குழந்தைப் பாடல்கள் (மதுரை மாவட்ட வட்டார வழக்கு)
ஆச்சாரிFeb 1, 2013
அர்த்தமுள்ள வரிகளைக் கொண்டும், அர்த்த மற்ற வரிகளைக்
கொண்டும் பாடல்கள் புனையப்பட்டு, குழந்தைகளை
மகிழ்ச்சிப்படுத்தப் பாடப்படுவதே குழந்தைப்பாட்டு
* பச்ச மொளகா படியில
பழம் பழுக்கும் செடியில
குய்யா குய்யா ரோட்டுல
கோழிக்குஞ்சு மேயுது
புடுச்சுக்காடி பொன்னம்மா
புளிக்கொழம்பு வைக்கலாம்
நம்மளும் குடிக்கலாம்
அடுத்த வீட்டுக்கும் கொடுக்கலாம்
எட்டிப் பாத்த மாமனுக்கு
சட்டியப் போட்டு கவுக்கலாம்
* குத்தடி குத்தடி செயினக்கா
குனிஞ்சு குத்தடி செயினக்கா
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி தோலாக்கு
பையன் வாரான் பாத்துக்கோ
பணம் கொடுத்தா வாங்கிக்கோ
சில்லரைய மாத்திக்கோ
சிலுக்குப் பையில போட்டுக்கோ
சிலுசிலுன்னு ஆட்டிக்கோ
* சடுகுடு மலையில ரெண்டான
அதுல ஒராலு குண்டாலு
போக போக இட்டிலிக்கட
போயிப் பாத்தா சட்டினிக்கட
இட்லிக்கும் சட்டினிக்கும்
சண்ட வந்துச்சாம்
அரக்கிளாஸ் காப்பி வந்து
வெலக்கிவிட்டுச்சாம்
* அந்தாதி = அந்தம் + ஆதி
அந்தம் முடிவு
ஆதி முதல்
இக் குழந்தைப்பாடலின், முதல் வரி இறுதியில் எந்த வார்த்தையில் முடிகிறதோ அந்த வார்த்தையே அடுத்த வரியின் முதல் வார்த்தையாக வரும். இது தமிழ் இலக்கணத்தின் அந்தாதி முறையில் அமைந்த பாடலாகும்.
* ரோஜா ரோஜா
என்ன ரோஜா?
வெள்ளை ரோஜா?
என்னா வெள்ளை?
பால் வெள்ளை
என்ன பால்?
பசும் பால்
என்னா பசு?
நாட்டுப் பசு
என்னா நாடு?
தமிழ் நாடு
என்னா தமிழ்?
முத்தமிழ்!
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “குழந்தைப் பாடல்கள் (மதுரை மாவட்ட வட்டார வழக்கு)”