மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கோடையில் குளிரூட்டும் காய்கறிகள்

ஆச்சாரி

Jun 1, 2012

சுரைக்காய்

இது குடுவை போன்ற அமைப்பில் வெளித்தோல் பச்சையும் உள்பகுதி வெள்ளையுமாக இருக்கும்.குளிர்ச்சி மிகுந்த பெரிய காய், நீர்ச்சத்து மிக அதிகம்.
உடல்சூடு, மலச்சிக்கல், வயிற்றுவலி, வயிற்றுப் புண் போன்றவைகளுக்கு குறைக்காய் சிறந்த மருந்து. உடல் குளிர்ச்சி தரும். மூல வியாதி விலகும். இரத்தம் சுத்தமடைந்து சிறுநீர் எரிச்சல் நீங்கும். உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இவைகளுக்கு அருமையான மருந்து. உடல் பருமன், அதிக கொழுப்பு இவைகளுக்கு சுரைக்காய் சாறு அருந்த வேண்டும்.

பரங்கிக்காய்

குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று சொல்கிறோம். பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு. குளிர்ச்சி சுபாவம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போகும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும்.. மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.

ஆனால் பரங்கிக்காயை பொறுத்தவரை வேண்டாத சில குணங்களும் உண்டு. அதாவது உடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது. இது செரிமானம் ஆவதற்கு வெகு நேரம் வரை பிடிக்கும். வாத குணம் உள்ளது. ஆனாலும் இத்தகைய விபரீத குணங்களை சரி செய்வதற்கு சுக்கும், வெந்நீரும் சாப்பிட்டால் போதும்.

பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப்படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும். மணற்பாங்கான இடங்களில் விளையும் பரங்கிக்காய் மிகவும் சுவையாக இருப்பதுடன் கெட்டியாகவும் இருக்கும். பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெரும். நல்ல சுவையுடனும் இருக்கும்.

சுண்டைக் காய்

உப்பு கலந்த புளித்த மோரில் ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.  சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.  சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

பீர்க்கங்காய்

வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொன்னால் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும்.
நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது. பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது.  நூறு கிராம் பீர்க்கங்காயில் கிடைக்கும் கலோரி 18தான். ஆனால் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் தக்க அளவில் உள்ளன. இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறியாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது.

முள்ளங்கி

முள்ளங்கி  உடலுக்கு நல்ல குளிர்ச்சியுண்டாக்கும். இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும்.  சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும்.
முள்ளங்கிச்சாறு காலை, மாலை அருந்தினால் – சிறுநீரகக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும்.

 

பாகற்காய்

பாகற்காய் என்றவுடனே பலருக்கும் நாவில் கசப்பு சுவை தான் ஊற்றெடுக்கும். ஆனால், அதில் பல மருத்துவக் குணங்கள் இருப்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.  பாகற்காயில் 2 வகைகள் உண்டு. பொடியாக இருப்பது மிதி பாகற்காய். நன்கு பெரிதாக நீளமாக இருப்பது கொம்பு பாகற்காய்.
நீரிழிவு, காய்ச்சல், இருமல், இரைப்பு, மூலம் மற்றும் வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களுக்கு பாகற்காய் அருமருந்து.  இதேபோல, ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விகிதத்தில் பாகற்காய் மருந்தாக விளங்குகிறது. பாகற்காய் இலையின் சாறை குடிக்க, மிக விரைவில் நோய்கள் குணமாகும். சர்க்கரை நோயாளிகள் எல்லோரும் எந்தத் தயக்கமும் இன்றி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறி பாகற்காய்தான்.

For an extensive list of transitions, see chapter the writing process how do do we have homework I begin

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கோடையில் குளிரூட்டும் காய்கறிகள்”

அதிகம் படித்தது