மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எங்கேயும் எப்போதும் – திரைப்படம்

ஆச்சாரி

Oct 1, 2011

திருச்சி அருகே பேருந்து விபத்து 15 பேர் பலி பலர் படுகாயம், விழுப்புரம் அருகே பேருந்து விபத்து 12 பேர் பலி , இப்படி நாம் தினமும் சர்வ சாதாரணமாக கடக்கும் செய்திகளின் பின் இருக்கும் வலிகளை இழப்புகளை சிதைந்த வாழ்க்கையை நிஜத்துக்கு மிக அருகாமையில் பதிவு செய்திருக்கிறது படம். பயணங்கள் வெறும் மனிதர்களை மட்டும் சுமப்பதில்லை வாழ்க்கையை சுமக்கிறது , வாழ்க்கையின் பல அத்தியாயங்களில் பயணிக்கும் மனிதர்கள் குழந்தைகள், காதலர்கள், தம்பதிகள், குடும்பஸ்தர்கள், வயோதிகர்கள் என பயணம் என்பது எத்தனை வாழ்க்கைகளின் சங்கமம் , கனவுகளோடு பயணிக்கும் வாழ்க்கை திடீரென பிரேக் போட்டார்ப் போல் முடிந்து விடுகிறது… அதன் வலியும் வேதைனயும்தான் எவ்வளவு.

பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் இரு காதலர்களின் முன் கதையயும் , பேருந்திலியே நிகழும் மற்றொரு காதலும் திரைக்கதையின் பிரதான அச்சாணிகள்  தவிர, துபாயிலிருந்து 5 வருடங்கள் கழித்து குடும்பத்தை பார்க்க வரும் தந்தை , அவரை அழைத்துக் கொண்டேயிருக்கும் அவரின் குழந்தை, புது மனைவியை பிரிய இயலாத புது கணவன், பேருந்தில் விளையாடிக் கொண்டிருக்கும் சுட்டிக் குழந்தை, என பேருந்து முழுதும் மனிதம் நிறைந்து வழிகிறது. பெரிதாக கதைக்களம் என்று ஏதும் இல்லை மூன்று காதலையும் கொஞ்சம் மனிதத்தையும் அழகோடு பதிவு செய்து சுவாரஸ்யமாக நகர்கிறது திரைக்கதை, சிறந்த திரைக்கதைக்கு நல்ல எடுத்துக்காட்டு, தமிழ் சினிமாவின் ஆரோக்யத்தை நோக்கிய பயணத்தில் மற்றொரு மைல் கல்.

சென்னையின் இயல்பை பட்டிகாட்டுத்தனத்துடன் அனன்யா நோக்குவது, வழி காட்ட வந்த சவோவாவிடம் (அறிமுகம்) மெதுவாக காதல் வயப்படுவது ,காதலன் சவோவாவின் படத்தை சுவற்றில் வரைந்து வைத்துக் கொள்வது , காதலன் போட்டிருந்த சட்டையை போலவே அப்பாவிற்கு எடுத்துக்குடுப்பது , அதேபோல் ஜெய் – அஞ்சலி காதலில் காதலி போட்டிருக்கும் ஆடையின் நிறத்தில் காதலன் உள் பனியன் அணிவது, பேருந்து காதலர்கள் இருவரும் அலைபேசியில் பேசுவது போல் பெயர், அலைபேசி எண் என தகவல்களை பரிமாறிக்கொள்வது , மனிவியை பிரிய மன்மில்லாமல் இறங்கி இறங்கி திரும்ப ஏறிக் கொள்ளும் கணவன் என படம் முழுதும் திரைக்கதை சுவாரஸ்யிக்கிறது

பேருந்து காதலர்கள் இருவரும் அலைபேசியில் பேசுவது போல் பரிமாறிக்கொண்ட பெயர், எண், ஊர் கல்லூரி போன்ற தகவல்களை  இறுதியில்காதலி இறந்த பிறகு காதலன் காவல் துறையிடம் சொல்வதும், காதலைச் சொல்ல காதலியை தேடி வந்த காதலன் காதலியை icu வில் பார்த்து காதலைச் சொல்வதும் சோக கவிதை, அப்பா இதோ வந்து விடுகிறேன் வந்து விடுகிறேன் என்று சொல்லிய தந்தை பிணமாக இருக்கும் போது அவரது செல்ல மகள் அழைப்பதும் நெஞ்சை பிழியும் காட்சிகள்.

இறுதியில் பேருந்து விபத்தை பதிவு செய்திருக்கும் விதம், இதுவரை எத்திரைப்படத்திலும் செய்ததில்லை எனலாம்  அழுத்தமான பாத்திரப்படைப்பு, சீரான திரைக்கதை என அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் சரவணன், படம் முழுதும் ஒளிப்பதிவும், இசையும் இயக்குனரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கின்றன.

ஒரு ஆவண படத்துக்கான கதைக்களத்தை இவ்வளவு சுவாரஸ்யமான திரைக்கதையோடு ஜனரஞ்சகமான சினிமாவாக்கின அறிமுக இயக்குனர் சரவணனுக்கும், தயாரிப்பாளர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸுக்கும் வாழ்த்துக்கள்.

சாலையில் நாம் பார்க்கும் விபத்து பகுதி என்ற அறிவிப்பு பலகைக்குப் பின்னால் எத்தனை வாழ்க்கை சிதைந்து கிடக்கிறது, எங்கேயும் சுமூகமாக இருக்கும் மற்ற பகுதிகளும் எப்போது வேண்டுமானால் விபத்து பகுதியாக மாறலாம்.

When parents are watching, there is an actual biological change in how the brain http://trackingapps.org/ processes desires and rewards

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எங்கேயும் எப்போதும் – திரைப்படம்”

அதிகம் படித்தது