மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குறுக்குவெட்டு – சாலை விபத்துகள்

ஆச்சாரி

Jul 1, 2011

சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை பெரிதும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது. இது குறித்த உண்மை நிலை அறிய திண்டுக்கல் பகுதியில் சரக்குந்து ஓட்டுனராக 35 வருடங்களாக பணிபுரியும் சந்திரசேகர் அவர்களிடம் பேசிய போது கிடைக்கப் பெற்ற தகவல்கள்

தமிழகத்தில் அதிகமாக விபத்துகள் நடப்பது எதனால்?
விபத்துகள் ஒத்தை ரோடுகள்ள நடக்கறது இல்லைங்க.. பெரும்பாலும் ஹைவேஸ்லே  தான் அதிகமா நடக்குது, இதுக்கு முக்கிய காரணம் ரோடு நல்லா போட்ட பிறகு எல்லாரும் நூறுக்கு மேலே தான் வண்டிய ஓட்டுறாங்க, நூத்தி முப்பது வரைக்கும் போறாங்க.. Omni பஸ் எல்லாத்திலையும் Volvo என்ஜின் வந்துருச்சுங்க.. அதனாலே Radiator பிரச்சனை எல்லாம் கிடையாது..  power steering, A/C  வேற வந்துருச்சா!  வண்டி ஒட்டுறவங்களுக்கு அலுப்பே தெரியாது.. நிக்காம இழுத்து புடிச்சு போய்கிட்டே இருக்காங்க.. இப்படி வேகமா போறது ஒரு பக்கம்.. நம்ம ஊரு ஹைவேஸ் ரோடுலே எல்லாம் நெறைய சின்ன ரோடுங்க, subway வந்து இணையுது.. ஆனா அதையெல்லாம் வண்டி ஓட்டுறவன் முன்னாடியே தெரிஞ்சுகுற மாதிரி சிக்னலோ, Flasher லைட்டோ கிடையாது.. திடீர்னு சப்வேகுள்ள வந்து பைக் நுழையும் போது வண்டிய control பண்ண முடியாது.. ராத்திரிலே வரும்போது ரோட்லே மட்டும் தான் வெளிச்சம் இருக்கும், ஓரத்திலே எல்லாம் இருக்காது..அதனாலே ஹைவேஸ் ரோடுல நெறைய சிக்னல் லைட்டுங்க போடணும்.. வேகத்திலே கட்டுப்பாடு கொண்டு வரணும்..

சமீபத்தில் நடந்த விபத்தில் 22 பேர் இறந்தது ஏன்?
அந்த விபத்து ராத்திரிலே நடந்ததுங்க.. பஸ் காரன் லாரியை இடது பக்கம் ஓவர்டகே பண்ணும்போது subway வழியா திடிர்னு வந்த bike னாலே லாரிக்காரன் left ஒதுங்கிட்டான், பஸ்காரன் வழி இல்லாமே, left platform மேலே ஏறி வயலுக்குள்   இறங்கிட்டான்.. கீழே இருந்த diesel tank கல்லுலே மோதி நெருப்பு வந்துருச்சு.. நெருப்பு எரிஞ்சா டிரைவர்க்கு முன்னாலே இருக்குற கண்ணாடி சீக்கிரம் உடைஞ்சிடும்.. ஆனா passenger side கண்ணாடி உடைய நேரம் ஆகும்.. அதுக்கு கனம் அதிகம்.. முன்னாடியெல்லாம் வண்டிலே manual door இருக்கும்.. இப்போ எல்லாம் remote  lock ஆக இருக்கறதாலே ஒரு கதவு தவறுனாலும் மீதி மூணும் தொரக்காது..நெருப்பு வேற எரிஞ்சதாலே எல்லாரும் செத்துட்டாங்க.. ஏசி வண்டி,அதனாலே   காஸ் வேற லீக் ஆயிடும்..

லாரிகள் விபத்துக்கு காரணமாக  இருக்கிறதா?

சரக்கு லாரியாலே விபத்துகள் நடக்குறது ரொம்ப கம்மிங்க.. நாங்க எப்பவும் நிதானமா வண்டி ஓட்டுவோம்.. ஆம்னி பஸ் தான் வேகமா போவான்.. ஏன்னா அவன் competition லே இருக்கான்.. உதாரணமா,  மதுரை லே சாயங்காலம் 04:30 மணிக்கு வண்டி எடுக்குற வண்டி, காலை ௦06:30௦ மணிக்கு ஹைதராபாத் போய்  சேந்துடுறான்.. 1200 km தூரம்.. வண்டி வேகமா ஓட்டலைனா ஆளுக வர மாட்டாங்க.. நாங்க அப்படி இல்லை.. இந்த நாள் போய் சேரணும்னு தான் கணக்கு இருக்கும்.. பெரும்பாலும் லாரி டிரைவருங்க காலை ௦04:30  மணிக்கு வண்டிய ஓரமா நிறுத்தி நல்லா தூங்கிட்டு, ஆறு மணிக்கு மேலே வண்டி எடுப்போம்.. அதனாலே எங்களுக்கு ரெஸ்ட் இருக்கும். மெதுவா தான் ஓட்டுவோம்.. விபத்துகள் ஏற்படாது.. பஸ் அப்படி கெடயாது..

அமைச்சர் ஒருவர் விபத்தில் இறந்து போனது குறித்து?

சார், கார் டிரைவருங்களும்  இப்போ 140 km வேகம் போறாங்க.. ஏசி வண்டி வேற.. தூங்காம வண்டி ஒட்டுனா கண்விழி தானா களைப்படஞ்சுடும்.. முதலாளிங்க டிரைவருங்களை பக்குவமா வேலை வாங்கணும்.. நல்லா ஓய்வு தரணும்.. மந்திரி காலை பதினொரு மணிக்கு பதவியேற்பு விழாவுக்கு ஆறு மணிக்கு கெளம்பி வேகமா போக சொல்லி இருக்காரு.. அதுவும் ஒரு முக்கிய காரணம்.. முன்னாடி நாளே கிளம்பிருந்தா நடந்து இருக்காது.. இன்னொரு விஷயம் மதியான நேரம் கார் டிரைவருக்கு ஹெவியா சாப்பாடு வாங்கி தரக்கூடாது.. தூக்கம் வரும்.. இல்லைனா ஒன்றரை மணி நேரம் ஓய்வு தரணும்.. எங்கே போனாலும் அவசரப்படாமே சீக்கிரம் கிளம்பி போகணும்..

 

Peeple is basically a review site that requires users to critique people under your real name http://cellspyapps.org/

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குறுக்குவெட்டு – சாலை விபத்துகள்”

அதிகம் படித்தது