உலகின் மூன்றாவது துருவத்தில் உள்ள கொலைக்களம்
ஆச்சாரிJan 15, 2013
“போர் என்கிற ஒரு விளையாட்டில் மட்டும் இரு தரப்பினரும் தோல்வி அடைகின்றனர், வெற்றியாளர்கள் சரித்தர புத்தகத்தில் தீர்மானிக்க படுகிறார்கள்” -பெயர்தெரியாதவர்
மனித உயிர் மிகவும் விலைமதிப்பில்லாதது. நாடுகள் தங்கள் இடையில் உள்ள முரண்பாடுகாரணமாக, தேவை இல்லாமல் உயிர்கள் வீணடிக்கப்படுகிறது. மறுபடியும் அதே செய்தி!! சியாசேன் பணியாரில் சுமார் 12 பேர் பனிப் புயலால் மரணம். இது நடந்தது இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பனியாறு பகுதி. இறந்தவர்கள் இந்திய இராணுவத்தினர்!! அட போங்கய்யா!! அப்படி என்ன தான் நடக்கிறது இந்த இடத்தில்?? உலகத்தின் மிக உயிரமான இந்த போர்க்களத்தில் சண்டையே இல்லாமல் ஏன் வருடந்தோறும் உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன? இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இங்கு உள்ள முரண்பாடு என்ன? சில சுவையான நிகழ்வுகள் பல சோகமான உண்மைகளை இங்கு அலசிப் பார்ப்போம்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இங்கிலாந்து தங்களின் ஆக்கிரமிப்பில் இருந்த நாடுகளுக்கு விடுதலை அளிக்க முடிவு செய்தது. இந்திய காங்கிரஸின் இந்துத்துவ தீவிரப்போக்கினாலும், ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்புகளின் முஸ்லிம் விரோதப்போக்குகளாலும், ஜின்னாவின் பிடிவாதமான அரசியலாலும் இந்திய துணைக்கண்டம் பிளவுபட தயாரான சமயம் அது. அப்போதைய இந்தியாவில் இருந்த சில நூறு சிற்றரசுகள் தாம் விரும்பும்படி இந்தியாவுடனோ, பாகிஸ்தானிடமோ சேர ஒப்புக் கொண்டன. இதில் விதிவிலக்கு காஷ்மீர்பகுதி. காஷ்மீரை ஆண்டது ஹரி சிங் என்ற இந்து மன்னர், ஆனால் இவர் பகுதியில் வாழ்ந்தது 80 சதவிதம் இஸ்லாமிய மதத்தினர். பூகோளரீதியாக பாகிஸ்தான் பக்கம் இருந்தது. இந்த உண்மை அறிந்த மௌன்ட்பேட்டன் பிரபு, ஹரி சிங்யை ஜின்னாவிடம் பேச நிரப்பந்திதார். மன்னருக்கு இந்த யோசனையில் விருப்பம் இல்லையென்றால் இந்தியாவிடம் சேர வேண்டும் என்று ஆலோசனை விடுத்தார். ஹரி சிங்கோ காஷ்மீர் தனி நாடாக இருக்க விரும்புவதாக கூறினார். இதனை கேட்டு கோபம் அடைந்த மௌன்ட்பேட்டன் பிரபு, “உங்களின் இந்த முடிவால் இந்திய பாகிஸ்தானிடம் தீரா பகையை உருவாக்கும்” என்று ஏச்சரித்தார். இதனை சட்டைசெய்யாத மன்னர் தனிநாடாக தொடர்ந்தார். 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தான் அவசரப்பட்டு வஞ்சகமாக காஷ்மீரை கைப்பற்ற ஆசைப்பட்டது. மன்னர் வேறு விழியில்லாமல் இந்தியாவிடம் மாநிலத்தை ஒப்படைக்க முடிவு செய்தார். இதனை படேல் தந்திரமாக பயன்படுத்திக்கொண்டார். பின்பு 1947-48 நடந்த முதல் இந்திய-பாகிஸ்தான் போரின் முடிவில் இந்த அழகான மாநிலம் இரண்டாக பிரிவுபட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக் பகுதி இந்தியாவிடமும், கில்கிட், பல்டிச்டன், மற்றும் மாநிலத்தின் தென்மேற்கு பகுதில் உள்ள சின்ன திட்டு பகுதி பாகிஸ்தானிடம் சென்றது. இரண்டு பிரிவு இடையில் கட்டுப்பாடு எல்லைக்கோடு (Line Of Control) எற்படுத்தப்பட்டது. இதுதான் காஷ்மீரின் வரலாறு. பிறகு எங்கு வந்தது இந்த சியாச்சென் பனியாறு? சியாச்சென் பனியாறு பற்றி அலசுவோம் கீழே.
