மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கறுப்பு சூலை 30 ஆம் ஆண்டு நினைவு நாள்

ஆச்சாரி

Aug 1, 2013

1983ம் ஆண்டு சூலை மாதம் 23ம் தேதி இலங்கையின் சிங்கள பேரினவாத அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவு இன்று ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்கிடுமாறு உலக அரசுகளை உலகத் தமிழ் அமைப்பு வேண்டிக்கொள்கிறது.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக 1958 இல் வன்முறை ஏற்படுத்திய காயம், அதன் தாக்கம், அதனுடைய அரசியல் விளைவு போன்றவற்றை விடவும் 1983 வன்முறை ஏற்படுத்திய விளைவுகள் அரசியலிலும் மக்களின் வாழ்க்கையிலும் பெரிய இழப்புகளை ஏற்படுத்தியது என்பது உண்மை. இடையில் 1977 வன்முறை, 1981 இல் யாழ் நகர் எரிப்பு மற்றும் யாழ்ப்பாண நூலக எரிப்புடனான வன்முறை போன்றவற்றையும் விட, 1983-ல் நடந்த அரசு வன்முறை கொடூரமானது.

இலங்கைத் தமிழரின் மனத்தில் பெருங்காயத்தையும் இழப்புகளையும் ஏற்படுத்திய இந்த நாள்கள் “கறுப்பு ஜூலை” என்றே நினைவுபடுத்தப்படுகின்றன. சிறையில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 52 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். இலங்கை அரசினால் 1983 இல் நடத்தப்பட்ட பயங்கர வன்செயல்களால், 3000 தமிழர் கொல்லப்பட்டு அவர்களின் 300 இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டு, சரக்குக் கப்பல்களில் அரசு தமிழ் அகதிகளை வடக்கு – கிழக்குக்கும் இந்தியாவுக்கும் அனுப்பி வைத்தது. மேலும் 3 இலட்சம் வரையான ஈழத் தமிழர் உலகில் பல நாடுகளில் அகதிகளாக புலம்பெயர்ந்தனர்.

இவைகளுக்கு பின்பு ஈழத் தமிழர்களுக்கு நடந்த தாங்க முடியாத கொடுமைகளும் அவலங்களும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கடந்த 65 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் அடைந்து வரும் துன்பங்கள் நீங்கி, அவர்களுக்கு நீதியும், அமைதியான நல்வாழ்வு அமைய நாம் எல்லோரும் செயல்பட வேண்டுமென்று உலகத் தமிழர் அமைப்பு வேண்டி கேட்டுக் கொள்கின்றது.

The bare bones of examination answers prepare essaysheaven.com basic or skeleton answers

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கறுப்பு சூலை 30 ஆம் ஆண்டு நினைவு நாள்”

அதிகம் படித்தது