மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கூடங்குளம் – இறுதி ஆட்டம் ஆரம்பம்!

ஆச்சாரி

Mar 1, 2012

கூடங்குளத்தில் ஏறக்குறைய முப்பது வருடங்களாக தொடர்ந்து நடந்து வரும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்களின் போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை  அடைந்து இருக்கிறது. இந்தியாவை ஆளும் மத்திய அரசு தன்னுடைய அத்தனை வளங்களையும் நேர் வழியிலோ  குறுக்கு வழியிலோ  பயன்படுத்தி கூடங்குளம் அணு உலையைத்   திறக்க முயற்சிக்கிறது.  அணு உலை திறக்க தாமதமாகும் ஒவ்வொரு நாளும் அரசு தன்னுடைய நிதானத்தை இழந்து கொண்டு இருக்கிறது.

சமீபத்தில் திருநெல்வேலியில் பெண்கள் , குழந்தைகள் உட்பட  போராட்டக்காரர்கள் மீது காங்கிரஸ் மற்றும் இந்து முன்னணியால் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல், போராட்டக்காரர்களுக்கு பணம் வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்று பிரதமர்  பேசியது  போன்றவை  அரசு எந்த அளவு நிதானம் இழந்து வருகிறது என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது.

கூடங்குளம் போராட்டம் நீண்ட காலமாக நடந்து வந்தாலும் , சில வருடங்களுக்கு முன்னர் தீவிரமடையத் துவங்கியபோது மத்திய அரசு அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. அதற்குக் காரணம் தமிழகத்தின் பிரதான கட்சிகளை   சுலபமாக தங்கள் பிடியில் வைத்து இருக்கலாம் என்ற நம்பிக்கை மத்திய அரசுக்கு இருந்தது.  உண்மையில் கேரளாவிற்குச்  செல்ல வேண்டிய அணு உலை தமிழகத்தில் திறக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் மாநில நலனுக்காக தமிழக  கட்சிகள் பெரிதாக போராட மாட்டார்கள் என்ற மத்திய அரசின் அசைக்க முடியாத  நம்பிக்கையே.  அதே நேரம் தமிழகத்தின்  ஊடகங்கள் தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற நம்பிக்கையும்  மத்திய அரசுக்கு இருந்தது. ஈழத்தில் 2009 இல் நடந்த மிகப்பெரிய இனப்படுகொலையை  தமிழகத்தின் கண்களில் இருந்து மறைத்த தமிழக  ஊடகங்களின் பணி மத்திய அரசுக்கு கூடங்குளத்தின் தீமைகளை பற்றி செய்திகள் வர விடாமல் தடுத்து விடலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்து இருந்தது.

மேற்கூறிய காரணங்களால் மிக நம்பிக்கையுடன் இருந்த மத்திய அரசு கூடங்குளத்தில் போராட்டம் பெரிய அளவில் வெடித்தபோது முதலில் அதிர்ச்சி  அடைந்தது.  பிரச்சினையின் தீவிரத்தை  தாமதமாக  உணர்ந்த மத்திய அரசு அணு  உலையின் தேவையை  மீள்பரிசீலனை  செய்வதற்கு  பதிலாக போராட்டத்தின் நோக்கம் குறித்தும், போராட்டக்காரர்களின் நோக்கம் குறித்தும் பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டது. பெரும் தொழிலதிபர்களின் உதவியுடன் அணு உலைக்கு ஆதரவான போராட்டங்கள்  அரசாலேயே ஒழுங்கு செய்யப்பட்டன.  அப்துல் கலாம் போன்ற தமிழக மக்களால் பெரிதும் மதிக்கப்படும் மனிதர்களை மத்திய அரசு தன்னுடைய முகங்களாக  பயன்படுத்தி அணு உலையின்  நம்பகத்தன்மையை விளம்பரம் செய்தது . கூடங்குளத்து மக்களை மத , சாதி ரீதியாக பிரிக்க எல்லா விதமான முயற்சிகளும் செய்தது. தனக்கு ஆதரவான வணிக ஊடகங்கள் மூலம் தனது பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்ட அதே நேரத்தில் நடுநிலையாக செயல்பட்ட கீற்று போன்ற சிறு ஊடகங்களுக்கு உளவுத்துறை மூலம் அச்சுறுத்தல் விடுத்தது.

இவை ஒரளவுக்கு பலன் அளித்தாலும் அரசு எதிர்பார்த்த முழுப் பலனையும்  தரவில்லை. இப்போது மத்திய அரசு தனது திட்டத்தை மாற்றிக் கொண்டு விட்டது தெரிகிறது.  கூடங்குளம் மக்களின் மன உறுதியை வெல்ல முடியாது என்பதை உறுதியாக தெரிந்து கொண்ட அரசு  இப்போது அவர்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  நாடு முழுவதும் கூடங்குளம் போராட்டக்காரர்கள் நாட்டிற்கு முக்கியமாக  தமிழகத்திற்கு எதிரிகள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது,  ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் போராட்டக் குழுவின் மீது வன்முறையை ஏவி அவர்களை  அடக்குவது இது தான் அரசின் திட்டமாக தோன்றுகிறது. உண்மையில் இன்று வரை இது போல வன்முறைகள் நடக்காமல் இருப்பதற்கு போராட்டக் குழுவின் பொறுமையும்,  அறிவு பூர்வமான செயல்பாடுகளுமே முக்கியமான காரணங்கள். இல்லாவிட்டால் இந்நேரம் ஒரு மிகப்பெரிய வன்முறை கூடங்குளத்தில் நடந்து முடிந்திருக்கக் கூடும்.

