மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கூடங்குளம் – திரு.உதயகுமார் உரை

ஆச்சாரி

Jan 1, 2012

நான் ஜப்பானுக்கு செல்லும்போது என் மனைவி சொன்னாங்க ஜப்பானில் எல்லோரும் அணுக்கதிர் வீச்சில் பாதிக்கப்பட்டு இருக்கிறரர்கள். போக வேண்டாம் என்று. ஜப்பானில் இருந்து ஒரு அமைப்பு அழைத்திருக்கிறது. நான் போகிறேன் என்று சொன்னேன். ஜப்பான் சென்றேன். பதினைந்து நாள் இருந்தேன்.

புக்குசிமா ஊருக்கே சென்றேன். அங்கிருக்கும் மக்கள் எப்படி வேதனைப்படுகிறார்கள் அல்லல்படுகிறார்கள்- இருந்த ஊரைவிட்டு ஓடியிருக்கிறார்கள், திரும்பவும் அந்த ஊருக்கு வரமுடியவில்லை. இந்தச் சூழ்நிலையில் 250 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள டோக்கியோவில் மக்கள் எல்லாம் அச்ச உணர்வோடு வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு முகக்கவசம் அணிந்துகொண்டுள்ளனர்.

நான் சிலரிடம் கேட்டேன், எப்படி இந்த ஊரில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்று. அதற்கு அவர்கள், எங்களுக்கு வீடு இதுதான் இங்குதான் இருப்போம் என்றார்கள்.

நிலநடுக்கம் என்பதற்கு பகுதியெல்லாம் கிடையாது. அது எங்குவேண்டுமானாலும் வரும். 2009 ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் அழகப்பபுரம், காணிமடம், அஞ்சுகிராமம் சுவாமினூர் இந்த ஊர்களில் நில நடுக்கம் வந்து வீடுகளில் விரிசல் விழுந்து பத்திரிக்கைகளில் செய்திகள் வந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எல்லா ஊர்களையும் பார்த்த அந்த செய்திகளை நாங்கள் வைத்திருக்கிறோம். அழகப்பபுரத்தில் நிலநடுக்கம் வந்து வீடுகளெல்லாம் ஓட்டை விழுகிறது என்றால் அழகப்பபுரதிலிருந்து கூடன்குளத்திற்கு 2,3 கிலோ மீட்டர்தான். இதைச்  சொன்னால், இல்லை நிலநடுக்கம் வராது சுனாமி  வராது பாதுகாப்பானது என்கிறார்கள். சரி வெடிக்காது. இந்த அணு உலை தினசரி சாதாரணமாக இயங்கினாலே போதும்- இடிந்தக்கரை யில் உள்ளவர்களிடம் கேளுங்கள் இயங்கும்போது எவ்வளவு சத்தம் போடுகிறது என்று. இந்த சத்தம் ஒரு முக்கியமான காரணம். இந்த அணு உலையில் இருந்து தினமும் புகைப்போக்கி வழியாக கதிர்வீச்சுத் தன்மைகொண்ட பொருட்கள் அயோடின், டேலோரியம்,ஸ்டான்ட்ரியம் இதுவெல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாத நச்சுப் பொருட்கள். காற்றில் வந்துகொண்டேயிருக்கும்.

இந்தப் பிரச்சினை பற்றி தெருவோரம் பேசியிருக்கிறோம்- சாலையோரங்களில் பேசியிருக்கிறோம் பேருந்து நிலையங்களில் நின்று பேசியிருக்கிறோம் துண்டு அறிக்கை கொடுத்திருக்கிறோம். சிலர் நினைப்பார்கள் பாவம் வேலை இல்லை பைத்தியம்போல் பேசுகிறார்கள் என்று. என்ன நினைத்தாலும் பரவாயில்லை. நாம் உண்மையைச் சொல்கிறோம். நல்லதைச் செய்கிறோம். தொடர்ந்து செய்கிறோம். இதை தொலைக்காட்சிகளில் மக்கள் பார்த்தார்கள்.

