மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எதற்கு வேண்டும் கவிதை?! (கவிதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Mar 27, 2021

siragu kavithai1

 

 

கண்ணின் மணியைக் காதல் மொழியைக்

காரிருள் அகத்தைக் கசக்கும் சொல்லைக்

கானக உயிர்களைக் கடலின் அலைகளைக்

குயிலின் கானம் கிளியின் பேச்சை

 

தத்தி தவழும் கிள்ளை அழகைத்

தாவிடும் மானின் துள்ளல் அழகைத்

தாளம் போடும் விரல்களின் அழகைத்

தாகம் தீர்க்கும் அருவியின் அழகை

 

வாக்கு தவறும் கயவர் கருத்தை

வாகாய் வளையும் மனிதர் உளத்தை

வணங்கும் தலைவர் ஆற்றல் அறிவை

விரித்துப் பறக்கும் பறவை இறகை

 

வார்த்தை தவறும் நொடியின் கணத்தை

வைரமாய் பாடும் வரிகள் கனத்தை

வீழ்த்திப்  போகும் குளிர் காற்றை

வளமாய் வாழும் வாழ்க்கைத் தரத்தை

 

வாழ்த்திப் பாட வேண்டுமே கவிதை

வைது பாட வேண்டுமே கவிதை

வீழ்த்தலை அறுக்க வேண்டுமே கவிதை

வாழ்தலை ரசிக்க வேண்டுமே கவிதை !

 


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எதற்கு வேண்டும் கவிதை?! (கவிதை)”

அதிகம் படித்தது