மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எனக்காக ஒரு மீன் (கவிதை)

குமரகுரு அன்பு

Jan 28, 2023

siragu fish tank1
எனக்காக ஒரு மீன் நீந்துகிறது
நீர் நிரம்பிய கண்ணாடி தொட்டிக்குள்
நீந்துகிற மீனின்
உடல் செதில்கள்
எல்ஈடி வெளிச்சத்தில்
மின்னுகிறது
செவ்வகத் தொட்டியின் ஒரு முனையிலிருந்து
மறு முனைக்கு மாறி மாறி நீந்தியது மூலையில்
சற்று நேரம் வாய்ப் பிளந்து மூடி வாய்ப் பிளந்து மூடி ஓய்வெடுத்தது!!
என் கையிலிருந்து பச்சை/சிவப்புப் பெல்லட்டுகளை நீர் பரப்பில் தூவினேன்.
துணை மீனும் சேர்ந்து கொண்டு கவ்வி விழுங்கித் தின்று முடித்தன.
மீண்டும் எல்ஈடி ஒளியில் செதில்கள் பளபளக்க இங்குமங்கும் நீந்தியபடியிருந்தது
மீன்!
நான்தான் அதைப் பார்ப்பதேயில்லை!!
ஆனாலும், நான் பார்ப்பதாய் நினைத்துக் கொண்டுதான் நீந்துகிறது…
வளர்ப்பவன் நானல்லவா?


குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எனக்காக ஒரு மீன் (கவிதை)”

அதிகம் படித்தது