மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குறுக்குவெட்டு

ஆச்சாரி

May 18, 2011

கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த குமார் அவர்களிடம் பெற்ற தகவல்

போன வருடம் இலவசமாக அரசிடம் இருந்து என்ன பொருட்கள் கெடச்சுது?
காஸ் அடுப்பு, டிவி ரெண்டும் கெடச்சுதுங்க..

இலவச டிவி தான் உபயோகபடுத்துறீங்களா? அது எப்படி இருக்கு?
இல்லைங்க.. அந்த டிவி ரெண்டு மாசம் தான் ஓடுச்சு.. அப்புறம் வேலை செய்யலீங்க.. மழை காலத்துல மின்னல் அடிச்சா அதுலே புள்ளி புள்ளியா வருதுங்க.. ரொம்ப நேரம் டிவி ஓடினா சூடு ஆகி நின்னு போயிரும் வேற.. எங்க பக்கம் நெறைய டிவி ரிப்பேர் கடைல தாங்க கெடக்குது..

உங்க பக்கம் நெறைய பேரு இந்த டிவி உபயோகபடுத்துறாங்களா?
இல்லைங்க.. போன மாசம் ஒருத்தர் அதை வாங்கி 1200 ரூபாய்க்கு வித்துடாருங்க.. அத ஓசிலே வாங்கிட்டு ரிப்பேர் செலவு பண்ண முடியலங்க..

காஸ் அடுப்பு எப்படி இருக்கு?
அது கொஞ்சம் பரவல்லைங்க.. நாங்க அதை வாங்கி கடைலே கொடுத்து சர்வீஸ் பண்ணிகிட்டோம்.. வெடிச்சுருமானு பயமா இருந்தது..

ஒரு ரூபா அரிசி வாங்குவீங்களா, அந்த அரிசி எப்படி இருக்கு?
இல்லைங்க.. வெளிலே கடைல தான் வாங்கி சாப்பிடுவோம், அந்த அரிசி நல்ல இருக்காது.. எங்க பக்கம் அதை வாங்கி கோழி, வாத்து அதுகளுக்கு போட்டுருவோம், சில பேரு அதை அரைச்சு மாட்டுக்கு கூட ஊத்துறாங்க.. (மனுசன் சாப்பிடுவானா அதைனு சொல்ல வரீங்க..)

அந்த அரிசி மக்கள் பயன்படுத்துறது இல்லையா?
இல்லைங்க .. நெறைய பேரு அதை வாங்கி மாவு கடைக்கு வித்துருவாங்க ..அதை அவங்க வாங்கி நல்ல அரிசியை கொஞ்சம் கலந்து மாவு அரச்சு வித்துருவாங்க..

பொங்கலுக்கு ரேசன் கடைலே பொங்கல் வைக்கிற சாமான் எல்லாம் கெடச்சுதா?
கெடச்சுதுங்க.. ஆனா ஒரு பொருள் கூட உருப்படி இல்லைங்க.. எல்லாம் தண்டம்.. வெல்லம் பாக்கெட்டு எல்லாம் கரைஞ்சு தண்ணியா ஓடி கெடந்துதுங்க..

When writing a paper, discuss with your professor what particular standards he or she would like https://eduessayhelper.org/ you to follow

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குறுக்குவெட்டு”

அதிகம் படித்தது