மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கனவு – சிறுகதை

ஆச்சாரி

Aug 2, 2011

இடம் : மீனம்பாக்கம் விமான நிலையம்
பொழுது : மாலை மணி 7
பாதுகாப்பு சோதனை முடிந்து, விமானத்தில் ஏறுவதற்காக வரிசை யில் நின்றுகொண்டிருந்தான்,  இளங்கோ வரிசை சற்று விரைவாக நகர்ந்தது. சிறிதும் மனமில்லாமல் விமானத்தினுள் சென்று அமர்ந்தான். அவனின் நினைவுகள் அவனிடம் இல்லை என்பது மட்டும் தெரிந்தது. திடீரென அவன்  கண்கள் குளமானது. அழுகையை அடக்க முடியவில்லை, சற்றே திகைத்தவனாய் கனவிலிருந்து வெளியே வந்தான் இளங்கோ. “அடக்கடவுளே! எவ்வளோ பெரிய தவறு செய்ய பார்த்தேன்” எனத் தனக்குள் கூறிக்கொண்டான். அவன் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன!
13 வருடங்களுக்கு முன், அதாவது இளங்கோவின் தந்தை குமரப்பன் மரணத்துக்கு சில வருடங்களுக்கு முன்பு, அன்று இளங்கோவின அப்பா குமரப்பனின்  முகத்தில் பொலிவு இல்லை, மிகவும் வாடி இருந்தது. அவருக்கு சொந்தமான 10 செண்டு  இடத்தை அரசாங்க அலுவலகம் கட்ட வேண்டும் என அரசாங்கம்அப்போதைய விலைக்கு அவரிடம் கேட்டது தான் காரணம், அவரின் சோகத்திற்கு, ஆனால் அவ மனைவி கமலமோ சிறிதும் கவலைப்படவில்லை “என்னமோ மொத்த நிலத்தையும்  அரசாங்கம் கேட்கிற மாதிரில்ல வருத்தப்படுராக, 20 ஏக்கர்ல கொஞ்சூண்ட அவன் கேட்கிரான், சரி நல்லவிலை கிடைக்குதுனு கொடுக்காம, சும்மா உக்காந்து கவலைப்பட்டு கிட்டுல்ல இருக்காக” என்றாள், இதைக் கேட்டதும், கோபம் வந்தவராய், “அந்த நிலத்துல ஒருபிடி மண்ணைக் கூட எவனுக்கும் கொடுக்க முடியாது!
அத்தனையும் பொண்ணு விளையிற  பூமி. அந்த கொஞ்சூண்டு நிலத்துல விளையுறது கூட எத்தனை குடும்பத்த வாழ வைக்கும் தெரியுமா. எனக்கு என் மனுஷங்களோட  வயத்துபசிதான் முக்கியம்.” என்றார். ஆமாம்! மச்சான் சொல்லுறது தான் சரி , நிலத்தை யாருக்கும் இம்மி அளவு கூட கொடுக்கமுடியாது. நீ சும்மா இரு புள்ள! என கமலத்தை அடக்கினார் கமலத்தின் அண்ணன் மாடசாமி .அப்படியாக அன்று  நிலத்தை  அரசாங்கத்திற்கு   கொடுக்கவில்லை. அவன் மாமாமாடசாமியும், அப்பா குமரப்பனும் அந்த நிலத்தை பராமரித்து விவசாயம் செய்து வந்தனர்.
குமரப்பனுக்கு ஒரு ஆசை இருந்தது   தன் ஒரே மகனை நன்றாக படிக்க வைக்க நினைத்தார், “நம்ம ஊரு விவசாயத்துக்கு பயன்படுற மாதிரி அவன் படிப்பும் செயலும் இருக்கணும்”, இதை மனைவி கமலத்திடம் பலமுறை கூறி இருக்கிறார் .இளங்கோவும் பள்ளி  படிப்பு நேரம் தவிர்த்து மற்ற நேரம் விவசாயத்தின் நுணுக்கங்களை தந்தையிடம் இருந்து தெரிந்து வைத்திருந்தான். அவனுக்கும் அதில் ஆர்வம் இருந்தது. சில ஆண்டுகள் கழித்து உடல் நலம் குன்றி குமரப்பன் மரணித்தார்,
