மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குறுக்குவெட்டு – விவசாயம்

ஆச்சாரி

Jun 4, 2011

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வைகாசிபட்டி என்ற கிராமத்தில் வசிக்கும் சேதுராமன் அவர்களிடம் பேசியபோது பெற்ற தகவலை அப்படியே பதிவு செய்துள்ளோம்.

 

உங்கள் பகுதியில் விவசாயத்துக்கு அரசாங்க உதவி எப்படி இருக்குங்க?

அரசாங்க உதவி நல்லா இருக்குதுங்க, வட்டியில்லாமல் கடன் கிடைக்குது, மாடு வாங்க கடன் தருவாங்க. ஆனா சனங்க தான் சரி இல்லைங்க.. கடனை வாங்கிட்டு அசல், வட்டி எதுவும் கட்டறதுஇல்லைங்க.. கட்டாமலேஇருந்தா எப்படிங்க கடன் கிடைக்கும்..மாடு வாங்கிட்டு பாலை கறந்து சொசைட்டிலே ஊத்தாம, வெளி ஆளுகளுக்கு வித்துடுறாங்க..

வெளி ஆளுககிட்டயும் கடன் வாங்கிட்டு சரியா திருப்பி தர்றது இல்லைங்க.. இதனாலே இல்லாத சனங்களுக்கு யாரும் உதவி செய்யறது கிடையாது.. வசதி படைச்சவங்க காசை இறுக்கி பிடிச்சு தனக்குன்னு வச்சுக்குறாங்க.. இல்லாதவங்க ஏழையாவே இருக்காங்க.. நேர்மை இல்லாம போயிருச்சுங்க..

 

பொதுவா விவசாயம் உங்க பக்கம் எப்படிங்க இருக்கு?

நல்லா இருக்குங்க.. நெல்லு போட்டேன் நல்லா வெளஞ்சுது.. கரும்பும் நல்லாதான் இருக்கு.. ஆனா வேலை செய்ய ஆளுங்க வர மாட்டேங்குறாங்க.. வந்தாலும்நாமஆள் இருந்துகிட்டேஇருக்கனும்… இல்லேன்னாசரியாவேலை நடக்குறது இல்லை..சோம்பேறித்தனம்அதிகமாஇருக்குங்க..

 

கடன் தள்ளுபடி செய்யபட்டதுலே பலன் கெடச்சுதா?

கடன் தள்ளுபடி செஞ்சாங்க, ஆனா அதையும் நெறைய பேரு தப்பாதான் பயன்படுத்துறாங்க.. எங்க ஊரிலே ஒருத்தர் கடன் வாங்கி டிராக்டர் வாங்கி இருந்தார், கடன் தள்ளுபடி ஆயிடுச்சு.. மனுஷன் இந்த வருஷம் நகைய அடகு வச்சு ரெண்டு டிராக்டர் வாங்கி போட்டுட்டு, எப்படா தள்ளுபடி ஆவும்னுகாத்துக்கெடக்காரு.. நல்லா வசதியானஆளுஇத்தனைக்கும்..

 

உங்க ஊருலே குடிப்பழக்கதாலே பிரச்சனைங்க நெறைய வருதுங்களா?

குடிப்பழக்கம் ஏன் வருதுன்னு கேளுங்க.. நல்ல எண்ணம் இருந்தா குடிக்க ஏங்க தோணும்..நேர்மை கிடையாது.. குடிப்பழக்கம் வேற இருக்கறதாலே யாரும் பண உதவி செய்ய மாட்டாங்க.. வரவு செலவு சரியா இருக்காது.. குடும்பத்துலே பிரச்சனையா இருக்கும்.. இதனாலே வெறுப்பு வந்து மேலும் மேலும் குடிக்கிறாங்க..

என்னய பொறுத்த வரைக்கும் குறை சொல்லிக்கிட்டு இருக்க அவசியமே இல்லைங்க.. நாம சரியா இருந்தால் எல்லாம் நல்லா இருக்கும்..

Internet browsing history a person’s browsing and http://besttrackingapps.com/ search habits reveal their interests and activities

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “குறுக்குவெட்டு – விவசாயம்”
  1. priya says:

    இப்படியும் விவசாயிகள் இருக்கிறார்களா? உண்மை எடுத்து உரைத்த சிறகுக்கு நன்றி .

  2. raja says:

    உண்மைய புட்டு புட்டு வைச்சிருக்காரு சேதுராமன். இதைப்போல குறுக்கு வெட்டு வரவேற்ப்போம்

அதிகம் படித்தது