மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குட்ரோலியில் ஏற்றப்பட்ட சுடரொளி

ஆச்சாரி

Feb 15, 2014

எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும் என்று 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆறாம் தேதி இரண்டு பெண்கள் சொன்னதைக் கேட்க வேண்டுமென்றால், நாமெல்லாரும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூருக்குச் செல்லவேண்டும். “ஒன்றே கடவுள் ஒன்றே நம்பிக்கை” என்று போதித்தவர் நாராயணகுரு. இவரது போதனைகளை பின்பற்றுபவர்கள் “பில்லவா” வகுப்பினர் என்று அழைக்கின்றனர். இந்த பில்லவா வகுப்பினரில் ஒருவர்தான் திரு.ஜனார்த்தன பூசாரி என்னும் அருமையான மனிதர். இவர் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவருமாவார்.

திரு.ஜனார்த்தன் பூசாரி “நாம் எல்லோரும் கடவுளின் குழந்தைகள், இதில் எந்த வேறுபாடும் இல்லை” என்பதுதான் எங்கள் நாராயண குருவின் கொள்கை. மேலும் அவர் சொல்லும் பொழுது கணவன் முன்னாலும், பின்னர் மனைவியும் இறப்பது இயற்கையே. ஏன், என் அம்மாவே அப்பா இறந்த பின் முப்பது வருடங்கள் கழித்துதான் இறந்தார். என்தாய் விதவை என்பதால் தன் மகள்களின் திருமணத்தில் கலந்து கொள்ளக்கூட அவருக்குத் தடை இருந்தது.

விதவைகள் என்று பெயரிட்டு அவர்களை பல சடங்குகளுக்கு ஆளாக்கி இருட்டு அறையில் அவர்களை முடக்கி வைப்பதை, நாராயண குரு விரும்பாததோடு மட்டுமில்லாமல் எதிர்க்கவும் செய்தார்.

எங்கள் பில்லவா சமூகத்தில் நாராயணகுருவின் கீழ் சுமார் 200 கோவில்கள் இருக்கின்றன. சொல்வதோடு மட்டுமின்றி செயலிலும் காட்டவேண்டும் என்பதற்காக 2012ம் ஆண்டு விதவைகளைக் கொண்டு “பூசைகள்” செய்ய வைத்தோம். அவர்களை கோவில் தேரில் வடம் பிடித்து இழுக்கவும் அனுமதித்தோம்.

இதன் தொடர்ச்சியாக 2013ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி நான்கு மாதங்களாக அர்ச்சகராக செயல்பட பயிற்சி கொடுக்கப்பட்ட இரண்டு விதவைகளை நியமித்தோம். பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அன்னபூர்ணேஸ்வரி சமேத கோகர்ண நாதேஸ்வரர் கோவிலில் முதன்முதலில் கருவறையில் நுழைந்து பூசை செய்யவும் அனுமதித்தோம்.

நாராயணகுருவின் வாக்குப்படி பூசைகள் செய்ய பெரிய பயற்சிகள் ஒன்றும் தேவையில்லை மனதார இறைவனுக்கு ஆரத்தி காட்டுவதே போதுமானது. இந்த இரண்டு விதவைகளையும் பூசை செய்ய வரும் முதல் நாள் மங்கள வாத்தியங்கள் முழங்க அழைத்து வந்தோம். அன்றிலிருந்து அவர்கள் கருவறையில் இருந்து சிரத்தையாக பூசை செய்கிறார்கள் என்று ஜனார்த்தன் பூசாரி சொன்னார். படிப்படியாக இந்த எண்ணிக்கை அதிகரித்து நாராயண குருவின் எல்லாக் கோவில்களிலும் விதவைகளே அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ஏற்பாட்டிற்கு பெண்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகவும் சொன்னார். முக்கியமாக மற்ற மதத்தினர் யாரும் இந்த ஏற்பாட்டினை எதிர்க்கவில்லை என்பதும் வரவேற்கத் தகுந்தது என்றும் கூறினார்.

சமூக மாற்றங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. அதை அங்கீகரிக்கும் மனப்பக்குவமும் மக்களிடையே வளர்ந்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மையே.

Perspectives on homework help and answers psychological science

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குட்ரோலியில் ஏற்றப்பட்ட சுடரொளி”

அதிகம் படித்தது