கூத்துப் பட்டறையில் கிளைத்த கிளை – விருக்ஷா
ஆச்சாரிMay 17, 2012
தமிழை மூன்றாகப் பிரித்து வைத்துள்ளனர் நம் ஆதிச் சான்றோர்கள். இதில் இறுதியாக இடம் பெரும் கூத்துத் தமிழ் உடலியல் சார்ந்தது. உடல் அசைவுகளால் மனித உணர்வுகளை வெளிப்படுத்த கூத்துக் கலை உதவுகிறது. தெருக்கூத்து தமிழ் மரபுக் கலைகlளுள் முழுமை யான அரங்கக் கலை வடிவம் கொண்டது. மிகுந்த அர்ப்பணிப்பும், முறையான பயிற்சியும் பெற்ற கலைஞர்களால் மட்டுமே நிகழ்த்த முடிந்த முன்னோடி கலை இது. தமிழக கிராமங்களில் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஊர்த் திருவிழாக்களில் தெருக் கூத்து ஆடுவார்கள். மாபாரதக் கதைகளை இந்தத் தெருக் கூத்துக்கள் வாயிலாகவே கிராம மக்கள் அறிந்தனர். காலப் போக்கில் தெருக் கூத்துக்கள் அருகி நாடகமானது. பின்னர் நாடகமும் குறைந்து இப்போதெல்லாம் திருவிழா என்றால் இசைக் கச்சேரி என்றாகிவிட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் உள்ள புரிசை என்ற கிராமம் முழுதும் தெருக்கூத்துக் கலைஞர்கள் தான் வாழ்கிறார்கள். அவர்களின் முன்னோர்கள் காலம் முதல் தெருக்கூத்து ஆடுவதே அவர்களின் பிரதான பணி. தற்போது அந்தக் கிராமத்தின் இளைய தலைமுறையினர் – தெருக்கூத்து கலை நலிவடைந்ததால் வேறு பணிகளுக்குச் சென்றுவிட்டனர்.
தொன்மையான தெருக்கூத்துக் கலையை நவீனமாக்கி இக்கலையை மேம்படுத்த தொடங்கப்பட்டதுதான் கூத்துப்பட்டறை அமைப்பு. திரு. முத்துச்சாமி அவர்களால் ( இவரின் நீண்ட நாள் கலைச் சேவையைப் பாராட்டி சமீபத்தில் இந்திய அரசு இவருக்கு பத்ம விருது வழங்கியது) 1977 ஆம் ஆண்டு இந்த அமைப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் மற்றும் சர்வதேச கலை மேம்பாட்டு நிறுவனங்களின் உதவியுடன் கூத்துப்பட்டறை சிறப்பாக இயங்கி வருகிறது. தெருக்கூத்தின் அடிப்படையில் நவீன நாடகத்தை கூத்துப் பட்டறை அரங்கேற்றி வருகிறது. தமிழ் திரை உலகில் உள்ள மிகச் சிறந்த நடிகர்கள் சிலர் கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்று வந்தவர்கள். உதாரணம்- நடிகர்கள் பசுபதி, நடிகைகள் கலைராணி, போன்றோர். கூத்துப்பட்டறையில் நடிப்பிற்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படுவதில்லை. மாறாக நடனம், யோகா, சிலம்பம், தேவராட்டம், களறி, தாய்சி, தியானம், எனப் பல்துறைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதன் மூலம் நடிகன் தன் உடலை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
இத்துணை சிறப்புகள் கொண்ட கூத்துப்பட்டறையின் பயிற்சியாளர் தேவி அவர்களை சிறகுக்காக சந்தித்து உரையாடினோம். இவர் சென்னை வடபழனியில் விருக்ஷா எனும் நாடக அமைப்பை நடத்தி வருகிறார். கூத்துப் பட்டறைக்குப் போட்டியா என்று நாம் வினவிய போது, அப்படி இல்லை. இவரது ஆசான் முத்துச் சாமியின் ஒப்புதல் பெற்றுதான் இந்த கிளை அமைப்பை தொடங்கியதாகத் தெரிவித்தார். கூத்துப் பட்டறையில் இவர் கற்ற நவீன நாடகங்களின் கூறுகளை இன்னும் நவீனப்படுத்தி இந்த விருஷா நாடக அமைப்பின் வழியே பயிற்சி அளிக்கிறார்.
தேவியின் சொந்த ஊர் குடியாத்தம். நவீன நாடகக் கலையில் ஆர்வம் ஏற்பட்டு கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்பு பயின்று, தற்போது அங்கேயே பயிற்சி அளிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார். ‘பெண்கள் எல்லோரும் பட்டம் பெற்று பெரும் வருமானம் கிடக்கும் பணியில் இருக்கும் இந்தக் காலத்தில் உங்களுக்கு எப்படி கூத்துக் கலையில் ஆர்வம் வந்தது என்று நாம் கேட்டதற்கு, எனக்கு சிறு வயது முதலே நாடகக் கலையில் ஆர்வம். கூடவே புத்தகம் படிக்கும் ஆர்வமும் உண்டு. நான் பன்னிரெண்டாவது படிக்கும்போது அறிவொளி இயக்கத்தின் சார்பில் தெருமுனைப் பிரச்சார நாடகத்தில் நடிக்க வரச் சொல்லி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து எனக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். அப்போது எங்கள் குழுவினருக்கு பயிற்சி அளிக்க கூத்துப் பட்டறை திரு. குமரகுரு தாசர் வந்திருந்தார். அவர் மூலம் கூத்துப் பட்டறையில் சேர்ந்தேன் என்றார்.
