மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உள்ளாட்சி கூத்து

ஆச்சாரி

Nov 1, 2011


என்னாச்சு ?
என் மேலே இருந்த மணல் திருட்டு வழக்கு வலுவாயிடுச்சு

உள்ளாட்சி தேர்தல்ல நில்லு, என் மேல வழக்கு போட்டப்போ நான் அதத்தான் செஞ்சேன்!!

என்னாச்சு ?
நிலத்தரகு வியாபாரம் படுத்துக்கிச்சு

உள்ளாட்சி தேர்தல்ல நில்லு , என் நில வியாபாரம் படுத்தப்போ நான் அதத்தான் செஞ்சேன்

மணல் திருடர்கள் திடீரென மக்கள் தொண்டர்களாக மாறிவிட்டனர், பகுதியின் எந்த பிரச்சினைக்கும் மூச்சு காட்டாதவர்கள் திடீரென நாட்டுக்கு முன்னேற்றத் திட்டங்கள் வகுக்கிறார்கள் , ஊரில் வேலை வெட்டி இல்லா கூட்டமும் திடீரென மக்களுக்காக பேசி தங்களுக்கு ஒரு வேலையையும் பதவியையும் தேடிக்கொள்ள துடிக்கிறது , தான் சார்ந்திருக்கும் கட்சிக்கு தான் யாரென்பதை காட்டவும் ப்யன்பட்டிருக்கிறது உள்ளாட்சி தேர்தல் ,சிலர் குடும்ப வறுமையை சொல்லி ஓட்டு கேட்ட கூத்தெல்லாம் உண்டு , ஓட்டுடைக்கும் ஒப்புக்கு சப்பாணி வேட்பாளர்களாக களமிறங்குவதற்கு சிலர் காட்டிய ஆர்வமிருக்கிறதே அப்பப்பா… பின்னே இருக்காதா , மக்களுக்கே 1000 ரூபாய் வரை செலவு செய்யும் பெரிய வேட்பளர்கள், ஓட்டுடைக்கும் சப்பாணி வேட்பாளர்களுக்கு எவ்வளவு செய்திருப்பார்கள்…. ஆனால் சப்பாணிகள் இரு பிரதான வேட்பாளர்களிடமும் பணம் பெற்றுக் கொண்டு பின்னர் ரகசியமாக அதனை மக்களுக்கு விநியோகித்து தாங்கள் வெற்றி பெற முயற்சித்தது அடுத்த கூத்து….

பகுதியிலிருக்கும் இளைஞர்களின் காதலிகளை ஒரு அணியாக்கி அவர்கள் மூலமாக அவர்கள் காதலர்கள் வீட்டுக்கு சென்று ஒரு பெண் வேட்பாளர் ஓட்டுக் கேட்டது நிச்சயம் ஒரு அழகிய கூத்து….

வயோதிகர்கள் நடப்பதை பார்த்தால் பொறுக்காத இந்த மனிதநேயர்கள் உடனடியாக வீட்டில் கொண்டு விடுகிறார்கள் , இதுவரை பல பிரத்யேகப் பெயர்களுடன் அழைக்கப்பட்ட பகுதி பெண்கள் திடீரென சகோதரிகளாகவும் தாயாகவும் ஆகி விட்டனர் ,அவனெல்லாம் ஒரு ஆளா இவனெல்லாம் ஒரு ஆளா என்று ஏளனமாகப் பார்க்கப்பட்ட ’சாதாரண மக்களி’ன் காலே இவர்களுக்கு சரணாகதியென்று கிடந்தனர்…, பதவியிலிருந்த போது எவரையும் மதிக்காதவர்கள் வாக்குக்காக 20 வய்து பையன் காலிலெல்லாம் விழுந்த போது மகிழ்ச்சியாக இருந்தது ,

ஜனநாயகம் கொடுத்த சில அருவருப்பான சில அழகிய தருணங்களாக இவற்றையெல்லம் பார்க்க முடிந்தது ,பதவியிலிருந்த போது சந்திக்கவே முடியதவர்கள் வீட்டுக்கு வந்த போது தான் தெரிந்தது இவர் தானே கடந்த முறை நமக்கெல்லம் 500 ரூபாய் கொடுத்து தலைவரானவர் என்று , ஆனால் ஏன் மக்களை சந்திக்கவேயில்லை என்று கேட்க முடியவில்லையே 500 ரூபாய் பெற்ற கரங்களால்.

