மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காளான் வளர்ப்பில் பலருக்கும் வழிகாட்டும் – அருள் தாமஸ்

ஆச்சாரி

Mar 15, 2013

                 அருள் தாமசை எனக்கு 2002 முதலே நன்கு தெரியும், நானும், தாமசும் லயோலா கல்லூரி மாணவர்கள். லயோலா விடுதியிலே பக்கத்துப் பக்கத்து அறையிலே தங்கி இருந்தோம். அப்போதெல்லாம் தாமஸ் என்னை அன்புடன் அண்ணா என்றே அழைப்பார். ஏன் இன்றுவரை அவரிடம் அந்த மரியாதையைக் காண்கிறேன். படிக்கும் போதே சுயதொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற லட்சிய வெறியோடு இவர் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

                அது சரி… யார் இந்த அருள் தாமஸ்  எனக் கேட்கிறீர்களா ? இவர் காளான் விதை உற்பத்தியில் இந்தியாவின் மூன்றாவது இடத்தில் இருப்பவர். பல வேலை இல்லா இளைஞர்களுக்கு வழிகாட்டியவர்.  தமிழகமெங்கும் சென்று பலருக்கும் சுயவேலைவாய்ப்பு  பற்றி பயிற்சி வகுப்பு எடுப்பவர். இவரைத்தான் நாம் இப்பகுதியில் காணப்போகிறோம்.

                இவர் சிவகங்கை மாவட்டத்திற்கு அருகே உள்ள காளையார் கோவிலில் உள்ள சிறு கிராமமான மந்திக் கண்மாய் என்ற ஊரில் பிறந்தவர். இவர் ஊர் புழுதி பறக்கும் செம்மண் நிலம் கொண்ட பகுதி, வானம் பார்த்த பூமிப்பகுதி இது. விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் பனிரெண்டாம் வகுப்பு வரை தன் சொந்த கிராமத்திலேயே படித்தார். பின் மேற்படிப்பு படிக்க எண்ணி தமிழகத்திலேயே சிறந்த கல்லூரியான சென்னை லயோலா கல்லூரியிலே தான் படிப்பேன் எனக்கூறி இக்கல்லூரியில் சேர்ந்தார்.

                விலங்கியல் ( zoology ), உயிரியல் தொழில் நுட்பம் ( micro biology ) என்ற பாடப் பிரிவை எடுத்துப் படித்தார். கல்லூரியில் படிக்கும் போதே ஒவ்வொரு மாணவனும் ஏதோ ஒரு பிரிவில் புராஜக்ட் செய்து துறைத் தலைவரிடம் சமர்பிக்க வேண்டும். இதற்காக அருள் தாமஸ் தான் எடுத்துக் கொண்ட தலைப்பு காளான் வளர்ப்பு. இந்த ஆய்வில் இவர் மூன்று மாதம் செலவு செய்து வந்தார். இந்த மூன்று மாத உழைப்பில் காளான் வளர்ப்பின் அருமை பெருமைகளை அறிந்து கொண்டதோடு,  இதில் தீராத ஆர்வம் அவரை அப்போதே பற்றிக் கொண்டது. எப்படிக் காளான் வளர்ப்பில் இத்தகைய வளர்ச்சி அடைந்தாய், அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லலாமே எனக்கேட்டதற்கு இவரே கூறிய விளக்கவுரையாவது….

                அண்ணா…. உங்களுக்கே தெரியும் நான் லயோலா கல்லூரியில் காளான் வளர்ப்பு பத்தி புராஜக்ட் செய்தது. எனக்கு இந்த துறையில இன்னும் அதிகமா தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம் வந்தது.   அதுக்காக முதலாவதாக நான் இணையத்துல காளான் வளர்ப்பு பத்தி அறிந்து கொள்ள முயன்ற போது,  டார்ஜிலிங்கில் டி.கே. மஜீம்தார் என்ற விஞ்ஞானி குறித்து தெரிந்தது, இவரிடம் அனுமதி பெற்று சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவரிடம் நேரில் பயிற்சி பெற்றேன்.

