மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கொசுக்கள்- கவிதை

ஆச்சாரி

Apr 15, 2013

நம்மைச் சுற்றி நடப்பதையெல்லாம்

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்

 

இன்று, நேற்றல்ல

நாகரீகம் தொடங்கிய காலந்தொட்டே

நடந்து கொண்டிருப்பது இதுதான்.

 

நம்மிடமுள்ள பிரச்சனையே

எதிரியைச் சரியாக மதிப்பிடத் தெரியவில்லை

எதிரியை முழுமையாக எதிர்க்கவும் தெரியவில்லை

என்ன செய்வது, நமது பாரம்பரியம் அப்படி

 

ஆனால், கொசுக்களின் விசயத்தில்

கொஞ்சம் அஜாக்கிரதையாகத்தான் இருந்துவிட்டோம்.

 

நமது பாரம்பரியமான செயல்பாடே

எதிரிகளை உருவாக்குவதும்

எதிரிகளை வளர்த்துவிடுவதும் தானே

 

அப்படித்தான்

ஒன்று, நூறு, ஆயிரமென

கொசுக்கள் பெருகிப் போனதற்கும்

நாமே காரணமாகிப் போனோம்.

 

மறுக்க முடியாத பெருமைகளையெல்லாம்

தன்னகத்தே வைத்திருந்தாலும் மனிதன்

கொசுக்களிடம் தோற்றுப் போனது உண்மைதானே.

 

சின்னஞ்சிறிய பூச்சியினமென்று

கொசுக்களைப் புறந்தள்ளிவிட முடியாது

அற்ப உயிரினமென்று, கொசுக்களை

கண்டுகொள்ளாமலும் இருக்க முடியாது

 

ஏனென்றால்

உலகமெங்கும் எளியவர்களுக்கு எதிராக

வலியவர்கள் நடத்தும் யுத்தங்களின் போது

கொத்துக் கொத்தாய் மனிதர்கள்

கொல்லப்படுகிறார்களே !

 

அது போல …

கல்லும், கம்பும் இல்லாமல்

வில்லும், வாளும் இல்லாமல்

ரசாயனக் குண்டுகள் இல்லாமல்

கொத்துக் கொத்தாய் மனிதர்களைக்

கொன்றுவிடும் ஆற்றல்

கொசுக்களுக்கு உண்டு.

 

அப்படிக் கொல்லப்பட்ட

மனிதர்களின் எண்ணிக்கையோ

எண்ணிலடங்காதது…

எண்ணிலடங்காதது…

 

அதிலும் முக்கியம்

அப்படி இருந்தவர்களில்

முக்கால்வாசிக்கும் மேலானோர்

ஏழை எளியவர்கள் மட்டுமே

 

கொசுக்கள் அதிகாரத்தின்

தூதுவர்கள்

கொசுக்கள் அதிகாரத்தின்

ஏவலாட்கள்

 

கொஞ்சம்

அஜாக்கிரதையாகத்தான் இருந்துவிட்டோம்

கொசுக்கள் விசயத்தில்

 

எமனின் வாகனம்

எருமை மட்டுமல்ல

கொசுக்களும் கூடத்தான்.

 

ஆனால்

கொசுக்களில் அமர்ந்து வரும் எமன்

ஏழைகளைத்தான் கொண்டு செல்வான்.

 

ஏனென்றால்

மாளிகைவாசிகளின்

குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள்

கொசுக்கள் நுழைவது கிடையாது

 

மாளிகைவாசிகளின் தெருக்களும் கூட

மாநகராட்சியால் கவனமாக

பராமரிக்கப்பட்டு

பாதுகாக்கப்படுகின்றன.

 

கொசுக்களின் இருப்பிடமேல்லாம்

பச்சைப்  பராரிகள் வாழ்கின்ற

சேரிகளிலும் …

இந்தியாவின்

இதயங்களிலும் தானே.

 

கொசுக்கள் ரத்தத்தை

உறிஞ்சும் போது

நோய்பரப்பும் உமிழ் நீரை

உள்ளே செலுத்துகிறதாம்.

 

உழைப்பை உறிஞ்சிவிட்டு

வறுமையை

வாழ்விற்குள் செலுத்தும்

முதலாளிகள் போல

 

உழைப்பால் சுரண்டப்படுபவனே

கொசுக்களாலும் உரிஞ்சப்படுகிறான்.

உழைப்பிலிருந்து அன்னியமாக்கப்படுபவனே

தன்னுடைய வாழ்விலிருந்தும்

கொசுக்களில் அன்னியமாக்கப்படுகிறான்.

 

கொசுக்களை

அழிக்க முடியாதா என்ன?

 

அழிக்க முடியும்..

அழிந்திருக்கலாம் – மாறாக

கொசுக்கள்

உற்பத்தி செய்யப்படுகின்றன

மனிதனுக்கு எதிராக

மனிதனாலேயே . . .

மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகின்றன

கொசுக்கள் பரப்பும் நோய்களுக்கு.

ஆனால்…

கொசுக்களைக் கொள்வதற்கு?

இருப்பதால் பயனேதும் இல்லையே!

ஒருவேளை கொசுக்கள்

பயமுறுத்தவும்

பணம் செய்யவும்

பயன்படுத்தப்படுகின்றனவோ?

 

இருந்தாலும் இருக்கலாம்

இந்த உலகத்தில்

மனித ரத்தம்

மனித வியர்வை

மனித உழைப்பு

அத்தனையும்… அத்தனையும்…

வெறும் பணத்திற்காகத்தானே

வருத்தப்படுகிறது

வஞ்சிக்கப்படுகிறது.

 

கொசுக்களும் கூட

மூலதனமாக இருக்கலாம்

 

ஏழை, எளியவர்களான

விவசாயிகளும்

தொழிலாளர்களும் – இங்கே

கவனிக்கப்படாத உபரிகள்தானே

 

அந்தோ…

இந்த உபரி உயிர்களல்லவா

மருந்துகளுக்காய் மடிந்தார்கள்

மருந்துகளில் மடிந்தார்கள்

கொசுக்களாலும் மடிந்தார்கள்

ஈழத்தில் மடிந்தவர்களைப்போல . . .

 

கொசுக்களை அழிக்கமுடியும்

கொசுக்களுக்கான அரசாங்கம் மாற்றப்பட்டால்

மனிதன் மனிதனாக மதிக்கப்பட்டால்

மனித இனத்தில் வர்க்கபேதம் ஒழிக்கப்பட்டால்

 

கொசுக்களில் என்ன

வர்க்கபேதம்

என்று கேட்கிறீர்களா?

 

வர்க்கபேதம் ஒழிக்கப்பட்டு

புதிய சமூகமைப்பு தோன்றினால்

வறுமை ஒழிந்து போகும்

ஏழ்மை ஒழிந்து போகும்

சேரிகள் ஒழிந்து போகும்

அசுத்தங்கள் ஒழிந்து போகும்

கொசுக்களும் ஒழிந்து போகும் ! ! !

To counteract this, give them other http://topspying.com/ things to do that can occupy a lot of time

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கொசுக்கள்- கவிதை”

அதிகம் படித்தது