இந்தப் பகுதியில் வாழ்ந்து இந்த நச்சுக் காற்றை உள்வாங்கி, நம் குழந்தைக்கு ஒரு குழந்தை பிறக்கும் பாருங்கள் அந்தக் குழந்தை மன வளர்ச்சி இல்லாத குழந்தையாக, உடல் ஊனமுற்ற குழந்தையாகப் பிறக்கும்.

கதிர் வீச்சு என்றால், நாம் தீபாவளிக்கு மத்தாப்பு கொளுத்துகிறோமே, அது மாதிரி கதிர்கள் வருகிறது.இந்த அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் ப்ளுட்டோனியம், யுரோனியம் எல்லாமே கதிவீச்சு உள்ள பொருட்கள். அந்த யுரோனியத்தை சிறிய கம்பி போல (rod) இருக்கிறது அதை வைத்து எரிக்கிறார்கள். அதனால் சூடாகி கதிர் வீச்சு வெளியாகிறது.

கதிர் வீச்சில் எதுவுமே தப்ப முடியாது. அந்த அளவுக்கு வீரியமானது. நம் கண்ணுக்குத் தெரியாமல் வெளிப்படுவது தான் கதிர் வீச்சு. மூன்று விதமான கதிர்கள் உள்ளன. ஆல்பா கதிர், பீட்டாகதிர், காமா கதிர். ஆல்பா கதிர் எதிலிருந்து வருகிறது என்றால், தொலைக்காட்சி பார்க்கிறோம் அதிலிருந்து ஒரு கதிர்வீச்சு வருகிறது. அதனால்தான் நாம் குழந்தைகளை சொல்வோம் – தொலைக்காட்சிக்கு மிகவும் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்காதே என்று. ஏன்? ஆல்பா கதிர் வீச்சு வருகிறது. கணிப்பொறியில் அதிக நேரம் உட்கார வேண்டாம் என்பார்கள். காரணம் கதிர் வீச்சு. அந்த ஆல்பா கதிரை ஒரு காகிதத்தை வைத்து தடுத்துவிட முடியும். பீட்டா கதிர் அது இன்னும் சற்று பலமானது. அதை ஒரு அலுமினிய தகட்டால் நிறுத்திவிடலாம். நாம் மருத்துவமனைக்குப் போனால் எக்ஸ்ரே எடுக்கிறார்களே அதிலிருந்து வருகிறது பீட்டா கதிர். பத்து எக்ஸ்ரே  தொடர்ந்து எடுத்தால் பிரச்னை.

காமா கதிர்வீச்சு, நியூட்ரான் இவைதான் அணுமின் நிலையத்திலிருந்து வெளி வருவது. இது மிகவும் ஆபத்தானது. கண்ணுக்குத் தெரியாது. நாற்றம் கிடையாது – தொட முடியாது. பார்க்க முடியாது. கதிர்வீச்சு நம் உடலில் படும்போது அந்த இடத்தில் உள்ள திசுக்களை எலெக்ட்ரிக் சார்ஜ்  ஆக மாற்றி விடும். அந்த இடத்தில் மின்சார உற்பத்தி செய்வதைப்போல மாற்றிவிடும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் திடீரென வெடிக்கிறது. எல்லோரையும் ஓடச் சொல்கிறார்கள். காரணம் கதிர் வீச்சு நம்மை பாதிக்கக்கூடாது என்பதால். திசுக்கள் மின்சாரம் பாய்ந்தவையாக மாறும்போது அது தானாகவே தனியாக ஒரு திசையில் வளரும். புற்று நோய் என்பது வளர்ச்சிதான். என்ன வளர்ச்சி என்றால் – தவறான திசை யில் செல்லும் வளர்ச்சி. உடலோடு சேர்ந்து வளர்வதற்கு பதிலாக அந்தத் திசுக்கள் தனியாக கட்டியாக வளருகின்றன. அது எங்கு வேண்டுமானாலும் வளரலாம். வாயில், மூளையில் வரலாம். புகையிலை போடுவதால் அல்ல. நாகர்கோயிலில் எங்கள் தாத்தா பாட்டி மூன்று பேர் புற்று நோயால் இறந்தார்கள் . உத்திரப்பிரதேசம். பீகார் மாநிலங்களில் நம்மைவிட அதிக அளவில் புகையிலை பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கெல்லாம் இவ்வளவு புற்று நோய் வரவில்லை. நமக்கு ஏன் வருகிறது என்றால் கடலோரத்தில் தோரியம் என்றொரு பொருள் உள்ளது.