                பிறகே தமிழ்நாட்டுக்கு  வந்து இங்கு காளான் உற்பத்தி, விற்பனை வாய்ப்புகள் குறித்தும் ஆய்வு செய்தேன். வட மாநிலங்களில் பல பகுதிகளில் காளான் உற்பத்தி அதிகம் உள்ளது அதை வாங்குவோர் எண்ணிக்கை குறைவு. ஆனால் தமிழகத்தில் காளான் உற்பத்தி மிகவும்  குறைவு வாங்குவோர் எண்ணிக்கை அதிகம் என்பதை உணர்ந்தேன். இதனால் எனது சொந்த கிராமமான காளையார் கோவில் ஒன்றியம், மந்திக் கண்மாயில் தொழில் தொடங்க எண்ணினேன்.

                இங்கு முக்கிய மூலப்பொருளான வைக்கோல் ஏராளமாக,  இலவசமாகவே கிடைக்கும்,  எனவே எனது நண்பர்கள் உள்ளிட்டோர் மூலம் ரூ.80  ஆயிரம் பணம் திரட்டி எனது வீட்டின் பின்னால் ஒரு குடிசை அமைத்து, கீழே சிமெண்ட் பூச்சிட்டு ஆற்று மணல் நிரப்பினேன். தண்ணீர் வசதிக்காக ஆழ்துளைக் கிணறு வெட்டி கடந்த ஜுலை மாதம் காளான் வளர்க்கும் தொழிலைத் தொடங்கினேன்.

வளர்ப்பு முறை:

                காளான் வளர்ப்பது சுலபமானது தான், வைக்கோலை வெட்டி ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை நன்கு சுடுநீரில் போட்டு அவிக்க வேண்டும். பின்னர்  நிழலில் பரப்பி ஒரளவுக்கு நீர் வடியும் வரை விட்டு சரியான பதம் வரும் போது அதைப் பாக்கெட்டில் அடைக்க வேண்டும்.

                8 அங்குலம் அகலம், 24 அங்குலம் நீளம் கொண்ட பிளாஸ்டிக் பைகளில் முதலில் 5 செ.மீ உயரத்துக்கு, அவித்து நிழலில் ஆறவைக்கப்பட்ட வைகோல் பின்னர் ஓரத்தில் சிறிது காளான் விதை, அதன் மீது மேலும் 5 செ.மீ வைக்கோல் மீண்டும் காளான் விதை என அடுக்காகத் தூவ வேண்டும். ஒரு பைக்கு 150 கிராம் விதை தேவைப்படும். பின்னர் அந்தப் பையைக் கட்டி தொங்கி விட்டு, பக்கவாட்டில் இருதுளைகளை இட வேண்டும்.

                பிறகு நாள்தோறும் அறையின் கீழ் உள்ள மணலில் தண்ணீர் விட்டு வர வேண்டும்.  அறையின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல்கள் வழியாகக் காற்று வந்து தண்ணீர் பட்டு அந்த அறையை ஈரப்பதம் நிறைந்ததாக வைத்துக் கொள்ளும். இது போன்ற சூழ்நிலையில் 15 நாட்களில் பிளாஸ்டிக் பாக்கெட் முழுவதும் வளர்ந்து, வெள்ளை நிறமாகக் காட்சி அளிக்கும். 18 நாட்களில் வெளியே மொட்டு வரத் தொடங்கும். 21 நாளில் அதை அறுவடை செய்யலாம்.

                ஒரு பாக்கெட்டில் 3 முறை அறுவடை செய்ய முடியும்.  ஒரு பாக்கெட்டில் மொத்தம் 800 முதல் 1000 கிராம் வரை காளான் கிடைக்கும்.  50 நாள் சுழற்சி முறையில் பழைய பாக்கெட்டுகளை அகற்றிவிட்டு புதிய பாக்கெட்டுகளை தொங்கவிட வேண்டும். 20 பாக்கெட்டுகளைத் தொங்க விட்டால் 21 நாளில் 17&20  கிலோ காளான் கிடைக்கும்.

                நம் தமிழ்நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கு சிப்பிக் காளானில் வெள்ளை,  வெளிர் சிவப்பு நிறம் கொண்டவையும், பால் காளான் எனப்படும் வகையும் ஏற்றவை இவை 38 டிகிரி செண்டிகிரேடு வரை வெப்பம் தாங்கக் கூடியவை. ஒரு நாளைக்கு 4&5 மணி நேரம் வேலை செய்தால் போதும். களை பறிப்பது, மருந்து அடிப்பது என எந்த வேலையும் இல்லை.