மக்களை நேரடியாக அரசியலில் பங்கு கொள்ள வைக்கும் உள்ளாட்சி தேர்தலென்பதை இன்னொரு கோணத்தில் பார்த்தால் , தெருவுக்கு தெரு பொறுப்பாளர்களை நியமித்து அவர்கள் முலமாக பணப்பட்டுவாடா நடந்ததை நானும் அரசியலில் பங்கெடுத்தேன் என்று சிலாகிக்கிறான் ஒரு தெரு பொறூப்பாளர் ,இருக்கிறதுலேயே நம்ம குழுவுக்குத்தான் அதிகமா பணம் வந்தது என்று பெருமிதம் கொள்கிறாள் ஒரு மகளிர் குழு பெண்மணி , மன்ற உறுப்பினர் பதவியெல்லம் தண்டம்பா.. பெருசா காசு வராது மிஞ்சிபோனால் எதாவது கையெழுத்தில் கொஞ்சம் காசு பார்க்கலாம் என்ற விவாதங்கள் வேறு பட்டையை கிளப்பி கொண்டிருந்தது , பதவியிலிருந்த போது ’தண்ணி’யில் தத்தளித்து மக்களை தண்ணீருக்கு தத்தளிக்க விட்டவர்கள் இப்போது மக்களுக்கும் குடி வாங்கிக் கொடுக்கின்றனர் , அரசியல் என்பதே ’வெட்டு’(கட்டிங்) தான் என்று கடைகோடி தமிழனின் உள்ள ஆழம் வரை இறங்கியிருக்கிறது ,தெருவுக்கு 15000 ரூபாய் வரை பட்டுவாடா நடந்த போதுதான் தெரிந்தது பஞ்சாயத்து பதவி எவ்வளவு லாபமான பதவியென்று …

சமயபுரம் அருகில் ஒரு மாடக்குடி என்ற ஊரில் ஓட்டுக்கு ஐயாயிரம் கொடுத்த வேட்பாளர்கள் உண்டு.. துண்டு, ரவிக்கை துணிகள் கொள்முதல் செய்ய கூட்டம் கூட்டமாக திருப்பூர் சென்று இருக்கின்றனர்.. புட்டி சாராயம் ஆறாக ஓடியது என்று ஊரெல்லாம் பேச்சு..

தண்ணீர் பிரச்சினைக்காகவெல்லாம் போராடிய நேர்மையான வேட்பாளர்களால் தான் பாவம் ’தண்ணி’ வாங்கிக் கொடுத்து இளைஞர்களை கவர முடியவில்லை ,மகளிர் நலனுக்காக போராடிய நேர்மையான வேட்பாளர்களால் பணப்பட்டுவாடா செய்து ’மகளிர் குழு’க்களையும் கவர முடியவில்லை….

அப்பா இந்த மாமா தான நான் 1வது படிக்கும் போது நம்ம எல்லார் வீட்டுக்கும் வந்து 1000 ருபாய் குடுத்தாரு? அப்போ அவ்ளோ செலவு பண்ணிட்டு இப்போ எப்படிப்பா இவ்ளோ பெரிய வீடு, சுத்தி சிமெண்ட்ரோடெல்லம் போட்டுக்கிட்டாரு ? ஓ நாமளும் அப்படி பண்ணிக்கத் தான் அந்த பணத்த குடுத்தாரா ? நீ ஏன்ப்பா அப்படி பண்ணலை ?..என்று அந்த 3ம் வகுப்பு குழந்தை கேட்டதற்கு ஆயிரம் ரூபாய் பெற்ற அந்த தந்தையால் என்ன பதில் சொல்ல முடியும் ?….

என்னாச்சு – பையன் அமெரிக்கா போறான் படிக்க..

நல்லது, நானும் தலைவரா இருந்தச்சதான் என் பசங்களை அமெரிக்காவில் செட்டில் செஞ்சேன்

ஒன்று மட்டும் புரிகிறது.. மக்களுக்கு அரசியல் ஒரு சாக்கடை என்று சாக்கடை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதில் மிக கவனமாக இருக்கிறது ஆளும் கூட்டம்.

That’s why cell phone trackers should be used spyappsinsider.com from a safety standpoint teens do not understand all the dangers of the internet and how the things they say and do today could come back to hurt them ten or twenty years from now

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உள்ளாட்சி கூத்து”

அதிகம் படித்தது