மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உணவாக மாறும் மூலிகைகள்

ஆச்சாரி

Jul 1, 2013

ஞாபக சக்தி வளர – வல்லாரை

மூட்டு வலி நீங்க – முடக்கத்தான்

மார்பு சளி நீங்க – தூதுவளை

எலும்புகள் பலம் பெற – பிரண்டை

ருசிக்கு – தேன் நெல்லிக்காய்

பசி எடுக்க – இஞ்சி மரப்பா

குழந்தைகளுக்கு – பழ ரொட்டி

பெரியோர்க்கு  – ஊறுகாய்

திருவிளையாடல் படத்தில் சிவாசி கணேசனும், நாகேசும்  பேசும் வசனம்  மனதில் தோன்றுகிறதா?

மேலே சொன்னவை எல்லாம் திரு.மணிகண்டன் அவர்களின் நிறுவனத்தில் உணவாக மாறுகின்றன. திண்டிவனம் இவரது ஊர்,பட்டப் படிப்பு முடிந்ததும் மேற்படிப்பாக இவர் படித்தது நரம்பியல். ஆனால் அவரது சிந்தனையோ யோகா,சித்த மருத்துவம் என்று இருந்தது. யோசித்து அவர் எடுத்த முடிவின் தயாரிப்புகள் தான் மேலே பார்த்த பொருட்கள்.துரித உணவு கலாச்சாரம் வளர்ந்து விட்ட இன்றைய நாளில், சாதாரண காய் கனிகளை கொண்டு உணவு சமைக்கவே மக்களுக்கு தெரிவது இல்லை. இந்த நிலையில் இவர் மூலிகைகளை உணவாக மாற்ற எண்ணினார். அவரது மனைவியின் ஒப்புதல் கிடைக்கவே ‘ஹெல்த் கேர்’ என்ற பெயரில் தயாரிப்புகள் ஆரம்பித்தன.

 

முதலில் முக்கியமான நான்கு மூலிகைகளின் பயன்பாட்டை உணவு முறையில் கொண்டு வர நினைத்தார் மணிகண்டன். அதன் விளைவாக பிரண்டை, தூதுவளை, வல்லாரை, முடக்கத்தான் ஆகியவற்றை அப்பளம், அப்பளப்பூ, ஊறுகாய் என சுத்தமாகவும், நேர்த்தியாகவும் தயாரிக்க ஆரம்பித்தார். ஊறுகாய் என்று வரும் போது  கடாரங்காய், நார்த்தங்காய், எலுமிச்சை போன்ற வழக்கமான ஊறுகாய்களும் தயாரிக்கப்பட்டன. குறிப்பிட்ட பருவங்களில் மட்டும் கிடைக்கும் ஜாதிக்காய் கூட இவர்கள் தயாரிப்பில் ஊறுகாயாக மாறியது. சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் வகையில் வாழைப்பூ,வாழைத் தண்டு ஆகியவையும் ஊறுகாய்களாக தயாரிக்கப்பட்டது.

இவை எல்லாமே எல்லாரும் உண்ணும் வகையில் இருந்தாலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற திரு.மணிகண்டனின் ஆர்வம் பழ வில்லையாகவும் (Cake) , உலர் பழ கலவையாகவும் உருவெடுத்தது. வல்லாரை, முடக்கத்தான், தூதுவளை, பிரண்டை ஆகியவற்றின் சாறுடன் ஏலக்காய், முந்திரி எல்லாம் சேர்த்து சிறு வில்லைகள் வடிவில் அமைக்கப்பட்டன.பள்ளி குழந்தைகளின் மதிய உணவில் தினம் எடுத்து செல்லும் அளவு ருசியுடனும்,சத்துடனும் உள்ள பழ வில்லை இது. பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சை, திராட்சை இவற்றுடன் தேன் கலந்து செய்த “நியூட்ரிமின்ட்” என்ற உலர் பழ கலவை இவர்களது தயாரிப்பில் முக்கிய அங்கம் வகிக்கக் கூடியது.

 அனைத்துக்கும் மணிகண்டனின் அருமையான தயாரிப்புகளுக்கு இவற்றின் ருசியே சாட்சியாக விளங்குகிறது. மணிகண்டன், உமா தம்பதியரின் நிறுவனம் மென்மேலும் வளர்ந்து தயாரிப்புகள் பெருகும் என்ற அழுத்தமான நம்பிக்கை நமக்குள் ஏற்படுகிறது. திரு மணிகண்டன் அவர்களின் தொடர்பு எண் : 98434 16256. முத்தாய்ப்பு வைத்து போன்று இஞ்சி மரப்பாவும் இங்கு தயார் ஆகிறது. சுத்தமான பனை வெல்லம், இஞ்சி சாறு கொண்டு தயாரிக்கப்படும் இந்த முரப்பா மிகவும் சிறந்த ஒன்று.எல்லாரும் பயன்படுத்தக்கூடிய தேன் நெல்லிக்காயும் இவர்களது தயாரிப்பில் ஒன்று. இன்னும் என்னென்ன தயாரிப்புகள் வரும் என்று நாம் ஆவலுடன் எதிர்நோக்கும்படி செய்துள்ளது மணிகண்டனின் உழைப்பு.

That is a great question, and we’re glad you care about the answer http://trackingapps.org

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உணவாக மாறும் மூலிகைகள்”

அதிகம் படித்தது