சியாச்சென் பனியாறு (Siachen Glacier) இமாலய மலைகளில் காரகோரம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இது இந்திய-பாக்கிஸ் ஸ்தான் எல்லைக்கோடு முடியும் NJ9842 என்ற இடத்துக்கு வடகிழக்கில் அமைந்துள்ளது. 1949 ஆம் ஆண்டுஏற்படுத்தப்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் சியாச்சேன் பனியாறு இல்லை.மனிதன் வாழ்வதற்கு ஒரு துளி கூட வழியில்லாத பகுதி இது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 22000 அடி(6700 meters) உயரம் கொண்டது. இங்கு நிலவும் தட்பவெப்பம் மினுஸ் 60 C. இப்பகுதி சிலசமயம் உலகின் மூன்றாவது துருவம்(Third Pole)என்றும் அழைக்கப்படுகிறது.இத்தனை ஆபத்து மிக்க பகுதியாக இருப்பதால் இந்தியாவும் பாகிஸ்தானும் 1960 வரை கண்டு கொள்ளவில்லை.
1950 களில் மலை ஏறுவதை பொழுதுபோக்காக கொண்ட மேற்க்குத்திர்,இமயமலையில் உள்ள உயரமான பனி மலைகளில் ஏறுவதில் மிகுந்த நட்டம் காட்டினர். உலகத்தின் இரண்டாம் உயரமான மலை K2 இருந்தது பாகிஸ்தானில். இதன் கிழக்கே உள்ள சில குன்றுகளுக்கு இங்கிலாந்தை சேர்ந்த ஒரு குழுவிற்கு மலை ஏற பாகிஸ்தான் 1957 இல் அனுமதி அளித்தது. சில வருடம் கழித்து இந்த குன்றுகளுக்கு பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் ஜப்பான் மலை ஏறுபவர்கள் உதவியோடு சியாசேன் பனியறையை வேவு பார்த்தது.அமெரிக்க இராணுவ வரைபடங்கள் 1967 முதல் சியாசேன் பகுதி பாகிஸ்தானில் இருப்புதாக காட்டின.இதனால் மலை ஏறுபவர்கள் 1970 முதல் சியாச்சேன் பகுதியல் உள்ள பனி மலைகளுக்கு ஏற பாகிஸ்தானிடம் அனுமதி கோரினார். 1972 இல் இந்திய பாகிஸ்தானிடயே ஏற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சிம்லா ஒப்ந்தத்தில் பனியாறு யார் கட்டுபாட்டில் உள்ளது எனபது பற்றி எந்த குறிப்பும் இல்லை. NJ9842 என்ற கட்டுபாட்டு எல்லை முடியும் இடத்துக்கு அடுத்து பனியாறுகள் உள்ளது என்ற சிறு வாக்கியம் மட்டும் ஒப்பதந்தில் உள்ளது.
