மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

என் கையே எனக்கு உதவி – பகுதி-3

ஆச்சாரி

Jul 12, 2014

இனி வரும் மாதங்கள் இயற்கை நியதியை ஒட்டி மழை,பனிக்காலம் என்று வரும். ஆனால் இன்றைய நியதிப்படி ஓரளவாவது மழை,பனிக்காலம் என்று இருக்கும் என்று எண்ணுகிறோம்.

கொட்டும் மழை,குளிரும் பனி நேரங்களில் “சூப்”என்று சொல்லப்படும் திரவ வடிவம் சூடாக சாப்பிட மிகவும் ஏற்றது. Bachelor’s kitchen க்கான குறிப்பு என்பதால் மிகவும் எளிதான சில “சூப்”வகைகளைப் பற்றி பார்ப்போம்.

சூப்புடைய சற்றே கெட்டியான தன்மை வர “கார்ன் ப்ளோர்”எனப்படும் சோளமாவுதான் அடிப்படையாகும்.

தக்காளி சூப்:

en kaye1

தேவையான பொருட்கள்:

தக்காளி – 3

சோளமாவு – 1 தேக்கரண்டி

மிளகு தூள் – சிறிதளவு

உப்பு –சிறிதளவு

வெண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:

தக்காளியை கொதிக்கும் வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து தோலை நீக்கிவிட வேண்டும். தோல் நீக்கிய தக்காளியை அரவை இயந்திரத்தில் போட்டு அரைத்து ஒரு வடிகட்டி மூலம் வடித்துக் கொள்ள வேண்டும். அடுப்பை சிறிதாக வைத்து தக்காளிசாறை வைத்து கொதிக்க விட வேண்டும். சோளமாவை சிறிது தண்ணீரில் கரைத்துவிட்டு கட்டிவராமல் கிளற வேண்டும். பிறகு சூப்பில் சிறிது மிளகுதூள்,தேவைக்கு உப்பு சேர்த்து மேலே வெண்ணெய் இட்டு சூடாக சாப்பிட நல்ல சுவையாக இருக்கும்.

காய்கறி சூப்:

en kaye3தேவையான பொருட்கள்:

காரட் – பாதி

பச்சைபட்டாணி -2 தேக்கரண்டி

பூக்கோசு – 2 தேக்கரண்டி

சோளமாவு – 1 தேக்கரண்டி

உப்பு –சிறிதளவு

வெண்ணெய் – 1 தேக்கரண்டி

மிளகு தூள் – சிறிதளவு

செய்முறை:

காரட்,பச்சைபட்டாணி,பூக்கோசு(Cauli flower) ஆகியவற்றை சிறிது உப்பு போட்டு சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும். வேகவைத்த தண்ணீரை வடிக்கக் கூடாது. அதிலேயே ஒரு தக்காளியை அரைத்து வடிகட்டி பச்சை மணம் போகும் வரை கொதிக்க விட வேண்டும். பின்பு சோளமாவு கரைத்து கொதிக்கவிட்டு சூப் பதம் வந்ததும் வெண்ணெய்,மிளகுத்தூள் கலந்து அருந்தவும்.

இதுபோல் பீன்ஸ்,கோசு,கொத்தமல்லி,நூல்கோல்,வெங்காயம்,வேகவைத்து உரித்த உருளைக்கிழங்கு ஆகியவற்றை உபயோகித்தும்,காளாண்,பச்சைகிரைகள் இவற்றை வேகவைத்தும் மேற்சொன்ன முறையில் தயாரித்து மிளகு சேர்த்து அருந்தலாம்.

Butterfield learning visit this company strategies as determinants of memory deficiencies

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “என் கையே எனக்கு உதவி – பகுதி-3”

அதிகம் படித்தது