மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எளிய முறையில் கல்விக்கடனை பெற்றிடலாம்

ஆச்சாரி

Nov 12, 2012

தமிழ்நாட்டில் கல்வியின் வளர்ச்சி பெருகுவதற்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குவது கல்விக்கடன். இல்லையெனில் இன்றைய சூழ் நிலையில் ஏழை மாணவர்களின் கல்வி கேள்விக்குறி ஆகிவிடும்.. வங்கியில் மாணவர்கள் கல்விக்கடனுக்காக மாதக்கணக்கில் காத்திருக்கின்றனர். பல சமயங்களில் ஏழை மாணவனுக்கு மிஞ்சுவது  ஏமாற்றம் மட்டுமே. வங்கி மேலாளருக்கு தெரிந்தவர்களுக்கும், வசதி உடையவருக்குமே கல்விக்கடன் கிடைக்கப் பெறுகிறது.

கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்க ஒரு மாணவன் வங்கிக்குச்செல்கிறான். வங்கி மேலாளர் அழைத்துக் கேட்கிறார். ‘உன் அப்பா ஒரு கூலித் தொழிலாளி. உங்களுக்கென்று ஒரு சொந்த வீடுகூட கிடையாது. எப்படி உன்னிடம் இருந்து நான் கடனை வசூலிப்பது?” ”வசதி இருந்தா நாங்க எதுக்கு கடன் கேட்டு வர்றோம்?”- இது மாணவனின் பதில்.

இதற்கு வங்கி மேலாளரை மட்டும் நாம் குறை கூற முடியாது. இதற்கு நம் அறியாமையும் ஒரு முக்கியக்காரணம் தான். இந்த அறியாமையை போக்க நாம் கல்விக்கடன் தொடர்பான தகவல்களை இக்கட்டுரையில் விவாதிப்போம்.

கல்விக் கடனைப் பொறுத்தவரை இரண்டு திட்டங்கள்தான் நடைமுறையில் இருக்கின்றன. ஒன்று பொதுத் திட்டம். மற்றொன்று தனிப்பட்ட கடன் திட்டம்.

பொதுத் திட்டமானது அதிக மதிப்பெண் அடிப்படையில் சேரும் மாணவர்களுக்குப் பொருந்தும். மதிப்பெண் குறைவாகப் பெற்று நிர்வாகத்திடம் பணம் கட்டி சேரும் மாணவர்களுக்குத் தனிப்பட்ட கடன் திட்டம்.

கல்விக் கடன் வாங்கும் எல்லோருமே பொதுவாகத் தெரிந்துகொள்ளவேண்டிய சில சங்கதிகள் உள்ளன.

கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டுமென்றால், வங்கி மேலாளர்கள், அவர்களுடைய உயர் அதிகாரிகளின் அனுமதியின் பேரில்தான் நிராகரிக்க முடியும். நிராகரிப்பதற்கான காரணங்களையும் எழுத்து மூலம் மாணவர்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும். தகுந்த காரணம் இல்லாமல் நிராகரிக்கப்பட்டதாகக் கருதினால், மாணவர்கள் வங்கியின் தலைவரிடமே மேல் முறையீடு செய்யலாம்.

கல்விக் கடன் வாங்கும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்தவேண்டியக் கட்டாயம் இல்லை. அது அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. தொழிற்கல்வி மற்றும் மேலாண்மைக் கல்வி படிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசின் வட்டிக்கான மானியமும் உண்டு. இதற்கான விண்ணப்பத்தைக் கல்விக் கடனில் முதல் தவணை பெறும்போதே, வருமானச் சான்றிதழை இணைத்துக் கொடுத்துவிட வேண்டும். பெற்றோர்களின் எந்தவொரு தனிப்பட்ட கடனுக்கும் அவர்களுடைய பிள்ளைகளின் கல்விக் கடனுக்கும் சம்பந்தமில்லை.

ஒரே வீட்டில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கல்விக் கடன் கொடுக்கச் சட்டத்தில் வழிவகை உண்டு. நான்கு லட்சம் வரையிலான கல்விக் கடனுக்குத் தனி நபர் பிணை மற்றும் சொத்து பிணை தேவையில்லை. பெற்றோர்கள் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும். இப்படி கல்விக் கடன் கேட்டு பாதிக்கப்படும் மாணவர்களுக்காகவே E.L.T.F (EDUCATION LOAN TASK FORCE) எனும் கல்விக் கடன் அலுவல்படையை  சீனிவாசன் என்பவர் நடத்திவருகிறார். இவர் வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