,தமிழ்நாட்டில்  கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மூன்று மாவட்டங்களில் – கேரளாவில் திருவனந்தபுரம், பத்தனம்தட்டை, ஆலப்புழா இந்த  ஏழு  மாவட்டங்களில்  இயற்கை கதிர் வீச்சு அதிகமாக உள்ளது. அது எப்படி இயற்கையிலேயே கதிர்வீச்சு இருக்கும் என்று கேட்டால் மேற்கு தொடர்ச்சி மலையில்தான் அரிய வகை மணல் அதிகமாக இருக்கிறது. அதில் மொநோசைட் என்ற பொருள் இருக்கிறது. அந்த மொநோசட்டின் ஒரு பகுதிதான் தோரியம் என்பது. தோரியம், யுரோனியம், புளுட்டோனியம் இது எல்லாமே கன வகையான கனிமங்கள். இது எல்லாவற்றுக்கும் கதிர் வீச்சுத் தன்மை உண்டு. மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்யும்போது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து இந்த அறிய வகை மணல் நம் கடலோரங்களில் படிகிறது. அதை தனியார் நிறுவனங்களும் அரசு நிறுவனமான மணவாளக்குறிச்சி மணல் நிறுவனம் – கேரளா ஆலப்புழா மாவட்டம் சவரை என்ற கிராமத்தில் மணல் கம்பெனி அரித்து எடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் வாழும் நமக்கு இயற்கை கதிர் வீச்சு அதிகமாக உள்ளது. நமக்கு அதிகமாக புற்று நோய் வரக்காரணம் இந்த இயற்கை கதிர் வீச்சு. நம் கண்ணுக்குத் தெரியாது. நாம் பாதிப்பு அடைவதும் தெரியாது.

மீனவ கிராமங்களில் அதிகமாக புற்று நோய் வருகிறது. காரணம் அவர்கள் மணலிலேயே இருக்கிறார்கள். அவர்களில் பெண்களைவிட ஆண்களுக்கு த்தான் அதிகப் புற்று நோய் வருகிறது. காரணம் அந்த மணலிலேயே இரவும் பகலும் வேலை செய்கிறார்கள். அதனால் எந்த புள்ளி விவரம் எடுத்துப் பார்த்தாலும் பெண்களைவிட ஆண்களுக்கு அதிகமாகப் புற்று நோய் வருகிறது. எந்த மீனவ கிராமங்களையும் போய்ப் பாருங்கள்- அங்கு புற்று நோய் இல்லாத கிராமத்தைச் சொல்லுங்கள். அது நிச்சயாமாக ஒரு ஒஎரிய செய்தியாக இருக்கும். இந்த அரிய வகை மணல் எடுக்கும் கம்பெனிக்குப் பக்கத்தில் உள்ள சின்னவிளை, பெரியவிளை, மண்டைக்காடு புதூர், பரம்பற்று இந்தப் பகுதிகளுக்கு போய்ப் பார்த்தால் வீட்டுக்கு வீடு புற்று நோய். காரணம் இயற்கைக் கதிர் வீச்சு.