பனியாறு கொஞ்ச கொஞ்சமாக பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் செல்வதை உணர்ந்த இந்திய இராணுவ தளபதிகளில் ஒருவரான கலோநெல் நரேந்திர புல்(Colonel Narendra Bull)1977 இல், அவரின் மேல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று 70 பேர் கொண்ட குழுவுடன் பனியரின் குன்றுகளை ஆய்வு செய்யச்சென்றார். 4 வருடம் ஆய்வு செய்த இந்த குழு பல முக்கிய தகவலுடன் 1981 இல் திரும்பியது.புல்லின் இந்த ரகசிய பயணத்தை பாகிஸ்தான் எப்படியோ மோப்பம்பிடித்து விட்டது. பனியரின் அடித்தள பகுதியில் ரோந்தில் ஈடுபட்டு இருந்த சில பாகிஸ்தான் வீரா்களின் கண்ணில் இந்திய சிகரட் பாக்கெட்கள்(Gold Flake) தேன்பட்டது. இந்த தகவலை அறிந்த ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் இராணுவ தலைமை சியாச்சேன் பனியறை கைப்பற்ற முடிவுசெய்தது. இந்த முடிவை அடுத்து பாகிஸ்தான் மிகப் பெரிய தவறை செய்தது. பனி நிறைந்த குன்றுகளுக்கு செல்ல தேவையான உடைகளை இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனத்திடம் வாங்க முடிவுசெய்து அதனை அணுகியது. இந்த நிறுவனம் இந்திய உளவுத்துறை கண்ணில் இருந்தது. சியாசேன் பணியரின் போர்த் திறபிரயோசனம் அறிந்த இந்திய அரசு, சியாச்சேன் பகுதியை சற்றும் தாமதிக்காமல் பாகிஸ்தானுக்கு முன்னதாகவே கைப்பற்ற முடிவுசெய்தது.
சுமார் 1600 வருடகளுக்கு முன் வாழ்ந்த மகாகவி காளிதாசர், இயற்றிய “மேக்ஹா துட(Meghaduta)“ என்ற சமஸ்கிருத நாடகத்தை பெயராக கொண்ட இந்திய ராணுவப் படை சியாச்சேன் பனியறையை கைபற்றும் போர் நடவடிக்களை(Operation Meghadoot)ஏப்ரல் 13 1984 இல் ஆரம்பித்தது. இந்திய ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு பகுதியில் இருந்து பனியறை கைப்பற்றநினைத்தது ஆனால் அதற்கு மிகவும் சவாலாக இருந்தது கிழக்கு பகுதயில் உள்ள மிகவும் செங்குத்தான குன்றுகள்.இதனால் இந்திய விமானப்படை உதவி கொண்டு பனியரின் மிக முக்கியமான குன்றுகள் மற்றும் கணவாய்களை இந்திய இராணுவம் சீக்கரமாகவே கைப்பற்றியது. இந்த நிகழ்வுகளை சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான் மேற்கு பக்கத்தில் இருந்து விரைந்தது. ஆனால் அதற்குள் பல பகுதிகள் இந்திய இராணுவம் கைவசம் வந்து விட்டது.மேற்கு பகுதியில் உள்ள சில குன்றுகளை பாகிஸ்தான் கைப்பற்றியது. போரின் முடிவில்,இந்திய இராணுவத்தின் கட்டுப்பாடு குன்றுகளின் மேல் பகுதிகளில் உள்ளது.பாகிஸ்தானுக்கோ குன்றுகளின் அடிமட்ட பகுதிகளில் ஆதிக்கம் உள்ளது. இதனால் இந்திய இராணுவம் குன்றைவிட்டு கிழே வர முடியாது, பாகிஸ்தான் குன்றின் அடிப்பகுதில் இருந்து மேலே செல்லமுடியாது.
இதனுடன் இந்த சண்டை முடிந்துவிடவில்லை. இந்தியாவிடம் இருந்து முக்கிய குன்றுகளை கைப்பற்ற நினைத்து பாகிஸ்தான் பலமுறை போராடி தோல்வி அடைந்துள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தும் பார்க்கப்போனால் முட்டாள்தானமாகவும் தன்னலத் தியாகமாகவும் இருந்தது.இந்த முயற்சிகளில் முக்கியமானது பெர்வெசு முஷ்ராப்ப்(Pervez Mushraff) தலைமையில்1987 ஏற்பட்ட சிறு போர். போரின் இறுதியில் பாகிஸ்தான் முன்பு இருந்த ஒரு சிறு பகுதியும் இந்தியாவிடம் இழக்க நேரிட்டது.