இது தான் இளங்கோவை மிகவும் பாதித்த விடயம். அப்போது அவனுக்கு வயது 17.  அதன்பின், அவன் மாமா மாடசாமி தான் விவசாயத்தையும் குடும்பத்தையும் பராமரித்து  வந்தார். இளங்கோவும் படித்து முடித்து , ஒரு நல்ல வேலையும் கிடைத்து சேர்ந்தான். தற்போது மாமாவுக்கும் உடல் நலம் சரியில்லை அவரால் விவசாயத்தை தொடர்ந்து பார்க்க முடியவில்லை. இதற்கிடையில், இளங்கோவிற்கு வெளிநாடு செல்ல அவன் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்தது. இன்னும்  ஒரு வாரத்தில் அவன் கிளம்ப வேண்டும்.
இந்நிலையில், சில ஆண்டுகளாகவே  நிலத்தை விலை பேச  அப்பகுதியின் தொழில் அதிபர் ஒருவர் அவன் அம்மாவிடம் உறவினர் ஒருவரின் துணையோடு அணுகினார். அவர் கேட்ட விலை கமலத்திற்கு  முழு சம்மதம் தான். ஆனால் இதுநாள் வரை மாடசாமி சம்மதிக்க வில்லை.ஆனால் இப்போது அவரால் விவசாயத்தை  பராமரிக்க முடியவில்லை. அதனால் அவரும்  மெளனமாக இருந்தார், அவர் இளங்கோவின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தார். இளங்கோ மிகுந்த மனக்குழப்பத்திற்கு தள்ளப்படவனாய், “என்ன செய்ய, இல்லை, யாருகிட்டக்கையாது பாடுபட கொடுக்கலாமா? அது சரியும் படாது ஒருவர் பொறுப்பாக இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று எண்ணி அவன் நெருங்கிய நண்பன் கோபாலிடம் இது பற்றி கூற, அவனும், விற்று விடுவது தான் நல்லது , “விவசாயம் பண்ணனும்னு ஆசை இருந்தா, வெளிநாட்டிலிருந்து வந்து விவசாய நிலம் வாங்கி அதைத்தொடரலாம்” என்று அறிவுரை கூறினான்.  இப்படித்தான் இருந்தது   பலரின் அறிவுரையும். ஆனால் அவனுக்கு இந்த அறிவுரைகள் எதுவும் திருப்தி  அளிக்கவில்லை.    தந்தை கண்ட கனவு பலிக்காது என எண்ணும் போது, பெரும் வருத்தத்தையும் வலியையும் உணர்ந்தான். அது அவனது மனதை அறுத்துக் கொண்டு இருந்தது.
நெடு நேரம் கழித்து, மனசாட்சியின் சாட்சியாக ஒரு முடிவை எடுத்தவனாய், “இப்படியே எல்லோரும் விவசாயத்தை விட்டு வந்துட்டா , அப்புறம் யார்தான் அதைப்பண்றது, விவசாயம் மக்களின் தேவை மட்டும், அல்ல சேவையும் கூட.,அப்பாவின் கனவு மெய்ப்பட தான் விவசாயத்திற்கு செல்வதே சரி ” என ஆழமாய் சிந்தித்தவனாய் விமானத்தின் பயணச்சீட்டை தூக்கி எறிந்தான். அம்மாவை அலைபேசியில் அழைத்தான், நிலத்தை  விற்க வேண்டாம். நேரில் வருகின்றேன், என்று கூறிழைப்பை துண்டித்தான் . வெளியே ஆலய மணியின் ஓசையும் ரம்மியமாய் அடிக்க, ஒரு பெரிய மனப்பாரத்திலிருந்து விடுபட்டவனாய் நிம்மதிப் பெருமூச்சுவிட்டான்

A topic buyessayonline.ninja sentence presents one point of your thesis statement while the information in the rest of the paragraph supports that point

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “கனவு – சிறுகதை”
  1. சரவணன் says:

    /// காந்திராஜ்

    இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள். ///

    காந்திராஜ், உங்கள் கட்டுரை அருமை!

    (கதை எழுத விரும்பினால் படிக்கவும் – ‘விமலாதித்த மாமல்லன் கதைகள்’ புத்தகம். தினத்தந்தி இணைப்பு மலர் கதைகளைத் தாண்டியும் இலக்கியம் உள்ளது.

அதிகம் படித்தது