இந்த கூடங்குளம் இயங்க ஆரம்பித்தால் இன்னும் அதிகமான கதிர் வீச்சு வந்து சேரும். எப்படி? நாம் அதிலிருந்து வரும் காற்றை சுவாசித்தாலே நாளை குழந்தைக்குப்  பிறக்கும் குழந்தை  மன வளர்ச்சி இல்லாத குழந்தையாகப் பிறக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மன வளர்ச்சி இல்லாத குழந்தைகள் அதிகம். அதைப் பற்றி மதுரையில் ஒரு நண்பர் ஒரு குறும் படம் தயாரித்திருக்கிறார். அதைப் பார்க்கும் போது – எந்தத் துன்பம் வந்தாலும் சமாளிக்கலாம் – சாப்பிட வழியில்லை – பிச்சை எடுத்து பிழைக்கலாம். மன வளர்ச்சி இல்லாத குழந்தையை – அது ஒரு பெண் குழந்தையாக இருந்தால் இன்னும் வேதனை. உடல் வளர்ச்சி இருக்கும். அந்தப் பெண் பருவமடையும். தாயாவதற்கும் தயாராய் இருக்கும். ஆனால் மனசு வளரவில்லை. அந்தக் குழந்தையை விட்டு விட்டு சாக முடியுமா? சாக வேண்டும். நாம் எல்லோரும் சாகத்தான் வேண்டும். சாவதற்குத் தயாராய் இருக்கிறோம். ஒரு நண்பர் வந்தார்- ‘அண்ணே உங்களைக் கொல்ல ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்.” என்றார். நான் சொன்னேன்- தம்பி நாம் சாகப்போவது உறுதியாகத் தெரியும். யாரும் கடைசி வரை இருக்க முடியாது. அதனால் பயப்படாமல் இரு என்றேன். மன வளர்ச்சி இல்லாத ஒரு குழந்தைப் பெற்று ஒரு குடும்பம் படும் வேதனையை நான் பார்த்திருக்கிறேன். அந்தத் துன்பத்தைப் போல வேறு துன்பம் இல்லை.

இந்த அணு சக்திக்கு எதிராக ஒரு மக்கள் இயக்கத்தைத் தொடங்கி நடத்திய ஒய். டெவிட்  ஒரு பெரியவர். மதுரைக்காரர். அவர்தான் என்னை இங்கு கொண்டு வந்தது. என்னை கிராமம் கிராமமாக அழைத்துப் போய், அணு சக்திக்கு எதிராகப் போராடச் சொன்னவர். அவரின் பெண் குழந்தைக்கு மன வளர்ச்சி கிடையாது,

டெல்லியில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் பண வெறி. லட்சமாக இருந்தால் கோடியாக வேண்டும். கோடியாக இருந்தால் பல கோடியாக வேண்டும். பல கோடி இருந்தால் பல்லாயிரக்கணக்கான கோடியாக வேண்டும். இந்தப் பண வெறி நோயாளிகளுக்காக நாம் ஏன் நம் மண்ணை இழக்க வேண்டும்?

As a help me with my homework guide, post offices are generally open monday to friday from 9

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “கூடங்குளம் – திரு.உதயகுமார் உரை”
  1. aanandha gowthaman says:

    மிக சிறப்பான பதிவுகள்

  2. rajan says:

    பாமர மக்களுக்கு புரியும் வண்ணம் உள்ள உதயகுமாரின் செயல்களுக்கு பாராட்டுக்கள்

  3. kasi visvanathan says:

    எண்ண அலைகள் ஒன்றானால்…. அணு உலைகள் என்னவாகும்…????
    நெஞ்சில் ஒரு வஞ்சமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை…..
    வஞ்சமிலா வாழ்வினிலே தோல்வியுமில்லை… தோல்வியுமில்லை……!!!!!
    நம் அனைவருக்கும் காலம் வரும். இன்றைய காலம் ஒரு நாள் மாறும்…!!!!!!

அதிகம் படித்தது