கூத்துப் பட்டறைக்கு இவர் வந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. கூத்துப்பட்டறை தந்த அனுபவத்தில் தொடங்கியதுதான் ‘விருக்ஷா’. என்கிறார். இந்த அமைப்பில் பயிற்சி பெறுபவர்களை வெறும் பயிற்சியோடு அனுப்பி விடாமல், ஒவ்வொரு குழுவின் பயிற்சி முடிந்ததும் ஒரு கதையை நாடகமாக்கி பயிற்சி பெற்ற குழுவினர் அரங்கேற்றுகிறார்கள். இந்த அமைப்பில் நடிப்பில் ஆர்வம் உள்ள யார் வேண்டுமானாலும் சேரலாம். நான்கு மாதம் பயிற்சி அளித்து ஒரு தேர்ந்த நடிப்புக் கலைஞனை உருவாக்கிறது இந்த அமைப்பு. தினமும் நண்பகல் மூன்று மணி முதல் இரவு ஒன்பது மணி வரை இங்கு வகுப்பு நடக்கிறது. கூத்துப் பட்டறையில் அளிக்கும் பயிற்சியினூடே தினமும் விருக்ஷா பள்ளியில் பயிற்சி அளிக்கிறார் தேவி.
ஐந்து மாதங்களுக்கு ஒருமுறை புகழ்பெற்ற இயக்குனர்கள் முன்னிலையில் அரங்கேற்றப்படும் நாடகத்தில் இருந்து நடிகர்- நடிகைகளை இயக்குனர்கள் தேர்வு செய்கிறார்கள் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் தேவி. நடத்திய ‘கீசகவதம்’ வீதி நாடகம் சென்னையிலும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. சென்னையில் இந்த நாடகத்தைப் பார்த்த இயக்குனர் சமுத்திரக்கனி விருஷாவில் நடிப்புப் பயிற்சி பெற்ற ராம்குமார், சுல்தான், யோகேஷ் போன்ற இளைஞர்களுக்கு தன்னுடைய ‘போராளி’ திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
கூத்துக் கலையில் பதினெட்டு அடவுகள் இருப்பதாகக் கூறும் தேவி அவர்கள், (அடவுகள் என்பது ஒரு நாடகக் கலைஞனுக்குள் இருக்கும் திறமைகள்) எங்களிடம் பயிற்சிக்கு வரும் குழுவினரிடம் அந்த பதினெட்டு அடவுகளையும் உடல் மொழியாக வெளிப்படுத்த வைப் போம் என்கிறார்.
தேவி அவர்களின் எதிர்கால லட்சியம் கூத்துக் கலையை முழுதும் திரைத் துறையின் வழியே வாழ வைக்க வேண்டும் என்பதே என்று நாம் அறிந்தோம். அவரின் பயிற்சியையும் வேட்கையும் நாம் சந்தித்த போது அறிந்தோம். தொன்மையான கலை தொலைந்து போகக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள அவரின் லட்சியம் நிறைவேறட்டும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
naan verugsha actinga schoolil payurse peraverummukerean.enkku antha mugavare anuppavum
விருக்ஷா என்பதை விருஷா என்று எழுதக்கூடாது.
விருக்ஷம் என்றால் மரம். நல்ல தமிழ்ச் சொற்களுக்குப் பஞ்சமா?
எங்கள் ஊர்க்காரர் தேவியின் முயற்சியில் பெருமை அடைகிறேன். கூத்து என்றாலே வட ஆர்க்காடு மாவட்டம்தான். கேரளாவில் கதகளியை வளர்த்தது
போல தமிழகத்தில் கூத்தை வளர்க்க ஆளில்லை.
Efforts should have been taken long ago to promote therukkoothu, the traditional form of
theatre in Tamil. I know the efforts of Na. Muthusamy, and withstanding those, I record
this fact. His efforts did not make any improvement in the practice of this art form
in our villages. It was used only to attract
foreigners and foreign funds.
பேராசிரியர் அவர்களுக்கு நன்றி. தங்களின் ஒருங்கிணைப்பில் 1989 ம் ஆண்டு திருச்சி ” புனித வளனார் கல்லூரியில் ” தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் ” பாதல் சர்க்கார்” – வீதி நாடக விழா நடத்தியது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. சே.இராமானுஜம், கோவை ஞானி, சென்னை ஞானி, லயோலா க்ரூசு, பேராசிரியர் நோயல், பேராசிரியர் ஆல்பர்ட் என பலரும் பங்கு பெற்ற கருத்தரங்கு, தமிழகம் முழுதும் வட கோடியில் இருந்து தென் கோடி வரை இருந்த பல தன் ஆர்வக் குழுக்களின் வீதி நாடக அரங்கேற்றம், பின்னர் கலந்தாய்வு,விவாதம் என புனித வளனார் கல்லூரி அரங்குகளிலும், புல் வெளிகளிலும் நடந்த ஒருமுகமான பயிற்சியும் பட்டறையும் தங்கள் முயற்சியில் நடைபெற்றது, இன்றும் நினைவில் நீங்காமல் மனம் பரப்புகின்றது. இத்தகைய முயற்சிகள் இன்றும் கூட இன்றியமையாததுதான்.
விருக்ஷா- என்பது :- திருவெண்காடு என்ற பெயரை வலிந்து “ஸ்வேதாரண்யம்” என்பது போல், தழைத்து நின்று நிழல் தரும் மரம் இருக்க விருஷா ஏன் ???? எனினும் தொன்மைக் கலையை வளர்க்கும் கலஞர்களுக்கு வாழ்த்துக்கள். சிறகு ஊடகத்திற்கும் நன்றி.