வருவாய்:

                தொடங்கி ஒரு வருடம் முடிவதற்கு முன்பாகவே நாளொன்றுக்கு 10 கிலோ வரை உற்பத்தி செய்ய முடிகிறது.  இதனால் குறைந்த பட்சம் ரூ.1000 வரை ஈட்டலாம். இது தவிர தினமும் 50&60 காளான் விதைப் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்வதால் அதைப் பாக்கெட் ரூ.25  வரை விற்க முடியும்.  காளான் விதையை உற்பத்தி செய்வது சற்றுக் கடினமான பணி. இவற்றை ஆய்வகங்களில் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும்.

சிறந்த உணவு :

                சக்கரை நோய், இதய நோய், ரத்த அழுத்தம், புற்று நோய், பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு காளான் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இக்காளான்கள் மூலம் ஊறுகாய், ஜாம், சூப் பவுடர் செய்யப்படுகிறது. சிப்பிக் காளானை ஒரே நாளில் பயன்படுத்த வேண்டும். குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருந்தால் மூன்று நாள் வரை கெடாமல் இருக்கும். பால் காளான் குளிர்சாதனப் பெட்டி இல்லாமலேயே 4 நாட்கள் வரை தாங்கும்.

                இவ்வாறு தனது காளான் வளர்ப்புத் தொழிலை விளக்கமாகப் பேசிய அருள் தாமஸ்,  இத்தொழில் மட்டுமின்றி  சென்னை லயோலாக் கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். இங்கு தாவரவியல் மாணவர்களுக்கு காளான் வளர்ப்பு குறித்து பல விசயங்களைக் கற்றுத் தருகிறார். பலருக்குக் காளான் வளர்ப்புப் பண்ணை அமைக்க வேண்டிய உதவிகளைச் செய்து வருகிறார். குறிப்பாக தமிழ் நாடெங்கும் உள்ள பல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் இந்தப் பயிற்சி அளித்து உதவி வருகிறார்.  மேலும் இவர் வீட்டிலும் காளான் வளர்ப்புப் பயிற்சி அளிக்கிறார்.

                இந்த காளான் வளர்ப்புத் தொழில் மூலம் மாதம் ரூ,50 ஆயிரம் வருமானம் ஈட்டி வரும் இவர், இங்கு விளைந்த காளான்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முனைந்து செயல்பட்டு வருகிறார். தான் இருக்கும் சிவகங்கை மாவட்டத்தை காளான் வளர்ப்புத் தொழிலின் தலைநகராக மாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டு வருகிறார்.  25 வயதுள்ள அருள்தாமஸ் என்ற உடன் பிறவா சகோதரன்.

Students from the previous course were asked to consider volunteering to team-teach a session with me pro-essay-writer.com

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

49 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “காளான் வளர்ப்பில் பலருக்கும் வழிகாட்டும் – அருள் தாமஸ்”
  1. A.Manimudichozhan says:

    Dear sir,
    I am in neyveli and i am very intersted the mushroom cultivation so please guide me.
    my phone no:9942235506

  2. j.sundharan says:

    எனக்கு காளான் வளர்பில் மிகுந்த ஆர்வம் உண்டு இதை பற்றி பயிற்சி பெற விரும்புகிறேன்.சார் நானும் காளான் தொழில் தொடங்க ஆர்வம் கொண்டுள்ளேன்.மொட்டை மாடியில் காளான் வளர்க்க முடியுமா. பயிற்சி பெற விரும்புகிறேன் எங்கு பயிற்சி கொடுக்குகிற்ர்களா தொலைப்பேசி எண் தேவை உங்களால் உதவ முடியுமா என்னுடைய தொலைப்பேசி எண் 8973655655.பெரும் விவரத்தினை குற்ப்பிடவும்.

  3. Amalourpava Mary says:

    This article is really usefull.I would like to get training in self employment and mushroom cultivation. Could you help me to contact Mr.Arul thomas.

