மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கொளுத்தும் கோடையில் நம்மைக் குளிர்விக்கும் இன்பங்கள்

ஆச்சாரி

May 17, 2012

கோடையின் வெப்பம் ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே போகிறது. இயற்கையை யாரும் நொந்து கொள்ள வேண்டாம். எல்லாம் மனிதர்கள் செய்யும் பெருவிளையாடல்களால் வரும் விளைவு. சென்னை சாலைகளில் வாகனங்களின் வெப்ப மூச்சோடு சூரிய வெப்பமும் சேர்ந்து எல்லோரையும் பொசுக்கி எடுக்கிறது. சென்னையில் ஒரு போக்குவரத்து நிறுத்தத்தில் ஐந்து நிமிடம் காத்திருந்தால் உங்கள் உடலின் வியர்வை பெருமளவு வெளியேறிவிடும். உடனே உடல் சோர்வு வந்து மனம் அலுத்துப் போகிறது. இந்தக் கடுமையான கோடை வெயிலை சமாளிக்க சென்னை சாலைகளின் ஓரங்களில் ஆயிரக்கணக்கான கடைகள் குவிந்து கிடக்கின்றன. இளநீர், தர்பூசணி, கிர்னி பழம், பதநீர், பனை நுங்கு, வெள்ளரி பிஞ்சு, கரும்புச் சாறு, நீர்மோர், இப்படி குளிர்ச்சி தரும் பழ வகைகள் கொண்ட அங்காடிகளில் சிறிது நேரம் தஞ்சம் கொண்டு கோடை தாக்குதலில் இருந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றனர் சென்னை பெருநகர மக்கள்.

இந்தக் கோடைக்கால இயற்கை பானங்களின் நன்மைகள் பற்றி அறிய சென்னையின் சில இடங்களில் நாம் சாலையோர வியாபாரிகளிடம் பெற்ற தகவல்கள் உங்களுக்கு.

இளநீர்

இளநீர் மனித உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானதொரு இயற்கை உணவாகும். கோடைக்காலத்தில்  வெயிலின்  தாக்கத்தைத் தவிர்க்க இது மிகவும் விரும்பி அருந்தப்படுகிறது. இளம் தேங்காயில் உள்ள சுத்தமான  நீர் இளநீர். இது சிறிது பால் கலந்த  நீர்போன்ற வெண்மை நிறமுடையது.  தூய கலப்படமற்ற சத்துகள்  நிறைந்த இளநீர் தாகத்தைத் தீர்க்கும். இளநீர் இளமையைக் காக்கும் அரிய பானமாகும். உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால்தான் இளமையும் பொலிவும் உடலிலும் உள்ளத்திலும் பிறக்கும். இளநீர் அருந்தியதும் நமக்கு ஒருவித  உற்சாகம் பிறக்கிறது. காரணம் 100 கிராம் இளநீரில் 312 மில்லிகிராம் பொட்டாசியமும் 30 மில்லி கிராம் மக்னீசியமும் உள்ளன. இந்த இரு தாது உப்புகளும் உடனடியாக  எலும்புகளுக்கும் தசை களுக்கும் ஒருவிதப் புத்துணர்ச்சியையும் வலுவையும்  ஊட்டி விடு கின்றன. இதனால்தான் இளநீர் அருந்தியதும் நமக்குப் புதுத்தெம்பு கிடைக்கிறது. உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாதுஉப்புக்களைச்சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.

இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் இரத்த நாளங்களில் சூடு அண்டாதிருக்க    உறுதுணையாகிறது. மூல நோயாளிகள், நாட்பட்ட சீதபேதி, ,ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கின்றது. இளநீர் அதிக அளவில் பொள்ளாச்சி பகுதியில் இருந்தும் கன்னியாகுமரி, நாகர்கோயில் போன்ற இடங்களில் இருந்தும் சென்னைக்கு தருவிக்கப்பட்டு விற்கப்படுகிறது

பிஞ்சு வெள்ளரிக்காய்

இது பச்சையாக சாப்பிடுவதற்கு ஏற்றது. இதில் விதைகள் சிறிதாக இருக்கும் இதனால் சாப்பிடவதற்கு சுவையாகவும் இருக்கும். இதை சாப்பிடும்போது கொஞ்சம் உப்பு, மிளகாய்த்தூள், மிளகு தூள் கலந்து சாப்பிட்டால் இதன் சுவை கூடுதலாக இருக்கும்.. அப்படியே சாப்பிடுவதற்கு ஏற்றது இதுதான். வெள்ளரி வாங்கும் போது பிஞ்சு வெள்ளரியில் . விட்டமின் ஏ, பொட்டாசியம் அதிகம் உள்ளது

சிறுநீர் வராமல்  அவதிப்படுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக் காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும். வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும். உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்,

வெள்ளரி பிஞ்சு திருவண்ணாமலை, தருமபுரி, போன்ற வட மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படுகிறது.

தர்பூசணி

கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும்

பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.

மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் இதைத்  தயாரிக்கலாம். விதை நீக்கப்பட்ட, தர்பூசணித் துண்டுகளை, அரவையில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம். விருப்பமானால், சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.

வெப்பத்தை தணிக்க, இந்தப் பழத்தை எவ்வளவு வேணுமானாலும் சாப்பிடலாம்.

நீர்ச் சத்து மிகுந்த தர்பூசணிகள் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் விளைகின்றன.

பதநீர்

தென்னை, பனை மரங்களில்  சொட்டுச் சொட்டாக மண் பானையில் பால் இறங்கும். இதுதான் பதநீர். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம்.  பதநீர் விற்பனை செய்பவரிடம் இது பற்றி கேட்டபோது, பனை, தென்னை மரங்களின் கருத்துக்களில் இருந்து இறங்கும்  பாலில் சுண்ணாம்பு  சேர்த்தால் பதநீர்  சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டு விடுவார்கள். இதனால் மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இதை லிட்டர் 10 ரூபாய்க்கு வாங்கி, 20 ரூபாய் வரை விற்கிறேன். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர  பதநீரை மிஞ்சமுடியாது. இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன் என்பார்கள். பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் மரம் பனை மரம். என்றார்.

குளிர்ச்சி நிறைந்த நுங்கு

உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி.சி. சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது பனை நுங்கு. நுங்கின் தோலை நீக்கி விடாமல் சாப்பிட்டால் இன்னும் நல்லது. குழந்தைகள் தோலுடன் சாப்பிட்டால் அவர்களுக்கு செரிக்காது. அதனால் தோலை நீக்கிவிட்டு தரலாம். அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும். கோடையில் வேர்க்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும்.

சென்னையில் விற்கப்படும் பனை நுங்குகள் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம், உத்திரமேரூர் போன்ற இடங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.

கிருணிப் பழம்

இந்தப் பழங்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் இருந்துதான் அதிக அளவில் கொண்டுவரப்படுகிறது. அதிக சுவை மிகுந்த கிருணி பழங்கள் உடலுக்கு நல்ல  குளிர்ச்சி தருவதோடு செரிமானதுக்கும் நல்ல மருந்தாகத் திகழ்கிறது.

கரும்புச் சாறு

இது முழு குளிர்ச்சி தராவிட்டாலும் வயிற்றில் உள்ள அழுக்குகளைப் போக்கி நல்ல செரிமானத்துக்கு உதவுகிறது.

In addition to the primary objective of teaching students to think, the tutor must where can i buy an essay paper have a number of subsidiary objectives if the small group is to function

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கொளுத்தும் கோடையில் நம்மைக் குளிர்விக்கும் இன்பங்கள்”

அதிகம் படித்தது