மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கிருஷ்ணவேணி (குழந்தைகள் கதை)

ஆச்சாரி

Oct 1, 2011

கிருஷ்ணவேணி வாய் பேச முடியாத நான்காம் வகுப்பு மாணவி. மற்ற குழந்தைகள் பயிலும்  சாதாரண பள்ளியிலேயே பயின்று வந்தாள். புதியன எல்லா வற்றையும்  மிகவும் ஆர்வமாக கற்க ஆசையுடையவள்.

இவளுடைய ஆர்வ போக்கை பார்த்து  இவளுடைய பெற்றோர்கள் மிகவும் ஊக்குவித்தனர். பள்ளி நேரம் போக மீதி நேரத்தில் ஓவியம், நாட்டியும், நீச்சல், யோகா, வீணை மீட்டல், கூடைபந்து போன்ற பலவற்றை கற்றுக் கொண்டாள்.

இவளுடன் ஒரே வகுப்பில் பயிலும் மாணவிகள் தான் சுமதியும், பார்வதியும் . இவர்களுக்கு கிருஷ்ணவேணியை பார்த்தால் இகழ்வாக தெரியும். எப்பொழுது  பார்த்தாலும் கேலி பேசுவார்கள். ஆனால் அதே வகுப்பு தோழி மீனாவுக்கு கிருஷ்ணவேணியை ரொம்ப பிடிக்கும்.

ஒரு நாள் பள்ளியில் ஆங்கில வார்த்தை விளையாட்டு போட்டி அறிவித்தனர். அதற்கு மீனா, பார்வதி, சுமதி என ஆர்வமுள்ள மாணவர்கள் பெயர் கொடுத்தனர். எப்பொழுதும் போல் கிருஷ்ணவேணிக்கும் கலந்துக்கொள்ள ஆசை. தன் ஆசையை ஆசிரியையிடம் தெரிவித்தாள். ஆசிரியையும் அவளுடைய பெயரை சேர்த்துக் கொண்டார்.  பின்பு போட்டி நாளன்று கிருஷ்ணவேணிக்கு யார் உதவியாளராக இருக்க விருப்பம் என்று மாணவர்களை பார்த்து கேட்டார்.

மீனா மிகவும் ஆர்வமாக வழிய வந்து உதவியாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். போட்டி நாளன்று கிருஷ்ணவேணி ஆசிரியை கூறும் வார்த்தைகளுக்கு  ஒரு தாளில்  எழுத்துகளை எழுத வேண்டும். அதை அப்படியே மீனா மேடையில் மைக்கில் வாசிக்க வேண்டும்.  மீனா திருத்தியோ சிந்த்திதோ எதையும் மாற்றிக் கூறக் கூடாது என்று முடிவாகியது. போட்டிக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்தது. போட்டியில் பெயர் கொடுத்தவர்கள் கடினமாக உழைத்து தங்களை தயார் கொள்ளலானார்கள். மீனாவும்,கிருஷ்ணவேணியும் சேர்ந்தே பயிற்சி செய்தனர்.

ஆனால் பார்வதியும், சுமதியும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் கிருஷ்ணவேணியை கேலி செய்தனர்.  வாயே பேச முடியாது இதில் என்ன வார்த்தை விளையாட்டு என்று அவள் மனதை புண்படுத்தினர். எப்படியும் போட்டியில் நாங்கள் தான் வெல்ல போகிறோம் உனக்கு எதற்கு வேண்டாத வேலை என்றனர். கிருஷ்ணவேணிக்கு உள்ளுக்குள் பயம் வந்து விட்டது. ஆனாலும் மனம் தளராமல் மீனா ஊக்குவித்தாள். முயற்சி திருவினை ஆக்கும் எனவே மனம் தளராதே என்று ஆறுதல் கூறினாள் மீனா. போட்டி நாளும் வந்தது.

போட்டியும் ஆரம்பித்து விட்டது. பார்வதி எல்லா கேள்விகளுக்கும் சரியாக பதில் கூறி வந்தாள். இறுதியில் ஒரே ஒரு வார்த்தை தான் இருந்தது. ஆனால் அந்த வார்த்தைக்கு தவறான எழுத்துக்களை கூறி வெற்றி வைப்பை இழந்தாள். அடுத்து சுமதியின் வாய்ப்பு. அவளும் எல்லா வார்த்தைகளுக்கும் சரியான பதில் கூறினால். ஆனால் எழுத்துகளை இழுத்து இழுத்து கூறினாள். டெலிபோன் என்ற வார்த்தைக்கு t … e . ..l …e … f .. o …. இல்லை இல்லை teleph . o ..ne.. என்பாள்.  அப்பொழுது தான் மீனாவும், கிருஷ்ணவேணியும்  அதை கண்டனர். பார்வையாளர் பகுதியில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த பார்வதியும், அவள் சகோதரி ரம்யாவும் சுமதிக்கு ஒளி எழுப்பாமல் வாயை அசைத்து உதவிக் கொண்டிருந்தனர். மீனாவுக்கும்,  கிருஷ்ணவேணிக்கும் மிகவும் கோபமாக வந்தது. இதற்கிடையில் சுமதி ancestor என்ற வார்த்தைக்கு தவறாக ansester என்று பதில் அளித்து போட்டியை விட்டு வெளியேறினாள். மீனாவின் முறை வந்தது போட்டியின் இறுதி கேள்விக்கு வந்த மீனா saint paul என்ற வார்த்தைக்கு saint pal என்று தவறாக உச்சரித்து போட்டியை விட்டு வெளியேறினாள்.

கிருஷ்ணவேணியின் வாய்ப்பு வந்தது. அனைத்து வார்த்தைகளுக்கு தடுமாற்றம் இன்றி பதில் எழுதி மீனாவிடம் காண்பித்தாள். உடனே மீனாவும் அதை ஒளிவாங்கியில் உச்சரித்தாள். இறுதி கேள்வியான bean sprout என்ற வார்த்தைக்கு மிகவும் தடுமாறி யோசித்தாள். பின் சரியான வார்த்தையை கண்டு பிடுத்து எழுதி முதல் பரிசை வென்றாள். மீனாவும், பார்வதியும் இரண்டாம் பரிசுகளை தட்டி சென்றனர்.

பிறர் நம்மை இகழ்ந்தாலும், கேலி செய்தாலும் மனம் தளரக் கூடாது. கிருஷ்ணவேணியை போல நாமும் அயராது மன உறுதியுடன் நேர்மையாக உழைக்கவேண்டும். அவ்வாறு செய்தோமே ஆனால் பிறர் நம்மால் செய்ய முடியாது என்று நினைக்கும் செயலைக் கூட எளிதாக செய்து வெற்றி காணலாம். அதே சமயம் பிறர் மனம் புண் படும் படி பேசுதல் ஆகாது. முக்கியமாக ஊனத்தை சுட்டிக் காட்டக் கூடாது சரியா?

Further empirical research, however, is buy essay writer necessary in the field both qualitative and quantitative data should be gathered to establish factors that most effectively contribute to improved writing

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கிருஷ்ணவேணி (குழந்தைகள் கதை)”

அதிகம் படித்தது