  4. KANAGARAJ says:

    எனக்கு காலான் வலர்பில் ஆர்வம் அதிகம் உன்டு எனக்கு உதவுங்க… செல் 9042422916

  5. archana says:

    எனக்கு காளான் வளர்க அர்வம் இருக்கு பயிற்சி பெற விரும்புகிறேன்.this my phone no 9840620131

  6. archana says:

    எனக்கு காளான் வளர்பில் மிகுந்த ஆர்வம் உண்டு இதை பற்றி பயிற்சி பெற விரும்புகிறேன்.என்னுடைய தொலைப்பேசி எண் 9840620131

  7. SAKTHI says:

    எனக்கு காளான் வளர்பில் மிகுந்த ஆர்வம் உண்டு இதை பற்றி பயிற்சி பெற விரும்புகிறேன்.
    this is my contact no 9486855843,pls send me ur contact no.

  8. ravi says:

    I am also preparing the project my number 99448134369

  9. ravi says:

    pls send u r phone number sir,

    my contact number 9944813469.

  10. rajesh says:

    எனக்கு காளான் வளர்பில் மிகுந்த ஆர்வம் உண்டு இதை பற்றி பயிற்சி பெற விரும்புகிறேன்.please contact 9442417088

  11. mahaalingam says:

    நல்லது ,நனும் படிக்க விரும்புகின்ரேன் 9600867690

  12. meenambal says:

    வணக்கம் சார், என் பெயர் ச,மீனாம்பாள், நான் கோவையில் வசிக்கிறேன். நான் தங்களிடம் காளான் வளர்ப்பு பற்றி பயிற்சி பெற்று தொழில் செய்ய விரும்புகிறேன்.நான் தங்களை தொடர்பு கொள்ள தொலை பேசி எண்ணை தயவு செய்து அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.என்னுடைய தொலை பேசி எண் 9345483700 / 0422 6461605

  13. prakash says:

    எனக்கு காளான் வளர்பில் மிகுந்த ஆர்வம் உண்டு இதை பற்றி பயிற்சி பெற விரும்புகிறேன்.
    இங்கு எங்கு பயிற்சி கொடுக்குகிற்ர்களா தொலைப்பேசி எண் தேவை உங்களால் உதவ முடியுமா என்னுடைய தொலைப்பேசி எண் 9965787872 .

  14. sembusellikrishnan says:

    9965713036

  15. S.Sathyagowri says:

    சார் நானும் காளான் தொழில் தொடங்க ஆர்வம் கொண்டுள்ளேன்.மொட்டை மாடியில் காளான் வளர்க்க முடியுமா. பயிற்சி பெற விரும்புகிறேன் என் ஊர் சேலம் இங்கு எங்கு பயிற்சி கொடுக்குகிற்ர்களா தொலைப்பேசி எண் தேவை உங்களால் உதவ முடியுமா என்னுடைய தொலைப்பேசி எண் 8925785890 .

  16. d.paramasivam says:

    எனக்கு காளான் வளர்பில் மிகுந்த ஆர்வம் உண்டு இதை பற்றி பயிற்சி பெற விரும்புகிறேன்

  17. R.Manikandan says:

    sir,
    na chennaila irukken. enaku kaalan eppudi valarpathu, and atha eppudi marketing panrathunu, detail venum sir, pls help me

  18. mohanasundaram.k.k says:

    சார் நானும் காளான் தொழில் தொடங்க ஆர்வம் கொண்டுள்ளேன்..வழி காட்டவும்
    9865438280
    9751326106

  19. Ganesh says:

    sir i intrested on the Mushrooms Cultivation,so pls Give Ur Email id or Contact No.,My number is 7200953362

  20. fathima says:

    sir ,
    how i contact you.

  21. star SHG says:

    Sir ,
    we are ceylon refugees camp from vaniyambadi. our SHG is very interest to grow of masroom. how we get masroom seeds from nearest place . please help us to improve our financial status.

    Thankig you .

  22. jayakumar says:

    Dear sir,i want mr.arul thamos contact details.pls help me sir.

  23. jayakumar says:

    எனக்கு காளான் வளர்பில் மிகுந்த ஆர்வம் உண்டு இதை பற்றி பயிற்சி பெற விரும்புகிறேன்.பயிர்ச்சி பெரும் விவரத்தினை குற்ப்பிடவும்.

    my contact no : 9787166883
    8608117159

  24. G.venkatesan says:

    நானும் காளான் தொழில் தொடங்க ஆர்வம் கொண்டுள்ளேன்..வழி காட்டவும்.

