஐபேடில் செல்லினம் கொண்டு தட்டச்சிட முடிகின்றது.

    தங்கள் செறிவான கட்டுரைகளுக்குப் பாராட்டுகள்

    மு.இளங்கோவன்
    புதுச்சேரி

  2. kasi visvanathan says:

    “வருங்காலத்தில் தனியான விசைப்பலகை என்பது இருக்காது. கணிப்பொறிகள் பெரும்பாலும் உணர்திரை சார்ந்தவையாகவே இருக்கும். அதில் தமிழ் எந்த மொழிக்கும் அடிமையாக இருக்காது.” மிக நல்ல செய்தி. இது போன்ற எளிய அறிவியல் சார்ந்த கட்டுரைகள் வருவது அணைவருக்கும் நன்மை. நன்றி பிரபு கண்ணன்.

  3. kasi visvanathan says:

    மிக நல்ல கட்டுரை. கட்டுரை ஆசிரியருக்கு நன்றி. விசைப்பலகை என்ற ஒன்று இருந்த போதும் பாரா முகமாக இருந்த தமிழுக்கு இன்று தடையாக இருந்த ஒன்று கை நழுவுவதால் தமிழுக்கு கை கோடி வரும் இந்த நேரத்தை பயன் படுத்திக்கொள்வோம். நன்றி. இது பொன்ற எளிய விளக்க கட்டுரைகள், தொழில் நுட்பம் சார்ந்த கட்டுரைகள் தொடரட்டும்.

  4. vasudevan says:

    மகிழ்ச்சியன செய்தி

அதிகம் படித்தது