மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செட்டிநாட்டு சமையல் – கந்தரப்பம், முள்ளங்கி கோலா

ஆச்சாரி

May 24, 2014

கந்தரப்பம்

kandharappam

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 1 ¾  தம்ளர்

இட்லி அரிசி – ¼ தம்ளர்

கடலைப்பருப்பு – 4  தேக்கரண்டி

உளுந்து – ¼ தம்ளர்

வெந்தயம் –  1 தேக்கரண்டி

வெல்லம் – 1 ¾ தம்ளர்

எண்ணெய் – தேவையான அளவு

ஏலக்காய் – 2

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள பச்சரிசி, இட்லி அரிசி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

ஊறிய பின் அவற்றை நன்றாக அரைக்க வேண்டும். அரைக்கும் பொழுதே நுணுக்கிய வெல்லம்,உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைக்க வேண்டும்.

அரைத்து எடுத்தவுடன் அதனுடன் ஏலக்காயைப் போடி செய்து சேர்க்க வேண்டும்.

பின் இந்த அரைத்து வைத்த மாவை பணியாரமாக வார்த்து எடுத்தால் சுவையான கந்தரப்பான் தயார்.

இதனை அரைத்தவுடன் பயன்படுத்தலாம். காத்திருக்க தேவையில்லை.

முள்ளங்கி கோலா

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி – ¼ கிலோ

சோம்பு – 2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் – 6

மஞ்சள் தூள் – சிறிது

உப்பு – தேவையான அளவு

கடலைப்பருப்பு – 150 கிராம்

பட்டை – சிறிது

சின்ன வெங்காயம் – 200 கிராம்

எண்ணெய் – 150

செய்முறை:

கடலைப்பருப்பை அரை மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

முள்ளங்கியை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஊறவைத்த பருப்பு, சோம்பு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொர்கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். சட்டியில் எண்ணெய் ஊற்றி பட்டை, உளுந்தம்பருப்பு சேர்த்து பொரிய விடவும். பிறகு வெங்காயம், துருவிய முள்ளங்கி, அரைத்து வைத்த பருப்பு இவற்றைப் போட்டு நன்றாக கிளறவும்.

அடுப்பை குறைந்த தணலில் அரை மணிநேரம் வைக்க வேண்டும்.

மொருமொறருப்பாக வந்ததும் இறக்கி விடவும். சுவையான முள்ளங்கி கோலா தயார்.

இதே முறையில் முள்ளங்கிக்குப் பதிலாக பீட்ரூட்டை பயன்படுத்தியும் செய்யலாம்.

If the advisor and student sincerely try to involve the committee, the response is usually quite good order-essay-online.net/

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செட்டிநாட்டு சமையல் – கந்தரப்பம், முள்ளங்கி கோலா”

அதிகம் படித்தது