  25. mano says:

    எனக்கு காளான் வளர்பில் மிகுந்த ஆர்வம் உண்டு இதை பற்றி பயிற்சி பெற விரும்புகிறேன்.9894447365

  26. valarmathy says:

    Der Sir,

    I need Mr.Arul Thomas Contact number. Kindly let me know the same.
    My Contact number 9585598700

  27. muthulakshmi says:

    My Name is Muthulakshmi In Karaikudi I am interested in mushroom cultivation pls help me pls sent me your phone no

  28. p.NANDHAKUMAR says:

    sir iam nandhakumar in tuticorin i need to start this kalan valarpu tholil pls help me sir my number 9443403297

  29. P.S.RAJA says:

    எனக்கு காளான் வளர்பில் மிகுந்த ஆர்வம் உண்டு இதை பற்றி பயிற்சி பெற விரும்புகிறேன் Cell:9787745840

  30. karthik says:

    sir i am karthik now resding in coimbatore.my native muraiyur near sivagangai .i am having 7 years experience in the feild of fermentation.bangalore mnc biotech now i am intrest to do own bussiness please give me idea about mushroom cultivation which is related to my experience my contact no 9629837589

  31. k.venkidusamy says:

    மொட்டை மாடியில் காளான் வளர்க்க முடியுமா தகவல் கொடுங்கள்…..9787229564..திருப்பூர்.

  32. சி.தெ.அருள் says:

    சார் நானும் காளான் தொழில் தொடங்க ஆர்வம் கொண்டுள்ளேன்..வழி காட்டவும்.

  33. raji says:

    sir,my age is 50.iwant kalanvalarpu.pls,i need your help.pls help me sir.iam in madurai.

  34. Senthilkumar says:

    Dear sir,
    How are you, thank you for ur good information for mushroom cultivation. sir kindly send me for thamos contact no or email id.

  35. Saravanan says:

    Dear sir., thank u sir..for the mushroom cultivate information… I am interest to do this…

  36. s.senthilkumar says:

    Dear sir how are you, thanks for ur information. I am intrested in doing mushroom business pls send Arul thomas number.

    Regards,
    S.Senthilkumar
    9842359596

  37. ramkumar says:

    எனக்கு காளான் வளர்பில் மிகுந்த ஆர்வம் உண்டு இதை பற்றி பயிற்சி பெற விரும்புகிறேன்.
    திச் இச் ம்ய் சொன்டச்ட் நொ 9944744022

  38. maria lawrence says:

    எனக்கு காளான் வளர்பில் மிகுந்த ஆர்வம் உண்டு இதை பற்றி பயிற்சி பெற விரும்புகிறேன்.
    this is my contact no 9600873856,pls send me ur contact no.

  39. VAIJAYANTHI says:

    எனக்கு காளான் வளர்பில் மிகுந்த ஆர்வம் உண்டு இதை பற்றி பயிற்சி பெற விரும்புகிறேன் please send me your contact mobile number to 9884787215

  40. VAIJAYANTHI says:

    எனக்கு காளான் வளர்பில் மிகுந்த ஆர்வம் உண்டு இதை பற்றி பயிற்சி பெற விரும்புகிறேன் please send me your contact mobile number and chennai address

  41. R.MANJULA says:

    I AM VERY INRERSTED IN MUSHROOM CULTIVATION.
    PLEASE HELP(GUIDE) ME. PLEASE SEND ME YOUR PHONE NUMBER.IN MY NUMBER 9965045843.

    THANKYOU

    R.MANJULA

  42. SUNDARAVADIVELU says:

    MY NAME SUNDAR I AM IN COIMBATORE SIX YEARS BACK I FALL DOWN FROM TABLE I AM HOUSE I WANT TO START KALAN PRODUCTION PLEASE GUIDE ME.
    THANKUSIR

  43. kotti says:

    Dear sir,

    Can u pls send Mr. Arul thomas contact nos…

    Regards
    Kotteswaran.K
    9790635645

  44. Gururajan says:

    I am very interested in mushroom cultivation but no Timing in my job

  45. Arun says:

    Dear sir,i want mr.arul thamos contact details.pls help me sir.

அதிகம் படித்தது