அவர் கூறுகையில். ”கல்விக் கடன் வாங்குவதற்காக மாணவர்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்களுக்கு  உதவி செய்ய வேண்டுமென்று தான் இந்த அமைப்பைத் தொடங்கினேன். எங்கள் இணைய தளத்தில் கல்விக் கடன் சம்மந்தமான அனைத்துத் தகவல்களையும் கொடுத்திருக்கிறோம்.(www.eltf.in )

எங்கள் அமைப்பின் மூலமாக இதுவரை 560 மாணவர்களுக்குக் கல்விக் கடன் வாங்கிக் கொடுத்து உள்ளோம். கல்விக் கடன் கிடைக்காமல் சிரமப்படும் மாணவர்கள் info@eltf.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு அஞ்சல் அனுப்பினால் போதும். நாங்களே தேடிவந்து உதவிகள் செய்து தருவோம்”

கல்வி கடன் என்பது மாணவர்களின் உரிமை என்பதால் எவ்வித அச்சமும் இன்றி முறையாக விண்ணப்பித்து கடன் பெற்று தமது கல்வி தாகத்தை தணித்துக் கொள்ளலாம்.

Further, in preparing the written proposal for the t/d, the student should include specifications as to https://essayclick.net/ how accommodations are to be made, if anticipated, at each stage of the t/d journey, including the final examination

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “எளிய முறையில் கல்விக்கடனை பெற்றிடலாம்”
  1. amuthavasakan.T says:

    இது ஒரு நல்ல அமைப்பு…

  2. kalai kumar.m says:

    இந்த அமைப்பானது கல்வி பயிலும் அனைத்து ஏழை மானவர்கலுக்கும் பயனுல்லதாக அமையும்….

  3. MR ROBERTL JOHNSON says:

    நீங்கள் இப்போது வேகமாக கடன் கிடைக்கும் , கடன் வேண்டும்.
    நீங்கள் அல்லது நிதி சிரமம் போகிறோம்
    நீங்கள் எந்த நிதி குழப்பம் இருக்கும் , மற்றும் நீங்கள் வேண்டும்
    உங்கள் சொந்த வணிக தொடங்குவதற்கு நிதி ,
    அல்லது நீங்கள் உங்கள் கடன் தீர்த்து அல்லது பணம் செலுத்த கடன் வேண்டும்
    உங்கள் பில்கள் , , ஒரு நல்ல தொழிலை தொடங்க
    அல்லது நீங்கள் அதை கடுமையாக உள்ளூர் இருந்து மூலதன கடன் பெற கண்டுபிடித்துள்ள
    வங்கிகள் , வழியாக இன்று எங்களை தொடர்பு
    மின்னஞ்சல் முகவரி : ரொபெர்ட்ல்ஹெல்ப்ஃபுன்ட்ச்805@ஹொட்மைல்.சொம் எனவே வேண்டாம்
    இந்த வாய்ப்பை நீங்கள் கடந்து செல்லும் .
    தயவு செய்து இந்த தீவிர எண்ணம் மற்றும் கடவுள் இல்லை
    மக்கள் பயந்து .
    விண்ணப்ப படிவம்
    பெயர் : _________
    முகவரி : _________ நாடு : _________
    தொழில் : _________
    கடன் றெஃஉஎச்ட்__________
    ளொஅன்__________ நோக்கம்
    ளொஅன்டுரடிஒன்__________
    மாத வருமானம் : _________ எண்ணை : _________
    கடன் டூறாடீஓண்__________ தயவுசெய்து எங்கள் மின்னஞ்சல் மூலமாக எங்களுக்கு திரும்ப பெற
    மின்னஞ்சல் : நீங்கள் இப்போது வேகமாக கடன் கிடைக்கும் , கடன் வேண்டுமா .
    நீங்கள் அல்லது நிதி சிரமம் போகிறோம்
    நீங்கள் எந்த நிதி குழப்பம் இருக்கும் , மற்றும் நீங்கள் வேண்டும்
    உங்கள் சொந்த வணிக தொடங்குவதற்கு நிதி ,
    அல்லது நீங்கள் உங்கள் கடன் தீர்த்து அல்லது பணம் செலுத்த கடன் வேண்டும்
    உங்கள் பில்கள் , , ஒரு நல்ல தொழிலை தொடங்க
    அல்லது நீங்கள் அதை கடுமையாக உள்ளூர் இருந்து மூலதன கடன் பெற கண்டுபிடித்துள்ள
    வங்கிகள் , வழியாக இன்று எங்களை தொடர்பு
    மின்னஞ்சல் முகவரி : ரொபெர்ட்ல்ஹெல்ப்ஃபுன்ட்ச்805@ஹொட்மைல்.சொம்

அதிகம் படித்தது