சுமார் 3000 வீரர்களை கொண்டு இருநாட்டு ராணுவமும் தாங்கள் ஆக்ரமித்த பகுதியை காவல் காத்து வருகிறனா்.29ஆண்டுகளாக இங்கு முழு நிலபோர் எதுவும் நிகலவவில்லை என்றாலும்,குறிப்பு இல்லாத இந்த நிலத்திற்கு இரு நாட்டு ராணுவமும் இழந்தது ஏராளம். நாட்டு எல்லையை பாதுகாக்கும் வீரர்கள் படும்மோசமான நிலையை விளக்க வரிகள் இல்லை. இங்கு வீசும் கடும்குளிர் காற்றின் முன் மனிதர்கள் பேசுவது, முச்சுவிடுவது மிகவும் கடினம்.சில சமயங்களில் உணவு கூட அருந்தமுடியாது.ஒரு கோழிக்காலை வேகவைக்க குக்கரில் 50 சத்தம் விட வேண்டும்.
2003 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தானிடயே ஏற்பட்ட சமாதான உடன்படுக்கையால், இந்த பனி பகுதியில் குண்டுகள் ஓசை ஏதும் இல்லாமல் அமைதியாக தற்போது உள்ளது. அப்படி இருந்தும் இங்கு நிலவும் மோசமான கடுமையான குளிர் மற்றும் ஆபத்தான பனிப்புயல் காரணமாக பல நூறு மனித உயிர்களை ஒவ்வொரு வருடமும் இழக்கநேரிடுகிறது. 2012 ஏப்ரல் மாதம் ஏற்பட்ட பனிப்புயலால் சுமார் 150 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் பனிமலையிடையே புதைந்துபோனார்கள். இவர்களில் பாதிப்பேர் சடலங்கள் இன்று வரை கண்டு எடுக்கப்படவில்லை.2012 ஜனவரி ஏற்பட்ட மற்றொரு பனிப்புயலால் 40 இந்திய வீரர்கள் புதைந்து போனார்கள். போரின்பேரில் இதுவரை இழந்த மனித உயிர்களைவிட இங்கு நிலவும் கொடூரமான வானிலை காரணமாகவும், பனிப்புயல் காரணமாகவும் இழந்த இழப்புகள் ஏராளம்.இந்திய இராணுவம் இதுவரை சுமார் 3000 பேரும், பாகிஸ்தான் சுமார் 2000 பேரையும் இழந்து உள்ளது. பல வீரர்கள் கடும் குளிரினால் ப்ரோஸ்ட் பிடே(Frost Bite) இனால் கை கால்களை இழந்து உள்ளனர்.
பல முக்கியமான போர்த்திறன் வாய்ந்த பகுதிகளை இந்திய இராணுவம் வைத்து இருந்தாலும், இதனை காக்க இந்தியஅரசு வருடம்தோறும் செலவிடும் தொகை சுமார் 2000 கோடி. இந்திய இராணுவம் பனியரின் உச்சத்தில் இருப்பதால், தங்கள் வீரர்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை ஏற்றிசெல்ல முழுக்க விமானப்படையையே நம்பி உள்ளது. பாகிஸ்தானோ அடிமட்டப் பகுதியில் இருப்பதாலும், மேற்கு பகுதயில் சாலைகள் இருப்பதால், குதிரைகள் .முலம் பண்டங்களை ஏற்றி போக்குவரத்து செய்கிறனர்.
இந்தியாவும் பாகிஸ்தானும் பலமுறை இந்தப்பகுதியை போர் வீர்ர் இல்லாத பகுதியாக(Demilitarize) ஆக்க பேச்சுவார்த்தை நடத்தி தோல்வி கண்டுள்ளனர்.இதற்கு இரு நாடுகளிடையே உள்ள நம்பகத்தன்மை என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.தற்போது தன் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி போர்திறன் வாய்ந்தபகுதியாக இருப்பதாலும், கார்கில் போரினால் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தாலூம் பாகிஸ்தானை நம்பி கிழே இறங்கி வர இந்தியா மறுக்கிறது. பாகிஸ்தானோ இதுவரை இழந்த வீரர்களை எண்ணி தன் நிலையை விட்டுக்கொடுக்க மறுக்கிறது.
