மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கருணாநிதியுடன் கவலையில்லாக் காளையர் கழகம்

ஆச்சாரி

Dec 1, 2012

சில்லறை வணிகத்தில்  அந்நிய முதலீடு குறித்து அரசியல்வாதிகளின் மனநிலையை அறிய கவலை இல்லாக் காளையர் கழகம் தி.மு.க தலைவர் கருணாநிதியை  சந்தித்தது.  அந்நிய முதலீடு குறித்து தி.மு.க வின் கருத்து அறிவது தான் அதன் நோக்கம்.

வேலு: வணக்கம் தலைவா.

கருணாநிதி:  மதுரையில் பிறந்து, சென்னையில் வளர்ந்து , திருவாரூரில் பிறந்த என்னிடம் ஏமாந்து , தி.மு.க வில் சேர்ந்த உண்மைத் தொண்டன் , தமிழின் செல்வன், ஏமாளி வேலு நீ தானே?.

வேலு: தலைவா! உன் தமிழ் தான் என்னை உன்கிட்ட கொண்டு வந்து சேர்த்தது. தள்ளாத வயதிலும் இப்படி துள்ளலா பேச உன்னால மட்டும் எப்படி முடியுது தலைவா!.

மணி: கலைஞர் அவர்களே! சில்லறை வணிகத்தில அந்நிய முதலீடுக்கு நீங்க ஆதரவா?. இல்லை எதிர்ப்பா?.

கருணாநிதி: எதிர்ப்பு நிறைந்த ஆதரவு. ஆதரவுடன் கூடிய எதிர்ப்பு. வெயிலுடன் கூடிய மழை. மழையுடன் கூடிய வெயில்.

பார்த்தசாரதி: புரியலியே.  ஆதரவும் எதிர்ப்பும் எப்படி சேர்ந்து இருக்க முடியும்?.

கருணாநிதி: பாலும் வெண்ணையும் சேர்ந்து இருப்பது இல்லையா?. கோபாலபுரமும் , சி.ஐ.டி காலனியும்  சேர்ந்து இருப்பது இல்லையா?.  ஆதரவும் , எதிர்ப்பும் சேர்ந்து இருப்பது தானே இயல்பு.
கழகப் பாசறையிலே பாடம் கல்லாதவன் தான் இப்படி கண்மூடித் தனமாக பேசுவான்.

வேலு ( பயபக்தியுடன் ) : தலைவா உன் தமிழுக்கு நான் அடிமை.

பார்த்தசாரதி: நீங்க இதுக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பாகத் தானே இருந்தீங்க. இப்போ என் திடீர்னு இந்தக் குழப்பம்?.

கருணாநிதி:குழப்பம் உங்களுக்குத் தானே ஒழிய எங்களுக்கு இல்லை. எங்கள் வரலாற்றை படித்தவர்களுக்கு எங்கள் முடிவை தெரிந்து கொள்வதில் சிரமம் இருந்திருக்காது. பொது நலனுக்காக , தலைவரின் குடும்ப நலனை தியாகம் செய்யும் கேவலமான வழி எங்களுக்குத் தெரியாது.

மணி: சரி இதுக்கு பதில் சொல்லுங்க. காங்கிரஸ் அரசு சில்லறை வணிகத்தில்  அந்நிய முதலீடுக்கு ஆதரவாக சட்டம் கொண்டு வந்தால் , அதை ஆதரிப்பீர்களா?.

கருணாநிதி: சிறு வணிகர்களுக்கு மூவாயிரம் வருடங்களாக தி.மு.க ஆதரவாக இருந்திருக்கிறது. நான் பிறக்கும் முன்பே சில்லறை வணிகர்களுக்காக பல போராட்டங்களை நடத்தினேன். இதோ இங்கிருக்கும் பேராசிரியர் முப்பது வருடங்களாக வெற்றிலை போட்டு சிறு வணிகர்களுக்கு வியாபாரம் தந்திருக்கிறார். அப்படி பட்ட பெருமை கொண்ட தி.மு.க  கண்ணீர் நிறைந்த கண்களுடன், நெஞ்சம் கனத்த நினைவுகளுடன், மனம் நிறைய மந்திரி சபை எதிர்பார்ப்புக்களுடன் கண்டிப்

பாக  அந்நிய முதலீடுக்கு ஆதரவாக வாக்களிக்கும்.மணி: அப்போ நீங்க முன்னாடி சொன்னது எல்லாம் பொய்யா?.கருணாநிதி:  நான் அப்படிச் சொல்லவில்லையே. நாளைக்கே அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக வாக்களித்த தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தமிழ்நாடு முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்த நான் கழக் கண்மணிகளுக்கு உத்தரவு போட்டிருக்கேன்.

வேலு  : தலைவனின் உத்தரவை ஏற்று நாளை சிறை புகுவோம்.

மணி: சிறு வணிகர்களின் குடும்பங்கள் நடுத் தெருவுக்கு வந்து விடுமே.

கருணாநிதி : இப்பவே என்ன மிச்சம் இருக்கு தம்பி?. ஏதோ ஒரு குடும்பமாச்சும் நல்லா இருக்கட்டும்.

பார்த்தசாரதி: எந்தக் குடும்பம் மிஸ்டர். கருணாநிதி?.

கருணாநிதி: இன்னும் புரியலையா?. என்ன நல்லாப் பாருங்க.

மணி: இன்னும் புரியலியே!

கருணாநிதி: என்ன நல்லாப் பாருங்க. இவ்வளவு ஏமாந்தும் உங்களுக்கு புரியலையா?.

பார்த்தசாரதி: உங்க குடும்பமா?.

கருணாநிதி: ஹா! ஹா! ஹா!

மணி, வேலு, பார்த்தசாரதி: தலைவா! நாங்க கிளம்பறோம்.

கருணாநிதி: போயிட்டு வாங்க! அதுக்கு முன்னாடி சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து நாங்க தமிழ்நாடு முழுக்க நடத்த போற ஆர்ப்பாட்டத்துக்கு நிதி போட்டுட்டு போங்க.

மணி, வேலு, பார்த்தசாரதி மூவரும் ஒரு ஐம்பது ரூபாயை உண்டியலில் போட்டு விட்டு நடையைக் கட்டினர்

They then were provided with a minimal explanation about how to solve the if p, then q rule and were given a set of concrete problems involving the use of this and affordable assignment help other logical rules e

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கருணாநிதியுடன் கவலையில்லாக் காளையர் கழகம்”

அதிகம் படித்தது