உதயகுமார் தலைமையிலான போராட்டக்குழு பல்வேறு சிக்கல்களுக்கிடையில் போராட்டத்தை சாமர்த்தியமாக முன் நகர்த்துகிறது. ஊடக பலமின்றி, பெரிய அரசியல் கட்சிகளின் ஆதரவின்றி, பெரும் முதலாளிகளுக்கு எதிராக, ஓட்டு மொத்த மத்திய அரசின் பலத்தை எதிர்கொள்வது என்பது சாதாரண விடயமல்ல. ஆனால் இன்று வரை கூடங்குளம் போராட்டக்குழு அதை வெற்றிகரமாக செய்து வருகிறது.

இந்த விடயத்தில் தமிழக அரசு இன்னும் தன்னுடைய நிலையை முழுமையாக  தெளிவுபடுத்தவில்லை. ஆனால் தமிழக அரசின் சமீபத்திய உண்மை கண்டறியும் குழுவின் தலைவராக அணுசக்தியை பெரிய அளவில் விளம்பரப்படுத்தும் திரு.சீனிவாசன்  நியமனம் செய்யப்பட்டு இருப்பது, தமிழக அரசு மத்திய அரசின் நிலை நோக்கி நகர்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு சில வாரங்களில் தமிழக அரசின் நிலை தெளிவாகும்.  முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க வழக்கம் போல பாலுக்கும் காவல். பூனைக்கும் காவல் என்ற நிலையை எடுத்து இருக்கிறது. கூடங்குளத்தை எதிர்க்கும்  கட்சிகள்  கூட தங்களது முழு பலத்தையும் காட்டி இதற்காக போராடுவதாக தெரியவில்லை.

அது எப்படி இருந்தாலும் நாம்  கூடங்குளம் அணு உலை மூடுவதற்கு  நீண்ட நாள் போராட்டத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு  எப்படியாவது அணு உலையை திறந்து விட்டால் அதை தங்கு தடையின்றி நடத்தலாம் என  திட்டம் போடுகிறது. அதை எதிர்கொள்ள நாம் கூடங்குளம் போராட்டத்தை எத்தனை ஆண்டுகள்  ஆனாலும் அணு உலையை மூடுவதற்கான போராட்டங்கள் தொடரும் என்பதை அரசிற்கு உணர்த்த வேண்டும். நீண்ட நாள் திட்டங்கள், வலுவான போராட்ட அமைப்புக்கள்,  சமரசம் செய்யாத தலைவர்கள் இருப்பார்களேயானால் கூடங்குளம் அணு உலையை கண்டிப்பாக மூட முடியும். கூடங்குளம் போராட்டத்திற்கு அத்தனையும்  இருக்கின்றன என்பதே என் கருத்து. இப்போது தேவை தமிழ் மக்களின்  நம்பிக்கையும், உழைப்பும் மட்டும் தான்.

இன்று ஒட்டு மொத்த தமிழினத்தின் ஏன் ஒட்டு மொத்த மனித குலத்தின்   மீது சூழ்ந்து உள்ள ஒரு பேராபத்தைத் தடுக்க கூடங்குளம் மக்கள் போராடிக் கொண்டு   இருக்கிறார்கள். அவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்க  வேண்டியது நம்முடைய தலையாய கடமை.

Generally, best custom essay writing services it is better to proceed with the analysis one step at a time, as in the example above

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

5 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “கூடங்குளம் – இறுதி ஆட்டம் ஆரம்பம்!”
  1. Indian says:

    உங்கள் அறியாமை யென்னி வருந்துவதா அல்லது பல கோடி மக்கள் படும் தினசரி கடினஙலை பார்க்காமல் வெலினாடுகலில் சுகமாய் எருந்துகொன்டு 9 மனி நெரம் கரன்ட் கட் என்பதை அரிய்யவும். பிரகு பெசவும்

  2. kondraivendhan says:

    கேரளத்திற்குஷ் சென்ற இடியை, தன் அசகாய பலத்தினால் தமிழகத்தில் இறக்கிய மாவீரன் அன்றய் ஆளுனர் அலக்சான்டரே…!!! இந்த மாவீரனுக்கு தமிழகம் என்பது ஒரு குப்பைக்களமே…!!!! இங்கு யார் மாண்டால் என்ன ? யார் அழிந்தால் என்ன.???
    ஓட்டுப்பொருக்கிய தமிழ் ஈனத்தலைவர்கள் எல்லாம், தோளில் துண்டும், பையில் பணமும், கணக்கு சரி செய்ய பிணமும் என்று அலைந்தவர்கள் தான். மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்ற திராவிடப்பன்பாட்டில் தப்பி வந்த ஈனக்கருஙாலிகள் இன்று இனம் அழியப்பார்த்திருக்கும் அவல்ம்…!!!
    குலம் அழிய கருக்கொண்ட அவலம்…!!!

  3. பாஸ்கரசோழன் says:

    உண்மையான நேர்மையான அறப்போரில் ஒவ்வொரு தமிழனும் பங்கெடுத்து அணு உலையை இறுதிவரை எதிர்ப்போம் உறுதி உறுதி

  4. RANGA says:

    போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும்.

அதிகம் படித்தது