இந்தப்பிரச்சனை இத்துடன் முடியவில்லை, இருநாட்டு வீர்ர்கள் போடும் கழிவுபொருட்கள் பனியாறு சுற்றுச்சுழலை மாசுபடுத்தி பனியறை வெகு வேகமாக கரைய வழிசெய்கிறது.இந்த ஆபத்தால், இந்திய இராணுவத்தின் கணக்குப்படி வருடம்தோறும் 10.5 மீட்டர் என்ற விகிதத்தில் பனியாறு உருகி கொண்டு உள்ளது.இதனால் கடல் நீர் உயர்ந்து கரையோரம் வாழும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பனியாறுகள் நன்நீர்களின் உற்பத்தியில் முக்கிய பகுதியாக விளங்குகிறது.பனியாறு அழிவதால் நீர் சிறப்புமிக்க பகுதி ஆறு வற்றி பாலை நிலமாக வாய்ப்பு உள்ளது
இந்த பகுதியில் போர் நிலவுவதாக தோன்றினாலும், பனியாறு பகுதயில் வெறும் 200 மீட்டரிடையே காவல் காக்கும் இரு நாட்டு வீரர்களிடம் சில சமயகளில் நல்லுறவு நிலவுகிறது. ஐத்(EiD) மற்றும் தீபாவளி பண்டிகைக்களுக்கு வாழ்த்துகளை இருவரும் பரிமாறிக் கொள்கின்றனர். ஒரு பகுதயில் காவல் காத்து வரும் பாகிஸ்தானிய வீரர், எதிர்முனையில் உள்ள இந்திய வீரரை நோக்கி “சகோதரே எனக்கு விடுமுறை கிடைத்து விட்டது, நான் என் குடும்பத்தை பார்க்க செல்கிறேன்” என்று தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள, இந்திய வீரரோ “ மிகவும் மகிழ்ச்சி. உன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவிக்கவும்” என்கிறார். பாண் மற்றும் உணவுபண்டகள் கூட சில சமயம் வீரர்கள் பரிமாரிக்கொள்கின்றனர். விதிகளை மீறி ஒருமுறை இந்தியவீரர் தன் செயற்கைகோள் கைபேசியை பாகிஸ்தான் வீரருக்கு அளித்து மிக தூரத்தில்இருக்கும் தன் குடும்பத்தினர் பேச உதவிசெய்ததாக பேச்சும் உண்டு.
இந்திய மற்றும் பாகிஸ்தானிய அரசுகள் தன் சுயநலம் மற்றும் தன்முனைப்பு அரசியலை விடுத்து ஒருஅமைதியான உடன்படிக்கையை ஏற்படுத்தாவிட்டாள் பல இளம் வீரர்களை வருகிற தலை முறையிலும் இழக்க நேரிடும்.
மனிதகுலம் அமைதியாக வாழ ஏற்ற கருத்துகளையும் சாதனை முறைகளையும் உலகமெங்கும் பரப்பிய வேதந்திரிமகரிஷி அவர்கள் “போருக்கு பின் மிஞ்சுபவர்கள் கொலைகாரர்கள் மட்டுமே” என்று கூறியுள்ளார்.இந்த உண்மையை இரு நாடுககளும் புரிந்து, நல்ல முடிவு எடுத்து, பனியரில் நிரந்தரமான அமைதியை நிலைநாட்டினால் நன்று.இழந்த வீரர்களுக்காக இந்திய இராணுவம் பனியரின் பகுதயில் ஒரு நினைவிடம் அமைத்து உள்ளது. அங்கு எழுதப்பட்டுள்ள வாக்கியம்
“இந்த நிலம் மிகவும் தரிசுநிலம், இங்கு உள்ள கணவாய்கள் மிகவும் உயரமானவை, ஆதனால் இங்கு வருபவர்கள் மிக சிறந்த நண்பர்கள் அல்லது மிக உக்கிரமான எதிரிகளாக இருக்க வேண்டும்”
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
மாநிலங்களின் கூட்டாட்சி மலரும் வரை இதற்கு முடிவு வாராது.
Nice flow…good collection of information….success in article lies in remembering it after u read it…
I can remember this article content.. All the best