மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கிராமப்புற சமையல் – பச்சை மஞ்சள் கோழி வறுவல்

ஆச்சாரி

Jul 15, 2012

நகரம் ஆகட்டும் கிராமம் ஆகட்டும் இன்றைய மகளிர், வீடுகளில் அசைவ உணவு மசாலாவும் எண்ணையும் அதிகமாக கலந்து சமைக்கிறார்கள். அப்படி சமைத்தால்தான் சுவை மிகுதியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. பழைய கால அதாவது நம் முன்னோர்கள் காலத்து சமையலைப் பற்றி தெரிந்து கொள்வதில்லை. முன்னோர்களின் நாட்டு வைத்தியம் போல் நம் முன்னோர் காலத்து உணவு தயாரிக்கும் முறையும் மிக எளிமையாகவும் சுவையாகவும் வயிற்றில் கோளாறு ஏற்படுத்தாததாகவும் இருந்தது. சரி பழைய கால கோழி வறுவல் முறையைப் பற்றி அறிவோமா?
நாட்டுக் கோழிக்கு என்று தனி சுவை உண்டு. அந்த நாட்டுக் கோழியை அப்போது எப்படி வறுத்து உண்டார்கள் என்று பார்ப்போம்.

இரண்டு மூன்று பேர் சாப்பிடும் அளவுக்கு நாட்டுக் கோழி கால் கிலோ,
தேவையான அளவு உப்பு,
மூன்று மேசைக் கரண்டி எண்ணை,
கடுகு, பச்சை மஞ்சள் துண்டு ஒன்று (தூள் அல்ல),
மிளகு, சீரகம். இவைதான் அந்தக் கால கோழி வறுவலுக்குத் தேவை யான பொருட்கள்.

செய்முறை: முதலில் கோழியை அவித்து வைத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் துண்டையும் மிளகையும் சிறிது தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கூழ் போல அம்மியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். விறகு அடுப்பில் சிறிய மண் சட்டியை வைத்து முதலில் எண்ணை ஊற்றி ( தேங்காய் எண்ணை சேர்த்தால் நன்று) கடுகு, சீரகம் இரண்டையும் போட்டு சிறிது வதக்கி விட வேண்டும். கருவேப்பிலை தேவையாய் இருந்தால் சேர்க்கலாம். பின்பு ஏற்கனவே வேக வைத்த நாட்டுக் கோழியை எடுத்து சட்டியில் போட்டு சிறிது நேரம் எண்ணையில் வதக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்த மஞ்சள் மிளகு கலவையை கோழியுடன் சேர்த்து பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் கழித்து எடுத்து சாப்பிடலாம். எவ்வளவு விரைவாக கோழி வறுவல் சமையல் முடிகிறது பாருங்கள்.
சாப்பிடும்போது இந்த சுவை சற்று வித்தியாசமாக இருக்கும். ஆனால் மசாலாக்களை போல் நம் வயிற்றுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

Programs and college majors have different values at www.collegewritingservice.org different institutions depending on the alignment between particular curricula and regional labor market demand, as well as on differences in program quality

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கிராமப்புற சமையல் – பச்சை மஞ்சள் கோழி வறுவல்”

அதிகம் படித்தது