மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கொடை வள்ளல்

ஆச்சாரி

Nov 1, 2011

வள்ளல் என்று சொல்கிறோம்! கொடை வள்ளல் என்றும் சொல்கிறோம். அள்ளித் தருபவன் வள்ளல் என்றால் கொடை வள்ளல் என்பவன் யார்?அதிகமாக அள்ளித் தருபவன் கொடை வள்ளலா? கொடை வள்ளல் என்ற சொல்லே தமிழுக்கும் தமிழர் வாழ்க்கை முறைக்கும் மட்டுமே உரிய சொல்லாகும்.

கடையேழு வள்ளல்களில் ஒருவன் பாரி. பாரி கானகத்தில் தேரில் சென்று கொண்டிருக்கிறான். வழியில் தேரை நிறுத்தி ஓடையில் தண்ணீர் அருகச்  செல்கிறான். திரும்பி வரும் பொழுது அவன் தேரில் முல்லைக்கொடி சிக்கிப்  படர்ந்துள்ளதைக்  கண்டு தேரை நகர்த்தினால் முல்லைக்  கொடி

அறுந்துவிடுமோ என்று எண்ணி அந்த முல்லைக்கே தன் தேரை படர கொடுத்துவிட்டு தன் அரண்மனையை நோக்கி நடக்கிறான். இந்த நிகழ்வுக்கு பின் ‘முல்லைக்கு தேர் கொடுத்த பாரி’ என்று மக்களால் போற்றப்படுகிறான்.

ஒரு சாதாரண கண்ணோட்டத்தில் வெறும் அறிவினைக்  கொண்டு ஆராயும் பொழுது இது ஒரு அறிவின்மை என்று சொல்லத் தோன்றும். கொடை வள்ளல் என்பவன் ஒரு கணம் கூட சிந்தனைக்கு உட்படுத்தாமல் உள்ளத்தால் மகிழ்ச்சியுடன் கொடுப்பவன். கொடை வள்ளல் என்பவன் சிந்தித்துக் கொடுப்பவனும் அல்ல கொடுத்த பின்  சிந்திப்பவனும் அல்ல. இந்த உயர்ந்த தன்மை என்பது ஒரு சிலருக்கே அமையும்.

இந்த கதையை இரு வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அந்த கானகத்தில் அவன் முல்லைக்காக ஒரு குச்சியையோ கம்பையோ தேடி எடுத்து வைத்திருக்க முடியும் ஆனால் அதை அவன் செய்யவில்லை. அவன் இங்கு சிறு தயக்கமும்மின்றி தன் தேரையே அளித்துவிட்டுச் செல்கிறான். அந்தக் கட்டத்தில் அவன் அந்த முல்லைக்கொடியை காப்பாற்றும் நோக்கம் மட்டுமே அவன் உள்ளத்தில் இருந்தது மற்ற சிந்தனைகள் அவனிடம் இல்லை.

கானகத்திலே இயற்கையோடு ஒன்றி வாழும் அவன் அந்த பூக்கள் செடிகள் எல்லாவற்றையும் தன் மக்களாகவே பார்க்கிறான். இது ஒரு தாவரத்தைகூட தன் இனமாக நினைத்து அதன் உயிரையும் மதித்த அவன் உயர்ந்த நோக்கம் மற்றும் அவன் வாழ்ந்த காலத்தில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையையே விளக்குகிறது.

இந்த இரண்டு கண்ணோட்டமமும் உயர்ந்த எண்ணங்களையே குறிக்கின்றன. கொடை வள்ளல் என்ற பட்டம் வெறும் செயலுக்கான பட்டம் அல்ல அது ஒரு செயல், உயர்ந்த மனநிலையில் எந்த ஒரு சிறு ஆராய்ச்சிக்கும் உட்படுத்தாமல் உள்ளத்தால் செய்யப்பட்டதாகும். இது அவன் தன்மைக்குக்  கொடுக்கப்பட்ட பட்டமாகும். பண்டைய தமிழர்கள் அறத்தை கூட அது செய்யப்பட்ட மனநிலையைக்  கொண்டு அறத்தில் சிறந்த அறம் போற்றி வாழ்வாங்கு வாழ்ந்தனர் என்பதற்கு நற்சான்றாகும்.

He was born on april 2, 1805 and died on august 4, definition of essay writing 1875…

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “கொடை வள்ளல்”
  1. praveen says:

    good

  2. kasi visvanathan says:

    சிந்தையும் செயலும் ஒன்றுபட்ட பாரிவள்ளலின் வாழ்வியலை, சங்க வாழ்வியலின் எதிரொலியை அழகுடன் வடித்த கட்டுரை ஆசிரியருக்கு நன்றி. சங்க இலக்கியத்தின் எளிய அறிமுகமாய் அமைந்துள்ளது.

அதிகம் படித்தது